விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூன் 28 - 30

சங்கர், இரா. பாலா, Srithern, ஹிபாயத்துல்லா, அரும்புமொழி, சங்கர், முஹம்மது அம்மார், சசிக்குமார், மகாலிங்கம், தியாகு கணேஷ்... வணக்கம்! பயிற்சி குறித்த குறிப்பிடத்தக்க தகவல்களை இங்கு இடலாம். வலியுறுத்தவில்லை; நீங்கள் விரும்பினால் இடலாம்! உதாரணம்:- இங்கு --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:15, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]


புதுக்கோட்டை மாவட்டம்

தொகு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா பணிமனைப் பயிற்சியானது புதுக்கோட்டை ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.28.06.2017 புதன் கிழமை காலை 9.30 மணியளவில் மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் முனைவர் என். செல்லத்துரை அவர்கள் பயிற்சியைத் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் நிறுவனத்தின் பணியிடை பயிற்சித்துறை தலைவர் முனைவர். நடராஜன், முனைவர் பாலசுப்பிரமணியன், டாக்டர் இராஜ்குமார், முனைவர் ஆனந்தராஜூ உள்ளிட்ட அனைத்துத் துறைத் தலைவர்கள் விரிவுரையாளர் பெருமக்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலிருந்து 30 ஆசிரியர்கள் பங்கெடுத்தனர். மாவட்ட கருத்தாளராக விரிவுரையாளர் புவனேஷ்வரி பட்டதாரி ஆசிரியர் தியாகு ஆகியோர் பங்கு பற்றினர்.


28.06.2017 அன்று பயிற்சியளிக்கப்பட்ட தலைப்புகள்

தொகு

முற்பகல்

தொகு
  • புதிய பயனர் கணக்கு உருவாக்கம்,
  • விக்கியின் ஐந்து தூண்கள்,
  • விக்கியின் அடிப்படை நுட்பங்கள்,
  • விக்கியில் செய்ய வேண்டியவை-செய்யக்கூடாதவை

பிற்பகல்

தொகு
  • தமிழ் கட்டச்சுப் பயிற்சி
  • மணல்தொட்டி பயிற்சி
  • மணல் தொட்டியில் புதிய கட்டுரைகள் எழுதப்பயிற்சி
  • புதிய கட்டுரைகள் உருவாக்கம்

28.06.2017 அன்று பயிற்சியளிக்கப்பட்ட தலைப்புகள்

தொகு

முற்பகல்

தொகு
  • பொதுவகத்தில் கோப்புகள் பதிவேற்றம்
  • கட்டுரை தலைப்பிடுதல்
  • கட்டுரை மொழிபெயர்த்தல் அறிமுகம்
  • விக்சனரி பயன்பாடு

பிற்பகல்

தொகு
  • புதிய கட்டுரைகள் உருவாக்கம்
  • மொழிபெயற்ப்புக் கட்டுரைகள் உருவாக்கம்

28.06.2017 அன்றைய நிகழ்வுகள்

தொகு

முற்பகல்

தொகு
  • முதல் இரு நாட்களில் உருவாக்கப்பட்ட கட்டுரைகளில் உள்ள பிழைகள், சிறு தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு திருத்தம் செய்யப்பட்டன.
  • உள்ளடக்க மொழிபெயர்ப்பு (Content Translation Tool) கருவியைக் கொண்டு மொழிபெயற்த்தல் பற்றி விரிவாக செய்முறைப்பயிற்சி அளிக்கப்பட்டது.

பிற்பகல்

தொகு
  • மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உருவாக்கம்
  • கட்டுரைகளை பகுப்புகளில் சேர்த்தல் குறித்த அறிவுரைகள்
  • மொழிபெயற்ப்புக் கட்டுரைகளுக்கு எவ்வாறு ஆங்கில விக்கி இணைப்புக் கொடுப்பது என்பது குறித்த விளக்கம்
  • இதுவரை பயிற்றுவித்தவை மீள்பார்வை

பதிவேற்றம் செய்யப்பட்ட கட்டுரைகள்

தொகு

புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகளின் தற்போதைய எண்ணிக்கையை காண இங்கு செல்லுங்கள்

தேதி உருவாக்கிய

கட்டுரைகள்

28.06.2017 73
29.06.2017 70
30.06.2017 70
மொத்தம் 213

மூன்று நாட்களின் முடிவில் மொத்தம் 213 கட்டுரைகள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

நிறைவாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்கள் அனைவரையும் வாழ்த்திப் பேசி பயிற்சி நிறைவுரை ஆற்றினார். விரிவுரையாளர் புவனேஷ்வரி நன்றி கூற நாட்டுப்பண்னுடன் பயிற்சி இனிதே நிறைவு பெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம்

தொகு
 
குமரி மாவட்ட ஆசிரியர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி வகுப்பு

இரண்டாம் நாள் நிகழ்வு

தொகு

முதல் நாளைய பயிற்சியின் தொடர்ச்சியாக முற்பகல் தேனீர் இடைவேளை வரை சில நுட்பங்களை எடுத்துரைக்கப்பட்டது. அதன் பின்னர் பயனர் பூங்கோதை அவர்களின் காணொளி ஒளிபரப்பப்பட்டது. ஒரு ஆசிரியராக அவரது அனுபவம் பயிலரங்கிற்கு வந்த ஆசிரியர்களுக்கு உத்வேகமாக இருந்தது. அதன் பின்னர் கட்டுரை எழுதும் பயிற்சி கணினியில் வழங்கப்பட்டது. தேவையான ஒத்துழைப்பினை ஆசிரியர்களுக்கு வழங்கினோம். பிற்பகல் நிகழ்வில் கட்டுரை எழுதும் பயிற்சியும் பின்னர் பொதுவகத்தில் புகைப்படத்தைத் தரவேற்றம் செய்வது தொடர்பாகவும் அப்புகைப்படத்தை தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையில் இணைப்பது தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்பட்டது. பகுப்பினை இணைப்பது தொடர்பாக சிறு குறிப்பும் வழங்கப்பட்டது. குறைவான கணினி வளம், குறைவான இணைய வேகம், தமிழ்த் தட்டச்சில் பழக்கமின்மை ஆகியன தடைக் கல்லாக இருந்தன.

தூத்துக்குடி மாவட்டம்

தொகு

இராமநாதபுரம் மாவட்டம்

தொகு

இராமநாதபுரம் மாவட்ட பயிற்சி பரமக்குடி கணபதி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. 30 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.முதல் நாள் நிகழ்ச்சியில் மட்டும் ஹிபாயத்துல்லாவும் ,மூன்று நாள் நிகழ்ச்சியிலும் அரும்புமொழியும் பங்கேற்று பயிற்சியளித்தனர்.புதிய பயனர் கணக்குகள் துவக்கப்பட்டன. விக்கி நெறிகள், வழமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. செய்யக்கூடியன, செய்யக்கூடாதவை பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. ஏன் விக்கியில் புதிய மற்றும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்? என்பன குறித்து தெளிவுபடுத்தப்பட்டது. மாலையில், புதிய கட்டுரைகள் உருவாக்கம் குறித்து படிப்படியாக செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. விக்கி பொதுவகம் பற்றியும் படிமங்களை எவ்வாறு கட்டுரைகளில் பயன்படுத்துவது? என்பது பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. மூன்று நாட்கள் பயிற்சியில் ஆசிரியர்கள் கட்டுரைகளை ஆர்வத்துடன் உருவாக்கினார்கள். பயிற்சி முடிந்த பிறகும் தொடர்ந்து பங்காற்றும் ஆர்வத்துடன் சென்றனர்.

சிவகங்கை மாவட்டம்

தொகு

சிவகங்கை மாவட்ட பயிற்சி காளையார்கோவில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.முதல் இரண்டு நாள் பயிற்சியில் வேலூர் ஆசிரியர்கள் ஜான்சன்,புருசோத்தமன்,சிவகுரு ஆகியோர் பங்கேற்று புதிய பயனர் கணக்குகள் துவக்கி மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உருவாக்க உரிய பயிற்சியளித்தனர். இரண்டு நாள் நிகழ்ச்சியில் மட்டும் ஹிபாயத்துல்லா பங்கேற்று விக்கிப்பீடியா குறித்த ஐயங்களுக்கு உரிய விளக்கமளித்து புதிய கட்டுரைகள் உருவாக்கம் குறித்து படிப்படியாக செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.சொந்தமான எளிய மொழிபெயர்ப்பைக் கையாளவும் வலியுறுத்தப்பட்டது.

தேனி மாவட்டம்

தொகு

தேனியில் தேனி கம்மவர் சங்க பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. 30 ஆசிரியர்கள்வரை கலந்துகொண்டனர். இரண்டாம் நிகழ்ச்சியில் சங்கர், மூன்றாம் நிகழ்ச்சியில் ஹிபாயத்துல்லா ஆகியோர் பங்கேற்று பயிற்சியளித்தனர்,இம்மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான திரு.ஜோசப்,திருமதி.ராஜகுமாரி ஆகியோர் விக்கியைப்பற்றியும்,ஆசிரியர் பயிற்சியை பற்றியும் நன்கு அறிந்தவர்கள் என்பதும் பயிற்சியில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களும் சொந்தமாக கணினி பயன்படுத்தியதும், சொந்தமாக கட்டுரைகளை பதிவேற்றியதும் குறிப்பிடத்தக்கது, வெறும் கட்டுரை எண்ணிக்கை மற்றும் இலக்காக கொள்ளாமல் அவர்களை முழுமை பெற்ற விக்கிப்பீடியராக்க பயிற்சி அளித்ததன் விளைவாக மூன்று நாட்களில் 300 கட்டுரைகளை பதிவேற்றப்பட்டன. பகுப்பிடுவது, பக்க இணைப்பு கொடுப்பது,ஆதாரங்களை இணைப்பது,படங்களை பதிவேற்றுவது குறித்து விளக்கப்பட்டது.சொந்தமான எளிய மொழிபெயர்ப்பைக் கையாளவும் வலியுறுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம்

தொகு

திண்டுக்கல் மாவட்ட பயிற்சி ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. 30 ஆசிரியர்கள்வரை கலந்துகொண்டனர். பெரும்பாலும் கணினி பயன்பாட்டிற்கு பரிச்சயம் குறைவானவர்களே வந்திருந்தனர்.

முதல் நாள்

தொகு

இன்று அனைவருக்கு பயனர் கணக்கு தொடங்கப்பட்டது. கணினி அறை தாமதமாகவே கிடைக்கப்பெற்றதால் அதிக அளவில் பயிற்சி அளிக்க சிரமமிருந்தது.

இரண்டாம் நாள்

தொகு

இன்று ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் தட்டுச்சு செய்வதில் பாமினி, எழுத்துப்பெயர்ப்பு போன்ற உள்ளீட்டு கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டது. ஓரிரு ஆசிரியர்கள் ஈடுபட்டுடன் உடனடியாக புரிந்துகொண்டனர். சிலர் தாமாகவே கற்றுக்கொள்ளதொடன்கினர். அனைவருக்கும் மணற்தொட்டி அறிமுகம் செய்யப்பட்டு அங்கே தங்களது முதல் கட்டுரையை தொடங்க அறிவுறுத்தப்பட்டனர். பிறகு அங்கிருந்து பொதுவெளிக்கு சில கட்டுரைகள் நகர்த்தப்பட்டன. ஆசிரியர்கள் சந்தேகங்கள் கேட்டவண்ணம் இருந்தனர்.

மூன்றாம் நாள்

தொகு

இன்று வேலூர் மாவட்டத்தில் அசத்திய ஆசிரியர் பயனர்கள் கலந்துகொண்டனர். மொழிப்பெயர்ப்பு செய்வது தொடர்பாக ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம்

தொகு

முதல் நாள்

தொகு

பயிற்சியானது அருப்புக்கோட்டை ஸ்ரீ சௌடாம்பிகா பொறியியல் கல்லுாரியில் வைத்து நடைபெற்றது. 27 ஆசிரியர்கள், 3 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்களுடன் 30 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். முதல் நாள் காலை விக்கிப்பீடியர் இரா. பாலா விக்கிப்பீடியா பற்றிய பொதுவான அறிமுகம் குறித்த திரைக்குறிப்புக்காட்சியுடன் விளக்கம் அளித்தார். புதிய பயனர் கணக்குகள் துவக்கப்பட்டன. விக்கி நெறிகள், வழமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. செய்யக்கூடியன, செய்யக்கூடாதவை பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. ஏன் விக்கியில் புதிய மற்றும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்? என்பன குறித்து தெளிவுபடுத்தப்பட்டது. மாலையில், புதிய கட்டுரைகள் உருவாக்கம் குறித்து படிப்படியாக செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. விக்கி பொதுவகம் பற்றியும் படிமங்களை எவ்வாறு கட்டுரைகளில் பயன்படுத்துவது? என்பது பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

இரண்டாம் நாள்

தொகு

பயிற்சியின் இரண்டாம் நாள் தேநீர் இடைவேளை வரையிலும் எவ்வாறு மொழிபெயர்ப்பு செய்யலாம்? விரைவுப்பகுப்பி, ப்ரூவ் இட், Content translation போன்றவை குறித்து அறிமுகம் செய்யப்பட்டு பயன்படுத்தும் முறை தெளிவுபடுத்தப்பட்டது. தேநீர் இடைவேளைக்குப் பின்னர், பங்கேற்பாளர்கள் கட்டுரை பதிவேற்றம் செய்யும் முயற்சிகளைத் தொடங்கினர். கருத்தாளர்கள் மணிவண்ணன் (TNSE MANI VNR),மகாலிங்கம் (TNSE Mahalingam VNR), ரத்தினபாண்டியன் (TNSE Rathnapandin VNR) ஆகியோர் பங்கேற்பாளர்களின் அருகில் சென்று அவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தனர். தமிழில் தட்டச்சு செய்ய இயலாதவர்களுக்கு தமிழ் 99 விசைப்பலகை மாதிரி நகலெடுத்துக் கொடுக்கப்பட்டது. தட்டச்சுப் பயிற்சி மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டனர்.

மூன்றாம் நாள்

தொகு

கூகுள் மொழிபெயர்ப்புக் கருவியை உபயோகப்படுத்தாமலிருக்கவும், சொந்தமான எளிய மொழிபெயர்ப்பைக் கையாளவும் வலியுறுத்தப்பட்டது. பகுப்பு செய்யப்படாத கட்டுரைகள் பகுப்பு செய்யப்பட்டன. பங்கேற்பாளர்களுக்கு அருகில் இருந்து உதவிகள் செய்யப்பட்டன. பதிப்புரிமை மீறல்கள் குறித்த எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பங்கேற்பாளர்கள் கட்டுரைகள் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அண்மைய மாற்றங்கள், உரையாடல் பக்கங்கள், ஒத்தாசைப் பக்கத்தைப் பயன்படுத்துவது, ஏறுவரிசையில் அவரவர் பங்களிப்புகளைப் பார்க்கும் முறை போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன. மூன்றாம் நாள் முடிவில் 141 கட்டுரைகள் பதிவேற்றம் என்ற நிலையில் பயிற்சி முடிவடைந்ததது.

மதுரை மாவட்டம்

தொகு

வேலூர் மாவட்டம்

தொகு