விக்கிப்பீடியா:பயனர் தடை வேண்டுகோள்கள்
இங்கு குறிப்பிட்ட பயனர்களைப் பற்றிய முறையீடுகளைத் தரலாம். பயனர் பெயர் அல்லது ஐ. பி. முகவரி, காரணம், அதனை விளக்கும் எடுத்துக்காட்டுகளைத் தர வேண்டும். பயனர் முறையீடுகளைக் கையாளும் முறைமை உருவாக்கத்தில் உள்ளது. அது வரை, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Blocking_policy பக்கத்தை ஒப்பு நோக்கலாம்.
பாஹிம்
தொகுபாஹிம் எனும் பயனரை தடை செய்யப்பட வேண்டும். காரணங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
- விக்கிப்பீடியா:கண்ணியம் எனும் பகுதியில் உள்ள விக்கிப்பீடியா கொள்கைகளை பின்பற்றுவதில்லை.
- விக்கிப்பீடியா:நற்பழக்கவழக்கங்கள் பகுதியில் "பேச்சுப் பக்கங்களில்" இலக்கண சுத்தமாக உடையாடத் தேவையில்லை என்றாலும், கண்ணியமாகவும் கனிவாகவும் உடையாடுவதன் அவசியம் உணர்த்தப்பட்டிருந்தப் போதும் அதனையும் கடைப்பிடிப்பதில்லை.
- கருத்து பிழையானதாக இருந்தால் அக்கருத்துக்கு சரியான பதிலளிக்கலாம். தவறை சுட்டிக்காட்டாலாம். குறிப்பிட்ட கருத்து பொய்யானதாக இருந்தாலும்; அதனை பொய்யென எடுத்துக்காட்டலாம். ஆனால் கருத்துக்கு பதிலளிக்காமல், விடுத்து கருத்திட்டவரை பொய்யர், பொய்யர் என அழைப்பது.
- என்ன உளறுகிறீர்கள்? என இழிவாக விழிப்பது.
- முட்டாளதனமாக உளறாதீர்கள் என இடித்துறைப்பது.
- புலமை எந்தளவு உள்ளது? ஒரு பயனரின் புலமை தொடர்பில் கேள்வி எழுப்புவது.
- எவ்வளவு பெரிய பொய்யர் என கருத்தை எதிர்காமல் கருத்திட்டவரை தாக்குவது.
- குரங்குகளும் பன்றிகளும் நாய்களும் நரிகளும் தம் மூதாதையரென மூட நம்பிக்கை கொண்டிருப்போரையா? என தேவையற்ற சொற்களை பயன்படுத்துவது.
- கயமை என விழிப்பது.
- இவ்வளவுதான உங்கள் அறிவு தனிமனித தாக்குதல் தொடுப்பது.
- உங்களைப் பயங்கரவாதி எனலாமா? இலங்கை தமிழர்களிடம் கேட்பது.
- தனது எதிர்ப்பு நிலைகளின் போது அறிவியலை துணைக்கு எடுத்துக்கொள்வதும், தான் சார்ந்த துறை (மதம்) என வரும் போது எதிர்மாறாக அறிவியலை எதிர்ப்பது.
- தமிழ் மொழி, தமிழர் அரசியல், தமிழர் வரலாறு, தமிழ் சொற்கள் போன்ற உரையாடல்களின் போது திட்டமிட்ட வகையில் அவற்றை கேள்விக்குற்படுத்துவது.
- ஏற்கெனவே [[1]] எச்சரிக்கை விடப்பட்டிருந்தப் போதும் அதனையும் கணக்கில் எடுக்காது தொடர்ந்து தனிமனித தாக்குதல்களில் ஈடுபடுவது.
என இவரின் செயல்பாடுகள் தொடர்ச்சியாக எவ்வித கண்ணியமும் கட்டுபாடும் அற்றவகையில் தொடர்ந்து இடம் பெற்றவண்ணம் உள்ளன. எனவே இவர் துரிதமாக தடை செய்யப்பட வேண்டும். குறைந்தப் பட்சம் இதன் பிறகேனும் தொடர்ந்து கண்காணித்து முடிவெடுக்க வேண்டும். --ஜவஹர் அலி (பேச்சு) 06:25, 27 செப்டெம்பர் 2012 (UTC)
- வணக்கம். பயனர் ஜவஹர் அலி என்பவரின் கருத்தை நான் முழுமையாகவும் பூரணமாகவும் நடு நிலையுடன் ஏற்றுக்கொள்கிறேன்.--சிவம் 06:46, 27 செப்டெம்பர் 2012 (UTC)
- சவகர் அலி, எந்த வித முறையீடும் இல்லாமலேயே, அன்றாடம் தமிழ் விக்கிப்பீடியா செயற்பாட்டுக்கு இடையூறாக உள்ள பயனர்களைக் கவனித்துத் தடுத்தே வருகிறோம். இது போன்ற முறையீடுகள் எழும் நேரத்தில் அதனை எவ்வாறு அணுகுவது என்ற முறையான வழிகாட்டல்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை. இது தொடர்பாக பிற விக்கிப்பீடியாக்களின் நடைமுறைகளை ஆய்ந்து தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏற்ப வழிமுறைகளை உருவாக்குவதற்கு காலம் தேவை. அது வரை இம்முறையீட்டின் மீதான நடவடிக்கைக்குப் பொறுத்திருக்க வேண்டுகிறேன். தொடர்ந்தும் இதே பயனர் தொடர்பாக வேறு முறையீடுகளை அளிப்பதையோ இங்கு கருத்திடுவதையோ தவிர்த்து, தங்களின் மற்ற வழமையான பங்களிப்புகளைத் தொடர வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 06:16, 28 செப்டெம்பர் 2012 (UTC)
ஜவஹர் அலி என்ற பயனரையும் Sivane என்ற பயனரையும் சிவம் என்ற பயனரையும் தடை செய்ய வேண்டும்
தொகுகாரணங்கள் கீழே தரப்படுகின்றன:
- மேற்படி இரு பயனர் கணக்குகளும் தனியொருவராலேயே பயன்படுத்தப்படுகிறது.
- என்னுடைய பேச்சுப் பக்கத்தில் என்னை மூர்க்கன் என்று இழித்துரைத்தமை.
- முகம்மது நபியவர்களைப் பற்றிப் பொய்யான பரப்புரைகளை மேற்கொள்கின்றமை.
- முகம்மது நபியவர்கள் கூறாத ஒன்றைக் கூறியதாகப் பொய் மேற்கோள் காட்டுகின்றமை.
- திருக்குர்ஆனில் இல்லாத ஒன்றை இருப்பதாகப் பொய்யுரைத்தமை.
- ஏனைய விக்கிப்பீடியர்கள் தொடர்பில், தனிமனிதத் தாக்குதல்களில் ஈடுபடுகின்றமை.
- ஏனைய விக்கிப்பீடியர்களைப் பற்றிப் பொய்யாகப் புனைந்துரைத்துக் கூறுகின்றமை. குறிப்பாக, தமிழ் மொழியும் தமிழர் அரசியலும் போன்ற விடயங்களிற் ஏனைய விக்கிப்பீடியர் பொய்யுரைத்ததாக அவரே பொய்யுரைக்கின்றமை.
- திட்டமிட்டு சமயக் கட்டுரைகளைத் தாக்குகின்றமை.
- சமயங்களைச் சார்ந்தோரைப் பகுத்தறிவற்றவர்களெனக் கூறுகின்றமை.
- அறிவியலில் நிறுவப்படாத ஒரு கூற்றை அறிவியல் உண்மையெனக் கூறிப் பொய்யான பரப்புரை செய்கின்றமை.
- ஏனைய பயனர்களை அச்சுறுத்துகின்றமையும், விமர்சனங்களால் ஏனைய பயனர்களை நடுங்க வைப்பதாகக் கூறுகின்றமையும்.
- ஏற்கனவே பயனுள்ள நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியும் ஆண்டுக் கணக்காகப் பங்களித்தும் வரும் பயனர்களை அவர்களது கட்டுரைகள் தொடர்பிலன்றி, வெறுமனே சமய விரேதத்துக்காக வெளியேற்ற முயல்கின்றமை.
- முகம்மது நபியவர்கள் மீதான பொய்ப் பரப்புரைகளைக் கொண்டு முஸ்லிம் நாடுகளிலும் இலங்கையிலும் தமிழ் விக்கிப்பீடியா மீது தடை கொண்டுவரும் விதத்தில் நடந்துகொள்கின்றமை.
மேற்படி காரணங்களைக் கருத்திற் கொண்டு ஜவஹர் அலி, சிவம் மற்றும் Sivane ஆகிய பயனர் கணக்குகளை முற்றாகத் தடை செய்ய வேண்டுமெனப் பரிந்துரைக்கிறேன்.--116.12.91.201 06:52, 27 செப்டெம்பர் 2012 (UTC)
- அஸ்லாமு ஆலைக்கும் பாஹிம்! நீங்கள் தவறாக விளங்கிக்கொள்ளக்கூடாது. //ஏற்கனவே பயனுள்ள நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியும் ஆண்டுக் கணக்காகப் பங்களித்தும் வரும் பயனர்களை அவர்களது கட்டுரைகள் தொடர்பிலன்றி// கட்டுரைகள் தொடர்பிலும் உங்கள் பங்களிப்பிலும் நாம் எதுவும் கூறவில்லை. இங்குள்ள முன்னனி பயனர்கள் பலர் உங்களது தொடர் தாக்குதல்களை தொடர்ந்து கண்காணித்து வந்தப்போதும் கண்டிக்காமல் இருந்தமைக்கும் பொருமை காத்தமைக்கும் அவைகளே காரணமாக இருப்பதனையும் நீங்கள் உணரலாம்.
- //வெறுமனே சமய விரேதத்துக்காக வெளியேற்ற முயல்கின்றமை.// சமயம் சார்ந்த விரோதமோ, உங்கள் மீதான தனிப்பட்ட விரோதமோ எமக்கில்லை. ஆனால் உங்களை தடை செய்ய கூறுவதற்கான காரணிகள் மேலே வழங்கப்பட்டுள்ளன. முடிந்தால் இதனை ஒரு அவகாசமாக எடுத்துக்கொண்டு இதன்பிறகேனும் கண்ணியமாக நடந்துக்கொள்ள முயற்சி எடுங்கள். --ஜவஹர் அலி (பேச்சு) 07:22, 27 செப்டெம்பர் 2012 (UTC)
அதைத்தான் நானும் கூறியிருக்கிறேனே. நீங்கள் என்னைத் தனிப்பட்ட முறையிற் தாக்குகிறீர்கள். என்னுடைய பேச்சுப் பக்கத்தில் வந்து என்னை மூர்க்கனென்று கூறியமையை நான் என் வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து என்னை அடிக்க வந்தது போன்று உணர்கிறேன். முகம்மது நபியவர்கள் தொடர்பாகப் பொய்யான தகவல்களை வழங்குகிறீர்கள். உங்களது தகவலுக்கு எந்த வகையான வரலாற்று ஆதாரத்தையும் தராமல் வெறுமனே இஸ்லாமிய விரோத வலைத்தளமொன்றில் இருந்து பெயர்த்தெழுதுகிறீர்கள். மேலும், வெவ்வேறு பயனர் கணக்குகளை ஒரே நேரத்தில் வைத்துள்ளீர்கள். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பயனர் கணக்குகளை வைத்திருப்பது கள்ள வோட்டுப் போடுவதற்குச் சமம். நீங்கள் முஸ்லிம் பெயரைப் பயன்படுத்துகிறீர்கள். முகம்மது நபிக்கு எதிராகப் பொய்யுரைக்கிறீர்கள்.--பாஹிம் (பேச்சு) 07:41, 27 செப்டெம்பர் 2012 (UTC)
- ஒரு தகவல் மட்டும்: ஒரே பயனர் மூன்று கணக்குகளை அறிவிக்காமல் பயன்படுத்துவது விக்கி கொள்கைப்படி ஏற்றுக்கொள்ள முடியாதது. நீங்கள் எந்த ஆதாரத்தின் படி அப்படி கூறுகிறீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா?, நீங்கள் கூறும் காரணம் ஏற்றுக்கொள்ளக் கூடியது, நமது விக்கிப் பயனர்களுக்கும் அப்பயனர்களை சோதனை செய்வதில் உடன்பாடு எனில் மேல் விக்கியில் m:Steward requests/Checkuser இங்கே வேண்டினால் அக்கணக்குகளுக்கு தொடர்பு உண்டா? இல்லையா? என்பதனை மேலாளர்கள் தெளிவாகக் கூறிவிடுவர்--சண்முகம்ப7 (பேச்சு) 07:50, 27 செப்டெம்பர் 2012 (UTC)
- பாகிம், எந்த வித முறையீடும் இல்லாமலேயே, அன்றாடம் தமிழ் விக்கிப்பீடியா செயற்பாட்டுக்கு இடையூறாக உள்ள பயனர்களைக் கவனித்துத் தடுத்தே வருகிறோம். இது போன்ற முறையீடுகள் எழும் நேரத்தில் அதனை எவ்வாறு அணுகுவது என்ற முறையான வழிகாட்டல்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை. இது தொடர்பாக பிற விக்கிப்பீடியாக்களின் நடைமுறைகளை ஆய்ந்து தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏற்ப வழிமுறைகளை உருவாக்குவதற்கு காலம் தேவை. அது வரை இம்முறையீட்டின் மீதான நடவடிக்கைக்குப் பொறுத்திருக்க வேண்டுகிறேன். தொடர்ந்தும் இதே பயனர் தொடர்பாக வேறு முறையீடுகளை அளிப்பதையோ இங்கு கருத்திடுவதையோ தவிர்த்து, தங்களின் மற்ற வழமையான பங்களிப்புகளைத் தொடர வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 06:16, 28 செப்டெம்பர் 2012 (UTC)
வணக்கம் சண்முகம், மேல்விக்கியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பவர்களை கண்டுபிடிக்கலாம் என்று கூறியுள்ளீர்கள். எப்படி கண்டுபிடிப்பார்கள் என்று யேதேனும் கூற முடியுமா? மேலும் நான் விரும்பும்பெயரை சோதிக்க வேண்டும் இணைப்பைத் தாருங்களேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:29, 6 அக்டோபர் 2012 (UTC)
- தமிழ்க்குரிசில், எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பது பற்றி பரவலாக உரையாடினால் அதில் ஓட்டை கண்டு தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதால் அதைப்பற்றி அதிகமாக வெளியே தெரிவதில்லை. எங்கு முறையிடலாம் என்பதற்கு பின்னர் இணைப்பைத் தருகிறேன். -- சுந்தர் \பேச்சு 14:10, 6 அக்டோபர் 2012 (UTC)
புரிந்து கொண்டேன் சுந்தர். மறுமொழிக்கு நன்றி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:40, 6 அக்டோபர் 2012 (UTC)
- Mw:Extension:CheckUser மூலமாக பயனர் கணக்குகள் பயன்படுத்தும் ஐபி முகவரிகளைக் கொண்டு இரு வேறு கணக்குகளுக்கு தொடர்பு உண்டா இல்லையா என்பதனை கண்டறிவார்கள் தமிழ்க்குரிசில், இது பற்றி மேலும் விவரங்கள் மேற்கூறிய மீடியாவிக்கி விக்கியின் இணைப்பில் உள்ளன. wmf:privacy policyக்கு ஏற்ப அனைவரும் மற்ற பயனர்களின் ஐபி முகவரியை அணுக இயலாது, எனவே விக்கிமீடியா அறக்கட்டளைக்கு தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளும் பயனர்கள் மட்டுமே பயனரைச் சரிபார் குழுவிற்கான அனுமதியை பெற இயலும். ஒவ்வொரு விக்கிமீடியாத் திட்டத்திற்கும் நமக்குத் தேவையெனில் இந்த அனுமதியை பயனர்கள் பெறலாம் (குறைந்த பட்சம் 30 தொடர் பங்களிப்பாளர்கள் ஆதரவு + அடையாளம்), இதுவும் நிர்வாகி தரத்திற்கான அனுமதி பெறுவது போன்றதே. மேலும் மேலே கூறியது போல m:Steward requests/Checkuser இங்கு நீங்கள் சோதிக்க விரும்பும் பயனர் பெயரை தகுந்த காரணங்களுடன் (ஆதாரங்களுடன்) விளக்கினால் மேலாளர்கள் சோதித்து பயனர்களின் ஐபி முகவரிகளுக்கிடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா இல்லையா எனக் கூறுவார்--சண்முகம்ப7 (பேச்சு) 15:48, 6 அக்டோபர் 2012 (UTC)
இது குறித்த போதிய அறிவு இல்லாததால் பின்னரே படித்தறிய வேண்டும். ஆயினும் நீங்கள் கூறியபடி 30+ பயனர்களின் ஆதரவு என்பது புரிந்தது.. என் பயனர் பெயரை சோதித்துப் பார்க்கலாம் என்று தோன்றியது. எனவே கேட்டேன். மேலதிக உரையாடலை இங்கே தொடர விரும்பவில்லை. அருமையான விளக்கத்திற்கு நன்றி சண்முகம்! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:33, 6 அக்டோபர் 2012 (UTC)
- பலநாடுகளுக்கு அல்லது ஒரே நாட்டிற்குள் பலவிடங்களுக்கு பயணம் செய்யும் அல்லது பணியாற்றும் ஒரு பயனர் ஒவ்வொரு இடங்களில் இருந்தும் ஒவ்வொரு பயனர் பெயரென பயன்படுத்தினால், மேலே குறிப்பிட்டுள்ளவாறு ஐபி முகவரியை சோதித்து யாரென உறுதியாக கூறுதல் இயலாது. ஆனால் ஒரு பயனர் ஏன் பல்வேறு கணக்குகளில் பங்களிக்கிறார் என்பதை ஆய்ந்தால் அதன் நோக்கம் அறியலாம். அதிலும் ஒருவரது எழுத்துநடை, எழுத்துபிழை, வாக்கிய அமைப்புகள் போன்றவற்றை சற்று கவனித்தால் ஐபி சோதனையின்றியே கண்டறியலாம். அநேகமாக தொகுத்தல் போர்களின் போது தனக்கு ஆதரவாக அல்லது கருத்து மோதல்களின் போது தன்கருத்திற்கு வலுசேர்ப்பதற்காக அல்லது ஆதாரவாக கருத்திடுவதற்காக கைப்பாவைகள் உருவாக்கப்படுகின்றன. இங்கே "சிவம்" எனும் பயனர் பெயருக்கும், ""sivane" எனும் பயனர் பெயருக்கும் எனக்கும் எத்தொடர்பும் இல்லை. ஆனால் தமிழ் விக்கிக்கும் எனக்கும் தொடர்பு உண்டு. கவனிக்க: எவரதும் சயம நம்பிக்கைகளுக்கு எதிராக நான் எங்கும் கருத்திடவில்லை. எவரும் தான் விரும்பும் சயமத்தை பின்பற்றவும், நம்பிக்கை கொள்ளவும் உரிமையுண்டு. அடுத்தவர் நம்பிக்கையில் குறுக்கிடும் உரிமை எவருக்கும் இல்லை. அதேவேளை நடந்த உரையாடலில் நான் எந்த பயனரையும் ஆதரித்து கருத்திட்டதாகவும் கொள்ளவேண்டாம். ஆனால் உரையாடல்களில் இடம்பெற்ற கொடுஞ்சொற்களை மேற்காட்டியமை தொடர்ந்து விக்கியில் இடம்பெற்று வந்த தனிமனித தாக்குதல்களை வெளிகாட்டவே என்பதை புரிந்துக்கொள்ளவும். --ஜவஹர் அலி (பேச்சு) 19:33, 6 அக்டோபர் 2012 (UTC)