விக்கிப்பீடியா:சூலை 2010 செம்மொழி மாநாட்டில் தமிழ் விக்கிப்பீடியா

மேலும் விபரங்களுக்கு: வலைவாசல்:கட்டுரைப்போட்டி

விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டி முடிவு அறிவிக்கப்பட்டது

தொகு

அனைவருக்கும் வணக்கம்!

 
  • இன்று ( 18-6-10) மதியம் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பள்ளி, கல்லூரி மாணவருக்கான போட்டி முடிவுகளை வெளியிட்ட நிகழ்வில் கலந்து கொண்டோம். கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டியில் முதல் பரிசு வென்றவர்களின் பெயர்களைப் படித்தார் அமைச்சர். தகவல் தொழில்நுட்பவியல் துறைச் செயலாளர் தாவிதார், அண்டோ பீட்டர், வெங்கடரங்கன், மதன் குமார் (அண்ணா பல்கலைக்கழகம்), யுவராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். (யுவராசுக்கு வலைத்தள ஆக்கத்திற்காக சிறப்புப்பரிசு அளிக்கப்படுகிறது)
  • பத்திரிகையாளர் சந்திப்பிற்குப் பின்னர் நடைபெற்ற சில நிமிடக் கலந்துரையாடலில், “விக்கிப்பீடியா குழு வருகின்றீர்கள் அல்லவா?” என்று வினவினார் அமைச்சர்; த. தொ.நு. செயலர் தாவிதாரிடம் “அழைப்பிதழ் இருந்தால் கொடுங்கள், இங்கேயே விக்கியர்களுக்கு அளித்து விடலாம்” என்றார் (அவை ஏற்கனவே கோவைக்கு அனுப்பப்பட்டு விட்டதால் அழைப்பிதழைப் பெற முடியவில்லை); “அங்கே சந்திக்கலாம்” என்று கூறிவிட்டுச் சென்றார்.
  • பின்னர், நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்வதாகக் கூறினார் செயலாளர்.
  • மேலும், விக்சனரியைப் பற்றியும் செயலாளரின் காதில் போட்டு வைத்தோம். விக்கிப்பீடியா போட்டியை தொடர்ந்து நடத்தத் திட்டம் உள்ளது என்று கூறினார்.--பரிதிமதி 17:00, 18 ஜூன் 2010 (UTC)
நல்லது பரிதிமதி, தமிழ் விக்கிப்பீடியாவின் மக்கள் தொடர்புப் பணி ஒன்று வெற்றியாக நிறைவேறி உள்ளது. இதில் பங்கு கொண்ட எல்லோருக்கும் பாராட்டுக்கள்--மயூரநாதன் 19:01, 18 ஜூன் 2010 (UTC)

வாழ்த்துகள் பரிதிமதி --குறும்பன் 20:39, 18 ஜூன் 2010 (UTC)

தமிழ் விக்கி சார்பில் நிகழ்வில் கலந்து கொண்டதற்கு நன்றி, பரிதிமதி. --கலை 23:23, 18 ஜூன் 2010 (UTC)

உலகத் தமிழ் இணைய மாநாட்டில் தமிழ் விக்கிப்பீடியா

தொகு

கோயம்புத்தூரில் வருகிற சூன் 23 முதல் சூன் 27 வரை நடைபெறவுள்ள உலகத் தமிழ் இணைய மாநாட்டிற்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் விக்கிப்பீடியா குறித்த எனது பங்களிப்புகள் இரண்டு நாட்கள் இடம் பெற்றுள்ளன.

  • 24-06-2010 அன்று உமர் தம்பி அரங்கில் நடைபெற உள்ள தமிழ் மின் தரவு மற்றும் மின்னகராதிகள் எனும் தலைப்பிலான மூன்றாவது அமர்வில் மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை "தமிழ் விக்கிப்பீடியா எனும் தமிழ்க் கலைக்களஞ்சியம்" என்கிற தலைப்பில் எனது கட்டுரை வாசிக்கப்படவுள்ளது.
  • 26-06-2010 அன்று யாழன் சண்முகலிங்கம் அரங்கில் நடைபெற உள்ள கணினி மொழியியல் எனும் தலைப்பிலான நான்காவது அமர்வில் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை "வலைப்பூக்கள், விக்கிப்பீடியா" கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றும் இடம் பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் நிகழ்விற்கு பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் இராதா செல்லப்பன் தலைமை வகிக்கிறார். கிழக்குப் பதிப்பகம், பத்ரி சேஷாத்ரி முன்னிலை வகிக்கிறார். இந்நிகழ்வில் புதுச்சேரி இளங்கோவன், அ.ரவிசங்கர் (கோயம்புத்தூர்), காசி ஆறுமுகம் ஆகியோருடன் நானும் (தேனி எம்.சுப்பிரமணி) கலந்து கொள்ள உள்ளேன். --Theni.M.Subramani 18:25, 18 ஜூன் 2010 (UTC)
மகிழ்ச்சி சுப்பிரமணி, உங்கள் முயற்சி தமிழ் விக்கிப்பீடியாவை உயர்ந்த மட்டத்தில் அறிமுகப்படுத்த உதவும். உங்கள் பங்களிப்புகள் வெற்றிகரமாக நிறைவேற வாழ்த்துக்கள். ---மயூரநாதன் 19:11, 18 ஜூன் 2010 (UTC)

வாழ்த்துகள் தேனி சுப்பரமணி --குறும்பன் 20:39, 18 ஜூன் 2010 (UTC)

கட்டுரைப் போட்டி முடிவுகள்

தொகு

  வணக்கம். நடந்து முடிந்த கட்டுரைப் போட்டி முடிவுகளை இணைத்துள்ளேன். பரிசு பெற்றவர்களுக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவிப்போம். மதிப்பீட்டுப் பணியில் திருச்சி பெரியண்ணன் மிகவும் உதவினார். குறும்பன், சிறீதரன், மயூரநாதன், அராப்பத், இபாயத்துல்லா, சுந்தர், இரவி, பரிதிமதி, நற்கீரன், செல்வா உள்ளிட்ட பலரும் வெளியாள் நடுவர்களும் அரும்பணியாற்றினார்கள். நான் தற்போது வெளியூர் பயண ஏற்பாடுகளில் இருப்பதால் விரிவாக எழுத இயலவில்லை. பிறகு, இப்போட்டிக்குப் பின்பற்றிய வழிமுறைகள் குறித்து ஆவணப்படுத்த வேண்டும். --கலை 23:21, 18 ஜூன் 2010 (UTC)


மிகுந்த பணிச்சுமைக்கு மத்தியில் இந்த போட்டி மதிப்பீட்டை ஒருங்கிணைத்த கலைக்கு நன்றிகள். அடுத்து வரும் போட்டிகளில் இதை ஒரு இருவரில் சுமத்தாமால் செய்ய வேண்டும். --Natkeeran 02:10, 19 ஜூன் 2010 (UTC)

விக்கிப் பயனர்களுக்கும் நடுவர்களுக்கும், அரசினருக்கும் நன்றியும் பாராட்டுகளும்

தொகு

இரவுபகல் எனப் பாராது அயராது உழைத்து, போட்டிக்கான ஒருங்கிணைப்பு வேலைகளை மிகச் சிறப்பாக செய்த கலையரசி, இரவி ஆகிய இருவருக்கும் அவர்களுக்கு உற்ற துணையாக நின்று மிக உதவிய பெரியண்ணன், குறும்பன், சிறீதரன், மயூரநாதன், அராபத், இபயத்துல்லா, சுந்தர், பரிதிமதி, நற்கீரன் ஆகியோருக்கும், குறுகிய காலத்தில் மதிப்பீடு செய்து பேருதவி புரிந்த வெளி நடுவர்களுக்கும் தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பிலும் என் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றி, உளமார்ந்த பாராட்டுகள். விக்கிப்பீடியாவுக்கு எல்லா வகைகளிலும் உதவி செய்து ஊக்கம் அளித்த தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மாண்புமிகு திருவாட்டி பூங்கோதை ஆலடி அருணா அவர்களுக்கும், தகவல் தொழில்நுட்பவியல் துறைச் செயலாளர் பி.டபிள்யூ.சி டேவிடார் இ.ஆ.ப அவர்களுக்கும், முனைவர் அருள் நடராசன் அவர்களுக்கும், திரு மதன் குமார் (அண்ணா பல்கலைக்கழகம்), போட்டிக்கட்டுரைகளைப் பதிவு செய்து வலைத்தளத்தைப் பராமரித்த திரு. யுவராசுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுக. --செல்வா 05:34, 19 ஜூன் 2010 (UTC

  • செல்வா, கட்டுரைப் போட்டி சிறப்பாக நடந்து நிறைவேறியது குறித்து மிக்க மகிழ்ச்சி. விக்கியரும் பிறரும் கூட்டாக இணைந்து செயல்பட்டது போற்றற்குரியது. நூற்றுக் கணக்கான கட்டுரைகள் பெறப்பட்டதாக அறிகிறேன். அவற்றைத் தமிழ் விக்கியில் ஏற்றுவது குறித்து வழிமுறைகள் உளவா? கட்டுரைகளை மதிப்பீடு செய்தவர் தாமே தாம் கண்ட குறைகளைச் சீர்செய்து, நடைக்கும் பொருளுக்கும் மெருகூட்டி, விக்கியில் ஏற்ற வழிவகுக்கலாமா? உரிமை மீறல் நிகழும் கெடுபாடு (risk) உண்டா? வணக்கம்!--George46 13:13, 19 ஜூன் 2010 (UTC)
பவுல், நீங்கள் அடுத்த கட்டத்தைப் பற்றி எண்ணத் தொடங்கியது நல்லது. என்னுடைய பரிந்துரை பின்வருமாறு:
  1. கட்டுரைகளை அனுப்பிய வடிவலேயே ஒருங்குறி மாற்றம் மட்டும் செய்து கோப்புகளில் இடுதல்
  2. கட்டுரைப்போட்டிக்கென தனிக்கணக்கு ஒன்றைத் தொடங்குதல்
  3. அதன்வழியாக தானியங்கி துணையுடன் கட்டுரைகளை உள்ளபடிய பதிவேற்றுதல். கூடவே ஆக்குனர் பெயரைப் பேச்சுப் பக்கத்தில் சிறப்பு வார்ப்புருவின் துணையுடன் இடுதல்.
  4. மதிப்பீட்டாளர்களும் வேறு எவரும் வழமை போலவே கட்டுரைகளைத் திருத்துதல். கட்டுரை ஆக்குனரே விக்கியில் சேர்ந்திருந்தாலும் அவரும் அந்தத் தொடக்கநிலையிலிருந்தே வளர்த்தெடுத்தல் நல்லது.
இவற்றில் முதல் பணி மதிப்பீட்டின் போது ஓரளவு நிறைவாகி விட்டது. இருந்தாலும் pdf கோப்புகளாக இல்லாமல் வெறும் உரைக் கோப்புகளாக, பயனர் பெயருடன் சேர்த்துப் பதியும் பொறுப்பை யாராவது எடுத்துக் கொண்டால் நல்லது. தானியங்கிப் பணி எளிது. நானோ வேறு எவருமோ மேற்கொள்ள முடியும். ஏற்கனவே இத்திட்டத்தில் பங்களிக்க இயலாத சூழலில் இருந்த விக்கியர் எவரேனும் இப்பொறுப்பை (அதாவது முதல் பணியை) எடுத்துச் செய்தால் நன்றாக இருக்கும். விக்கித் தேரின் ஒரு சிறப்பியல்பு, ஊரார் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடித் தேரை இழுக்க வேண்டியதில்லை. :) -- சுந்தர் \பேச்சு 13:42, 19 ஜூன் 2010 (UTC)

பவுல் வறுவேல் (George46) ஐயா, உரிமை மீறல் ஏதும் இராது, ஏனெனில், விக்கிப்பீடியாவுக்கான கிரியேட்டிவ் காமன்சு பகிர்வுரிமத்தின் கீழேயே பதிவாகும்; நாம் அனைவரும் கட்டாயம் கூட்டாக திருத்தியும், மேலும் சேர்த்து வளர்த்தெடுக்கவும் இயலும். மேலே சுந்தர் சொன்னது யாவும் செய்ய வேண்டியனவே. சுந்தரின் விக்கித்தேர் குறிப்பு (ஊரார் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடித் தேரை இழுக்க வேண்டியதில்லை) களிப்பூட்டிய சிறப்பான ஓர் உண்மை! வறுவேல், நீங்கள் வெளி நடுவராக இருந்து உதவியதும் அல்லாமல், மிகச் சிறந்த முறையில் வழிகாட்டுமுகமாக நேர்த்தியாக விக்கியில் ஆக்கங்கள் செய்துவருவது காண மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.--செல்வா 16:33, 19 ஜூன் 2010 (UTC)

பயிற்சி நிகழ்படங்கள்

தொகு

வணக்கம். சூன் 23 - 27 தமிழ் இணைய மாநாட்டுக் கண்காட்சியில் விக்கிப்பீடியா, விக்சனரி பற்றி விளக்குவதற்காக கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பயன்படுத்தத் தக்க வகையில் பயிற்சி நிகழ்படங்கள், powerpoint கோப்புகள் தேவை. நேர நெருக்கடியாக இருப்பதால் யாராவது இவற்றைத் தயாரித்து அளித்தால் உதவும். எடுத்துக்காட்டுக்கு, http://ravidreams.net/tamil-wikipedia-intro-flash.zip . camtasia studio மென்பொருள் கொண்டு இதனைச் செய்யலாம். கடவுச் சொல் விவரம் தேவைப்பட்டால் தனிமடலில் தொடர்பு கொள்ளவும். நன்றி--ரவி 14:43, 21 ஜூன் 2010 (UTC)


தமிழ் இணையப் பயிலரங்கு

தொகு

தமிழ் இணையப் பயிலரங்கு - http://tamil-internet-workshop.blogspot.com/--ரவி 20:35, 25 ஜூன் 2010 (UTC)

TVU Donated Dictionary to Wiki

தொகு

In the Tamil Internet conference validictory function, IT Minister Poongathai Aladi aruna handed over Tamil Virtual University's Kalaichol agarathi CD to Tamil Wikipedia teams for Tamil Wiktionary (http://ta.wiktionary.org/). IAS officers Davidar, Soman Babu(Elcot), Prof Anandakrishnan and Infitt Chair, ED were present. Initially they called for Prof Selva, he was not present so me and Mauran Received on behalf of Tamil Wikipedia. I thanked Prof. Nakeeran on behalf of Wikipedia. He told he will give another 6 chapters too in future. This is for your kind info - மாஹிர் 10:18, 27 ஜூன் 2010 (UTC)

அந்தச் செய்திக்கு நன்றிகள் மாகிர். மாநாட்டில் தமிழ் விக்கி சார்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள். மயூரன் இலங்கையில் இருந்து வந்திருந்தாரா?--Kanags \உரையாடுக 11:02, 27 ஜூன் 2010 (UTC)

செய்திக்கு நன்றி, மாகிர். இது குறித்து முன்பே அறிந்திருந்தால் அனைவரும் அங்கு இருந்திருக்கலாம். தமிழ் இணையப் பயிலரங்கு களைப்பு காரணமாக பலரும் இன்று அரங்குக்கு வராமல் இருந்து விட்டோம். நீங்கள் இருவரும் இணைந்து பெற்றுக் கொண்டது மகிழ்ச்சி. (மு. மயூரன் இலங்கையில் இருந்து வந்திருந்தார்)

மற்ற விவரங்கள்

இது வரை நான்கு பேருக்கு மேல் தமிழ் விக்கிப்பீடியர்கள் ஒரே இடத்தில் கூடியது இல்லை :) இந்த முறை மாகிர், மு. மயூரன், செல்வா, சுந்தர், த. உழவன், அருநாடன், பரிதிமதி, பழ. கந்தசாமி, சோடா பாட்டில், சிவக்குமார், நான், தேனி எம். சுப்பிரமணி, பாலாசி கணேசன் ஆகியோர் கண்டு மகிழ்ந்தோம்.கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 25 தன்னார்வலர்கள் முன்னின்று இரண்டரை நாட்கள் நடத்திய தமிழ் இணையப் பயிலரங்கு மிகுந்த பயன் தந்தது. இதில் கணினியில் தமிழ்99 விசைப்பலகை வழி தமிழ்த் தட்டச்சு, செல்பேசியில் தமிழ் பயன்பாடு, விக்கித்திட்டங்கள், வலைப்பதிவுகள், கட்டற்ற மென்பொருள்கள், உபுண்டு பற்றிச் சொல்லிக் கொடுத்தோம். ஆங்கில விக்கிப்பீடியா பயன்படுத்தும் பலருக்குக் கூட தமிழ் விக்கிப்பீடியா என்று ஒன்று இருப்பது தெரியாமல் இருந்தது. ஆர்வத்துடன் தமிழ் விக்கிப்பீடியா பற்றி கேட்டுக் கொண்டார்கள். தமிழ் இணையப் பயிலரங்கு பற்றி இந்து நாளிதழில் வந்த செய்தியைக் காணலாம்

இணைய மாநாட்டில் வலைப்பதிவுகள், விக்கிப்பீடியா பற்றிய கலந்துரையாடல் ஒன்றும் நடந்தது. இதில் தேனி எம். சுப்பிரமணி, சுந்தர், நான் கலந்து கொண்டோம்.

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டியில் பரிசு பெற ஆறு பேர் வந்திருந்தார்கள். அவர்களிடம் ஒரு நிகழ்பட உரையாடலும் நிகழ்த்தினோம்.

மிகுந்த களைப்பாக இருப்பதால் பிற விவரங்கள், படங்களைப் பிறகு தரவேற்றுகிறேன். --ரவி 11:16, 27 ஜூன் 2010 (UTC)

தமிழ் இணைய மாநாட்டில் விக்கிப்பீடியா நிகழ்வுகள்

தொகு

கட்டுரை வாசிப்பு

 
தேனி.எம்.சுப்பிரமணி கட்டுரை வாசித்த போது எடுத்த படம்

தமிழ் இணைய மாநாட்டில் 24-06-2010 அன்று உமர்தம்பி அரங்கில் மூன்றாவது அமர்வில் நடைபெற்ற தமிழ் மி்ன்தரவு மற்றும் மின்னகராதிகள் எனும் தலைப்பிலான ஆய்வரங்கில் நான் தமிழ் விக்கிப்பீடியா எனும் தமிழ்க் கலைக்களஞ்சியம் என்கிற தலைப்பில் கட்டுரை வாசித்தேன். முடிவில் தமிழறிஞர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள் மற்றும் பலரும் தமிழ் விக்கிப்பீடியாவிற்குப் பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இந்நிகழ்விற்கு தலைமை வகித்த மணி எம். மணிவண்ணனும் இதை ஆமோதித்து தமிழறிஞர்கள் மட்டுமில்லாது தமிழ் தெரிந்த அனைவரும் குறிப்பாக ஆங்கில விக்கிப்பீடியாவில் பங்கேற்கும் பலரும் தமிழ் விக்கிப்பீடியாவிலும் பங்கேற்று தமிழை முன்னிலைப்படுத்த முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.--Theni.M.Subramani 01:14, 28 ஜூன் 2010 (UTC)

ஒளிப்படக் காட்சிகள்

தமிழ் இணைய மாநாட்டில் தமிழ் விக்கிப்பீடியா எனும் தமிழ்க் கலைக்களஞ்சியம் என்கிற தலைப்பில் தேனி.எம்.சுப்பிரமணி கட்டுரை வாசித்த நிகழ்வுகள் ஐந்து பகுதிகளாகக் கீழ்காணும் இணைப்புகளில் ஒளிப்படங்களாக உள்ளன.

பகுதி ஒன்று

பகுதி இரண்டு

பகுதி மூன்று

பகுதி நான்கு

பகுதி ஐந்து

--தேனி.எம்.சுப்பிரமணி. 16:02, 3 ஜூலை 2010 (UTC)

கலந்துரையாடல்

 
வலைப்பூக்கள், விக்கிப்பீடியா குறித்த கலந்துரையாடலில் முனைவர். மு. இளங்கோவன், பத்ரி சேஷாத்ரி, அ.ரவிசங்கர், தேனி. எம்.சுப்பிரமணி

தமிழ் இணைய மாநாட்டில் 26-06-2010 அன்று யாழன் சண்முகலிங்கம் அரங்கில் "கணினி மொழியியல்" எனும் தலைப்பிலான நான்காவது அமர்வில் சென்னை, கிழக்குப் பதிப்பகம் உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி முன்னிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் மு.இளங்கோவன், கோயம்புத்தூரைச் சேர்ந்த அ. ரவிசங்கர் , தேனி.எம்.சுப்பிரமணி , சுந்தர் ஆகியோர் வலைப்பூக்கள் மற்றும் விக்கிப்பீடியா குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டோம். --தேனி.எம்.சுப்பிரமணி. 16:53, 2 ஜூலை 2010 (UTC)

மாநாட்டுக் காட்சிகள்

பரிசு வாங்கிய கட்டுரைகள் விக்கியில் எங்கே உள்ளன??--80.192.30.41 17:17, 13 ஜூலை 2010 (UTC)

போட்டிக்கு வந்த கட்டுரைகளைப் பதிவேற்றும் பணி இன்னும் தொடங்கவில்லை. பரிசு வாங்கிய கட்டுரைகளையாவது விரைந்து பதிவேற்ற வேண்டும்--ரவி 19:11, 13 ஜூலை 2010 (UTC)

மாணவர்களைப் பயன்படுத்தலாம்

தொகு

அனைவருக்கும் வணக்கம்! அத்துடன், அனைவருகும் உங்களுடைய பங்களிப்பிற்காகப் பலமுறை நன்றி! நமது தமிழ்ச் செம்மொழி முதல் மாநாட்டிற்கும் இணைய மாநாட்டிற்கும் முதல் நாளன்று வர இயலாததால் - இயலாததற்குக் காரணம், 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற எண்ணத்துடன் பலரையும் ஒன்றூ திரட்டி அழைத்து வர வேண்டி இருந்ததுதான்! நான் மட்டும் கலந்து கொண்டால் அவர்களை இதில் அறிமுகப் படுத்த இனி வாய்ப்பே இல்லை என்பதால் மனத்தைத் தேற்றிக் கொண்டேன் - அடுத்த நான்கு நாட்களில் கலந்து கொண்டேன். உடன் வந்தவர்களைக் கட்டி மேய்த்து ஒருவரைக் கூடத் தவற விடாமல் திரும்ப அனுப்பிய பிறகுதான் எனக்கு நேரம் கிடத்தது! கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி ஒரு சுற்றுத்தான் வர முடிந்தது. கண்காட்சி அரங்குகளின் உள்ளே நுழைந்தோம்; அப்படியே 'தள்ளி' வெளியே கொண்டு வந்து விட்டார்கள். அவ்வப்போது கிடைத்த இடைவெளியிகளில் சில ஒளிப் படங்களை எடுத்துக் கொண்டு இன்னொரு முறையும் மனத்தைத் தேற்றிக் கொண்டேன். உங்களில் பலரைக் கண்டு மகிழ்சியாக இருந்தது. அரங்குகள் அனைத்தையும் ஆர அமரக் கண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். உங்களுடன் உரையாட ஆசைதான்; ஆனால் தற்போது நான் விக்கியில் அறிமுகச் சுற்றுலா வந்து கொண்டிருக்கிறேன். இன்னும் நிறைய அறிந்து கொள்ள வேண்டும். நிறையச் செய்ய வேண்டும். கூட்டத்தில் இருந்த பள்ளி மாணவியர் மாணவரில் பலருக்கு விக்கிப் பீடியாவைத் தெரியவில்லை. அத்துடன் 'தமிங்கிலீஷ்'ஐப் பயன்படுத்திக் கணினியில் இயங்கலாம் என்பதுவும் தெரியவில்லை. ஆனால் அவர்கள் 'தமிங்க்லீஷ்' இல் தங்களுடைய அலைபேசியில் குறூஞ்செய்திகளை அடுக்கடுக்காக அனுப்புகிறார்கள்! கூகிள், அழகி, எ-கலப்பை முதலிய மொழியாக்கிகளையும் தமிழ்99 கீபோர்டு, ஒருங்குறி (யுனிகோடு) ஆகியவற்றின் பயன்பாடுகளைப் பற்றியும் அவர்கள் அறியாமல் உள்ளனர். இந்த மாணவியர் மாணவர் வட்டாரங்களில் ஏதாவது செய்ய வேண்டும்...மிக்க நன்றி. ம.கி. சந்திர மௌலீஸ்வரன்,03ஜுலை2010-சனிக்கிழமை.