விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி
அறிமுகம்
தொகுதமிழ் விக்கிப்பீடியா கடந்த ஆண்டுகளில் செய்த சில செயல்களை இங்கு நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.
- தொடக்கத்தில் எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல், தரத்தில் கவனம் செலுத்தியதால், பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் செய்த தவறுகளில் இருந்து தப்பிக் கொண்டோம்.
- வகை தொகை இன்றி கவனிப்பார் அற்ற தானியங்கிக் கட்டுரைகள் உருவாக்குவதைத் தடுத்து ஒரு பராமரிப்புக் கொடுங்கனவைத் தவிர்த்தோம்.
- பயனர்களைப் பற்றிய அறிமுகத்தைக் காட்சிப்படுத்துதல் என்ற சிறிய செயற்பாடு பல பயனர்களை ஊக்குவிக்குமாறு அமைந்துள்ளது.
- நேரடியாகத் தமிழில் எழுதக் கூடிய வசதி அமைத்தது தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க இருந்த ஒரு பெரும் நுட்பத் தடையை களைந்தது.
- ஊடகப் போட்டியின் போது சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டை நேரடியாக உணர்ந்து கொண்டோம்.
- பட்டறைகள் செய்வதை விட இணையப் பரப்புரை உடனடியாக கூடுதல் பலனைத் தருவதாக உணரப்பட்டது.
எனவே, நமது வளங்கள் எவ்வளவு, நமது வீச்சு எவ்வளவு என்பது தொடர்பாக ஓரளவு புரிதல் உள்ளது. நாம் கடந்த காலங்களிலும் பல உரையாடல்கள் செய்து இருக்கின்றோம். எனினும், அவை பின்னர் முறையாகத் தொகுக்கப்படவில்லை. பல கூறுகள் நிறைவேற்றப்படவில்லை. தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி தமிழ் விக்கியூடகங்களில் (விக்கிப்பீடியா, விக்சனரி, செய்திகள், மூலம், நூல்கள், மேற்கோள்) ஒரு பரந்த உரையாடலை மேற்கொண்டு ஒரு திறனான வியூகத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்படுகிறது.
நோக்கங்கள்
தொகு- அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கி, மதிப்பீடு செய்து ஒரு திறனான 2012, 2015 வியூகம் ஒன்றை உருவாக்கல்.
- வியூகத்தை நிறைவேற்ற உதவும் செயல் திட்டங்களை வரையறை செய்தல்.
- வியூகத்தை, அதன் செயல் திட்டங்களை நிறைவேற்ற தேவையான வளங்களைத் திரட்டல்.
- வியூக நிறைவேற்றாலைக் கண்காணித்து, பின்னூட்டுகள் பெற்று, தகுந்த மாற்றங்களைச் செய்துகொள்ளல்.
செயற்பாட்டுக் குழு
தொகுஇதில் தமிழ் விக்கியூடகங்கள் மீது அக்கறை உள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இந்தப் பணிக்கு கூடிய நேரம் அல்லது ஆற்றல் வழங்கக் கூடியவர்கள் செயற்பாட்டுக் குழுவில் சேர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.
பங்களிப்பாளர்கள்
தொகு- --சஞ்சீவி சிவகுமார் 05:04, 2 சனவரி 2012 (UTC) முழுமையாக இல்லாவிட்டாலும் பங்களிக்க இயலும்.
- -- சூர்யபிரகாஷ் உரையாடுக... 11:28, 2 சனவரி 2012 (UTC) முடிந்த அளவுக்கு
- --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:07, 2 சனவரி 2012 (UTC) முழுமையாக இல்லாவிட்டாலும் பங்களிக்க இயலும்.
- ---மயூரநாதன் 18:13, 4 சனவரி 2012 (UTC)
காலக் கோடு
தொகுஎண் | கட்டம் | வினை | துவக்க தேதி | இலக்கு தேதி | முடிந்த தேதி | குறிப்புகள் |
1 | அணித் தகவல் பக்கம் உருவாக்கம் | தொடக்கம் | சனவரி 1, 2011 | சனவரி 3, 2011 | ||
2 | அணி உருவாக்கம் பற்றி அனைத்து தமிழ் விக்கிகளிலும் அறிவிப்பு | தொடக்கம் | சனவரி 1, 2011 | சனவரி 1, 2011 | சனவரி 1, 2011 | ஆயிற்று |
3 | தமிழ் விக்கிச்சமூக கருத்தாய்வு கேள்விக் கொத்து/ பிற வழிகளைத் தயாரித்தல் |
தொடக்கம் | சனவரி 1, 2011 | சனவரி 5, 2011 | ||
4 | கேள்விக் கொத்துக் கருத்து வேண்டல் | தொடக்கம் | சனவரி 1, 2011 | சனவரி 5, 2011 | ||
5 | வியூகத் திட்டமிடல் காலக் கோடு ஒன்றை உருவாக்கல், முதல் வரைவு | தொடக்கம் | சனவரி 1, 2011 | சனவரி 5, 2011 |