விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/டிசம்பர் 21, 2010
- முன்னாள் இசுரேலியப் பிரதமர் கோல்டா மேயர் (படம்) அந்நாட்டு அரசியலின் “இரும்புப் பெண்மணி” என்று அழைக்கப்பட்டார்.
- மாலைதீவுகளின் நாட்டுப்பண்ணுக்கு இசையமைத்துக் கொடுத்தவர் இலங்கையின் சிங்கள இசையமைப்பாளர் பத்மசிறீ டபிள்யூ. டி. அமரதேவ.
- தீவிரவாத எதிர்ப்பில் ஈடுபடும் ஐக்கிய இராச்சியத்தின் அதிரடிப் படை சிறப்பு வான்சேவை என்று அழைக்கப்படுகிறது.
- கர்ப்பமான பெண்களின் கருப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தும், பாதுகாப்பும் வழங்கும் திரவம் பனிக்குட நீர்.
- சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் அனல் தெறிக்கும் வசனங்களை எழுதியவர் சக்தி கிருஷ்ணசாமி.