விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/படம் சேர்ப்பது எப்படி?

படங்கள் சேர்ப்பது எப்படி?

தொகு

மகிழ்நன், நீங்கள் விக்கிப்பீடியா:உதவி என்னும் பக்கத்தைப் பார்த்தால் அதில் ஒவ்வொன்றையும் எப்படிச் செய்வது என்று காணலாம். படத்தைச் சேர்க்க மூன்று வழிகள் உள்ளன. (1) ஏற்கனவே காமன்சு (Wikipedia Commons) என்னும் பொதுக்கிடங்கில் இருக்கும் ஒரு படமாக இருப்பின், அப்படத்தின் பெயரை [[படிமம்:Figurename.jpg|thumb|right|படத்தைப் பற்றிய விளக்கம்]] என்று இட்டால் படம் பதிவாகும். (2) பிற விக்கிகளில் உள்ள படம் ஒன்று ஆனால் அது காமன்சு என்னும் பொதுவில் இல்லை என்றால்,, முதலில் உங்கள் கணினியில் அப்படத்தைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள். பிறகு தமிழ் விக்கியில் இடப்பட்டியில் உள்ள "கோப்பைப் பதிவேற்று" என்னும் சுட்டியைச் சொடுக்கிப் பதிவேற்றுங்கள். (3) உங்கள் சொந்தப்படமாக உங்கள் கணினியில் இருந்தால் (2) இல் கூறியவாறு பதிவேற்றுங்கள் ஆனால் தக்க உரிமத்துடன் பதிவேற்ற வேண்டும். மேலும் விளக்கம் வேண்டும் எனில் தயங்காது கேளுங்கள். --செல்வா 17:54, 25 ஜூலை 2009 (UTC)

இதையும் பாருங்கள் மகிழ்நன், விக்கிப்பீடியா:Picture_tutorial. இந்த இணைப்பு உங்களை படங்கள் சேர்பதற்கான உதவி பக்கத்திற்கு கூட்டிச்செல்லும். இந்தப் பக்கம் இன்னும் தமிழ் படுத்தப்படவில்லை:(. இந்த யூடுயுப் இணைப்பும் (http://www.youtube.com/watch?v=3XYWrvl3OSk) உங்களுக்கு உதவும். மகிழ்நன் உஙகளின் கட்டுரைகளில் மேற்கோள்கள் கீழே கொடுக்கப்பட்டு இருந்தாலும் அதற்க்கான இணைப்பு கட்டுரையில் கொடுக்கபடவில்லை. கட்டுரைகளில் எண்கள் மற்றும் ஒரு குறிப்பிடதக்க தரவுகளுக்கு சான்றுகள் கொடுப்பது நல்லது. அது கட்டுரையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும். இச்செயல் ஆய்வுக் கட்டுரைகளில் மேற்கோள் கொடுப்பது போன்றதாகும்.இதை கீழ்கண்டவாறு செய்யலாம். எடுத்துக்காட்டாக செமினிவிரிடீ (geminiviridae) என்பவைகள் பயிர்களை தாக்கும், ஓரிழை கொண்ட வட்ட வடிவிலான தீ நுண்மம்] ஆகும். இவைகள் தோரயமாக 2.6 kb- 2.8 kp வரை டி.என்.ஏ வரிசைகள் கொண்டவை என்ற வரிக்கு மேற்க்கோள் கொடுக்க விரும்பினால் அந்த வரி முடிந்தபின் "< ref >" (எழுத்துக்களுக்கு இடையே இடைவெளி இல்லாமல் எழுதவும்) என்று எழுதி பின் அந்த மேற்கோளை இங்கே ஒட்டவும், பிறகு மீண்டும் "< /ref >" (எழுத்துக்களுக்கு இடையே இடைவெளி இல்லாமல் எழுதவும்)என்று எழுதி முடிக்கவும். அனைத்து இடத்திலும் இதே போல் மேற்கோள் கொடுத்துவிட்டு இறுதியாக கட்டுரையின் முடிவில் மேற்கோள் என்று தலைப்பு கொடுத்துவிட்டு "< references/ >" (எழுத்துக்களுக்கு இடையே இடைவெளி இல்லாமல் எழுதவும்) என்று இட்டால் அனைத்து மேற்கோள்களும் வரிசைப்படி அதுவாகவே வந்துவிடும். மேலும் விவரத்திற்கு ஒரு மேற்கோள்கள் சுட்டியுள்ள கட்டுரையை காண்க இந்திய_காண்டாமிருகம். மேலும் விவரங்கள் வேண்டுமெனில் என்னை ஸ்கையிலும் தொடர்பு கொள்ளலாம் (எனது ஸ்கைப்பு பயனர் பெயர் karthick.bala)--கார்த்திக் 20:29, 25 ஜூலை 2009 (UTC)

வணக்கம் நான் எழுதிய கட்டுரைகளுக்கு படங்களை சேர்க்க உள்ளேன் இடப்பக்கத்தில் உள்ள கோப்பை பதிவேற்று என்ப தை அழுத்த சொல்லி உள்ளீர்கள் அப்படி ஒன்று இல்லைழே புரியவில்லை சிவ/சந்திரபாலன் --Siva-sandrabalan (பேச்சு) 03:32, 16 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

வணக்கம் Siva-sandrabalan! இடப்பக்கத்தில் உள்ள கருவிப்பெட்டி என்பதை திறந்து பார்க்கையில் 'கோப்பைப் பதிவேற்று' என்பது வரும். அதாவது கருவிப்பெட்டி என்பதற்கு அருகிலுள்ள அம்புக்குறியை அழுத்துகையில், கீழே அதிலுள்ள வெவ்வேறு விடயங்கள் பட்டியலிடப்படும். அதில் 'கோப்பைப் பதிவேற்று' என்பதும் உள்ளது. அதனைத் தெரிவு செய்யுங்கள். நன்றி. உங்கள் பயனர் பக்கத்தில் உங்களைப்பற்றியும் சிறிது சொல்லுங்களேன். அத்துடன் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள். --கலை (பேச்சு) 09:49, 16 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஒரு படத்தை கட்டுரையில் இணைத்தவுடன், அதை எப்படி பெரிய அளவாக மாற்ற வேண்டும்

தொகு

--Munaivar. MakizNan 00:00, 2 ஆகஸ்ட் 2009 (UTC)

கீழே இரண்டு அளவில் படம் உள்ளதைப் பாருங்கள். முதல் படத்துக்கு "80px" என்று அளவு இட்டேன், இரண்டாவது படத்துக்கு 180px என்று அளவு இட்டேன். இவற்றின் விக்கிஆணை:
[[படிமம்:Four-striped Grass Mouse.JPG|80px]][[படிமம்:Four-striped Grass Mouse.JPG|180px]]
  x --செல்வா 00:23, 2 ஆகஸ்ட் 2009 (UTC)

பிறமொழி விக்கிப்பீடியா படங்களை தமிழ் விக்கிக் கட்டுரைகளில் இணைத்தல்

தொகு

ஒரு பிறமொழி விக்கிபீடியா கட்டுரையை தமிழாக்கம் செய்யும்போது, அங்குள்ள படங்களை தமிழ் விக்கியில் இணைப்பது எப்படி? சில படங்கள், அங்குள்ள அதே வார்ப்புருவை வெட்டி ஒட்டும்போது, இங்கேயும் வருகின்றன. சில வார்ப்புருக்கள் அப்படி படங்களைத் தரவில்லை. அவற்றை எப்படி இங்கே பதிவு செய்யலாம் எனக் கூறுவீர்களா? --கலை 11:32, 1 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

அங்குள்ள படிமங்கள் "பொதுவில்", அதாவது விக்கிமீடியா காமன்சில் இருந்தால் அப்படிமங்களை இங்கு நேரடியாக இணைக்கலாம். பொதுவில் இல்லாமல் ஆங்கில விக்கியில் மட்டும் தரவேற்றப்பட்டிருந்தால் அப்படிமம் தமிழ் விக்கியில் தெரியாது. அப்படியான படிமங்களை நீங்கள் உங்கள் கணினிக்குத் தரவிறக்கி மீண்டும் தமிழ் விக்கியில் தரவேற்ற வேண்டும். அப்படி ஏற்றும்போது, தயவு செய்து அப்படிமங்களின் காப்புரிமை பற்றிய விவரங்களையும் தாருங்கள்.--Kanags \பேச்சு 11:48, 1 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]
நன்றி Kanags.
விக்கிமீடியா காமன்சில் எவரும் புதிய படிமங்களைப் பதிவேற்றலாம் எனப் புரிந்து கொள்கின்றேன். அப்படியாயின், அங்கே எப்படி படிமங்களை இணைப்பது? இணைத்த பின்னர், அதை எப்படி தமிழ்விக்கியில் இணைப்பது? உதாரணத்துக்கு விக்கியில் அல்லாமல் வேறு எங்காவது பெறப்பட்ட படத்தை, அல்லது நம்மிடமுள்ள ஒரு படத்தை விக்கிமீடியா காமன்சில் தரவேற்றம் செய்வதாயின், எப்படி தரவேற்றம் செய்வது?
பிறமொழி விக்கியிலிருந்தோ, அல்லது வேறு எங்கேனுமிருந்தோ எனது கணினிக்கு தரவிறக்கம் செய்யும் படங்களிற்குரிய காப்புரிமைபற்றிய விபரங்களை எங்கே, எப்படி பெற்று, அந்த விபரங்களை எப்படி தமிழ்விக்கியில் தரவேற்றம் செய்யும்போது குறிப்பிடுவது.
அதிகமாக கேட்கின்றேனா தெரியவில்லை :). உதவிப் பக்கத்திலிருந்து சரியாக இந்த விடயங்களை புரிந்துகொள்வது என் சிற்றறிவுக்கு எட்டவில்லை :). அதுதான் இங்கே கேட்கின்றேன். --கலை 12:25, 1 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]
உங்கள் வினாக்களுக்கான விடைகளை தர முயல்கிறேன்.எனது பட்டறிவும் குறைவு என்றபோதிலும் :)
  1. விக்கிப்பீடியா காமன்ஸ் அல்லது நடுவம் : பதிவேற்றுவது:நடுவம் : முதற்தேவைகள் என்ற பக்கத்தில், இது குறித்து நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.
  • அதன் படி , பயனர் கணக்கு வேண்டும்.எனவே, புகுபதிகைச் செய்யவும்.
  • பதிவேற்ற கோப்புக்கு, சிறந்த முறையில் பெயரிடுவது மிகமிக அத்தியாவசியமானது. அப்படி பெயரிட்டால் மட்டுமே, பிறர் உங்கள் கோப்பினை சுலபமாகக் கண்டறிய முடியும்.
  • புகுபதிகை செய்தவுடன், நேரிடையாக பதிவேற்றப்படிவத்தின் மூலம் பதிவேற்றம் செய்யலாம்
  1. விக்கிப்பீடியா காப்புரிமை வார்ப்புருக்கள் பற்றி அறிந்து கொள்ளவும்.
  2. ஒவ்வொரு படிம கோப்புடனும் ஓர் விவரக்கோப்பும் இணைந்திருக்கும்--நீங்கள் விக்கிப்பீடியாவின் படிமத்தில் வலது சொடுக்கின் மூலம் சேமிக்காமல், இரட்டை சொடுக்கு செய்தீர்களென்றால் இவ்வாறான படிமக்கோப்பும் விவரக்கோப்பும் இணைந்த பக்கத்திற்கு செல்வீர்கள்.அங்கே படங்களுக்குரிய காப்புரிமை விவரங்களைப் பெறலாம். அதே பாணியில் நீங்கள் தரவேற்றம் செய்யும் படங்களுக்கும் விவரக்கோப்பை இணைக்கவேண்டும்.
  3. நடுவத்தில் தரவேற்றிய படிமங்கள் தமிழ் உட்பட அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களிலும் கோப்பின் பெயரை இட்டால் காட்டப்படும். தமிழ் விக்கியில் தரவேற்றிய படங்கள் பிற மொழிகளில் தெரியாது.அதேபோல ஆங்கிலவிக்கியின் படங்கள்,காமன்ஸில் இல்லையென்றால் மற்ற மொழிகளில் தெரியாது.

கோர்வையாகவும் உங்கள் ஐயங்களை தீர்க்குமாறும் எழுதியுள்ளேனா என தெரியவில்லை.ஐயமிருப்பின் தயங்காமல் கேளுங்கள்..--மணியன் 09:25, 2 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

படிமங்கள் தரவேற்றம்

நன்றி மணியன். நான் மெதுவாக நீங்கள் கூறியவற்றை செய்து பார்க்கிறேன். அனேகமாக புரியும் என்றே நினைக்கிறேன் :). --கலை 10:20, 2 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

படிமங்கள் தரவேற்றம் - உதவிப்பக்கம்

தொகு

விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்