விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/டிசம்பர் 5, 2012
- கடலை அசுவுணிகள் பச்சையவுருமணிகளைக் கொண்டிருப்பதால் சூரியனில் இருந்து நேரடியாகச் சக்தியை தன்வயப்படுத்துகின்றன.
- லேய்டின் கொள்கலன் (Leiden jar), எனும் நிலை மின்னை சேமித்துவைக்கும் உபகரணம் தனித்தனியே சேர்மனி அறிவியலாளரான ஈவாட் ஜோர்ச் வொன் கிளேஸ்டினால் ஒக்டோபர் 1744 இலும் டச்சு அறிவியலாளரான லேடினைச் சேர்ந்த பீட்டர் வான் மஸன்புரோக் என்பவரால் 1745–1746 காலப்பகுதியிலும் கண்டறியப்பட்டது.
- குமார் மகாதேவா என்பவர் காக்னிசன்ட் தொழில்நுட்ப தீர்வகத்தை தொடங்கிய ஈழத்தமிழர் ஆவார்.
- ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் தமிழ் மருத்துவ சுவடித் தொகுப்பே ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் முன்னெடுத்த உலகின் நினைவகம் திட்டத்திற்கு இந்தியாவில் இருந்து முதலாவதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொகுதி.
- கிளீசு 581 ஜி புவியை அதிக அளவில் ஒத்ததும், உயிரினம் வாழக்கூடிய நிலையில் இருப்பதுமான ஒரு புறக்கோள் ஆகும்