விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/விக்கியில் கணக்கு உருவாக்கல்

புகுபதிகை செய்வதன் பலன்கள்

தொகு

விக்கிப்பீடியாவைப் படிப்பதற்கு நீங்கள் புகு பதிகை செய்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விக்கிப்பீடியா கட்டுரைகளை தொகுப்பதற்குக் (மாற்றுவதற்கு) கூட புகுபதிகை ஒரு கட்டாயத் தேவை இல்லை.— எவரும், அதாவது விக்கிப்பீடியாவின் எந்தவொரு பயனரும் விக்கிப்பீடியாவின் பெரும்பாலான கட்டுரைகளை புகுபதிகை செய்யாது தொகுக்க முடியும். இருப்பினும், இங்கு ஒரு பயனர் விரைவாகவும், இலவசமாகவும், தொந்தரவற்ற முறையிலும் கணக்கைத் தொடங்க முடியும். விக்கியில் கணக்குத் துவக்குவது ஒரு சிறந்த செயலாகும். பயனர் கணக்கு உருவாக்குவதற்காக உங்கள் தனி நபர் தகவல் எதுவும் கேட்கப்பட மாட்டாது. தவிர, பயனர் கணக்கு உருவாக்குவதால் உங்களுக்குப் பல நன்மைகள் உண்டு. அவற்றுள் சில:

  • நீங்கள் விரும்பும் பயனர் பெயரைப் பெறலாம்.
  • உங்கள் பங்களிப்புகள் அனைத்தையும் "என் பங்களிப்புகள்" என்ற இணைப்பைத் தெரிவு செய்து காணலாம்.
  • உங்களுக்கென்று ஒரு பயனர் பக்கம் கிடைக்கும்
  • உங்களுக்கெனத் தனியாக ஒரு பேச்சுப் பக்கமும் அதன் மூலம் பிற பயனர்கள் உங்களுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பும் கிடைக்கும்.
  • நீங்கள் விரும்பினால் உங்களுக்கு பிற பயனர்கள் மின்னஞ்சல் அனுப்பும் வசதியும் கிடைக்கும். ஆனால், உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பிற பயனர்கள் அறிய இயலாது.
  • நீங்கள் விரும்பும் கட்டுரைகளில் நிகழும் மாற்றங்களைக் கண்காணிக்க கவனிப்பு பட்டியல் வசதி ஏற்படும்.
  • விக்கிப்பீடியா பக்கங்களின் பெயர்களை மாற்றும் அனுமதி கிடைக்கும்.
  • கோப்புகளைப் பதிவேற்றும் அனுமதியும் கிடைக்கும்.
  • உங்கள் விருப்பத்திற்கேற்ப விக்கிப்பீடியா தளத் தோற்றத்தையும் செயல்படு முறையையும் மாற்றிப் பார்வையிடும் அனுமதி கிடைக்கும்.
  • விக்கிப்பீடியா நிர்வாகி ஆகும் வாய்ப்பு ஏற்படும்.
  • வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ளும் உரிமை கிடைக்கும்.
  • பயனர் கணக்கு உருவாக்கிய பின், உங்கள் IP முகவரி பிற பயனர்களிடம் இருந்து மறைக்கப்படும்.


பயனர்பெயர்

தொகு

நீங்கள் கணக்குத் துவக்கும்போது உங்கள் பயனர் பெயரை தெரிந்தெடுத்துக்கொள்ளலாம். புகுபதிகை செய்தபின்னர் நீங்கள் கட்டுரைகளில் செய்யும் மாற்றங்கள் அந்தப் பெயருடன் இணைக்கப்படும். அதாவது அக்கட்டுரை வரலாற்றில் உங்கள் பங்களிப்பிற்கான முழு பெருமையும் பொறுப்பும் கிடைக்கிறது. புகுபதிகை செய்யாதிருப்பின் அந்த பங்களிப்பு ஒவ்வொருமுறையும் மாறிக்கொண்டிருக்கக்கூடிய இணைய நெறிமுறை முகவரிக்குச் சேரும். உங்கள் பங்களிப்புகள் அனைத்தையும் மேற்பகுதியில் உள்ள "என் பங்களிப்புகள்" இணைப்பைச் சொடுக்கிக் காணலாம் (இந்த இணைப்பு நீங்கள் புகுபதிகை செய்திருந்தாலே காணப்படும்).

உங்களுக்கேயான பயனர் பக்கம் ஒன்றில் உங்களைக் குறித்த தகவல்களை வெளியிடலாம். விக்கிப்பீடியா ஓர் வலைப்பதிவு வழங்கிஅல்ல எனினும் இங்கு சில நிழற்படங்கள் இடலாம்; உங்கள் மனமகிழ் செயல்களைப் பகிரலாம். பல பயனர்கள் அவர்கள் பெருமைகொள்ளும் கட்டுரைகளின் பட்டியலைப் பராமரிக்கவோ அல்லது விக்கிப்பீடியாவிலிருந்து பெற்ற மதிப்புமிக்க தகவல்களை சேமிக்கவோ பயன்படுத்துகின்றனர்.

உங்களுக்கு ஓர் நிரந்தர பயனர் பேச்சுப் பக்கம் ஏற்படுத்தப்பட்டு பிற பயனர்களுடன் உரையாட வசதி கிடைக்கும். வேறு யாரேனும் உங்களுக்கு செய்தி அனுப்பினாலும் அறிவிக்கப்படுவீர்கள். உங்களது மின்னஞ்சலை பகிர்ந்துகொண்டிருந்தீர்களாயின், பிற பயனர்கள் உங்களுடன் அந்த மின்னஞ்சலில் உங்களைத் தொடர்பு கொள்ள முடியும். விக்கிப்பீடியாவில் வழங்கப்படும் வசதியில் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புபவருக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி தெரியாது; எனவே உங்கள் தனிவாழ்வு பாதுகாக்கப்படுகிறது.

எப்படி புகுபதிகை செய்ய வேண்டும்?

தொகு

குறிப்பு: விக்கிப்பீடியாவில் ஓர் பயனர் கணக்கினைத் துவக்க புகுபதிகை பக்கம் செல்லுங்கள்.

  • இந்த பக்கத்தின் வலது உச்சியில் இருக்கும் "புகுபதிகை" என்ற இணைப்பைத் தெரிவு செய்யுங்கள்.
  • புகுபதிகை பக்கத்தில் நீங்கள் விரும்பும் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் விவரங்களை நிரப்புங்கள். முதல் முறை புகுபதிகை செய்கிறீர்கள் என்றால், உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு இரண்டு தடவை கடவுச் சொல்லை உள்ளிட வேண்டியிருக்கும்.
  • நீங்கள் விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தரலாம். இவ்வாறு செய்வது மற்ற பயனர்கள் உங்களைத் தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும். எனினும், உங்கள் தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்கப்படும். உங்கள் மின்னஞ்சல் முகவரியை வேறு யாரும் தெரிந்து கொள்ள இயலாது.

புகுபதிகை செய்தலை விளக்கும் சலனப்படத் துண்டு

தொகு
 
உருவாக்கப்பட்ட கணக்கை கொண்டு புகுபதிகை செய்வது எப்படி ? (தகவல்)
வழிகாட்டி துண்டுப்படம்
இந்த நிகழ்படத் துண்டினை சரியாக இயக்கிப்பார்க்க முடியவில்லையா?ஊடக உதவி ஆவணத்தை பார்வையிடவும்.