மார்ச் 30 நாள், உங்களுக்குத் தெரியுமா பக்கத்தில் "பொன்னம்பலம் அருணாசலம் மாணிக்கவாசகர் மற்றும் தாயுமானவர் பாடல்களைத் தமிழில் மொழிபெயர்க்க ஜி. யூ. போப்புடன் இணைந்து பணியாற்றினார்." என்றுள்ளது. இதில் தமிழில் என்றிருப்பது 'தமிழிலிருந்து என்றே இருக்கவேண்டும். ஏற்கனவே தமிழிலுள்ள மாணிக்கவாசகர் பாடல்களை மீண்டும் ஏன் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்?

திருத்திவிட்டேன்--சோடாபாட்டில்உரையாடுக 17:19, 3 ஏப்ரல் 2011 (UTC)

ஓ௫ ௮ன்பு வேண்டுகோள்

தொகு

காப்பகத்தின் முதற்பக்கத்தில் அண்மையில் காட்சிப்படுத்தப்பட்டவை மட்டுமே வெளியிடப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு ஒரு மாதத்தில் வெளியிடப்படும் தகவல்கள் மட்டும் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளவும். எ.கா: ஏப்ரல் மாதம் முழுவதும் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டவை மட்டும் இருப்பது நலம். --சூர்ய பிரகாசு.ச.அ. 06:46, 4 ஏப்ரல் 2011 (UTC)

நம்பகத்தன்மை உடையனவா

தொகு

உங்களுக்குத் தெரியுமா பகுதியில் வெளியாகும் தகவல்கள் உண்மையானவையா, நம்பகத்தன்மை உடையனவா என்பதை பரிசோதனை செய்து, பிறகு வெளியிடவும். குறைந்தது ஒரு மேற்கோளோ, குறிப்போ அல்லது சான்றோ இல்லாத தகவல் கருத்தை மக்களிடம் முன்வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:20, 14 அக்டோபர் 2012 (UTC)Reply

குறிப்பாக எந்தத் தகவல் என்பதைச் சுட்டிக் காட்டுங்கள் தினேஷ்குமார். அவற்றை நீக்கலாம்.--Kanags \உரையாடுக 20:07, 14 அக்டோபர் 2012 (UTC)Reply
சினேகிதன் (அமைப்பு) குறித்தே இந்த கவலை, இது அக்கட்டுரைக்கு மட்டுமின்றி பிற சான்று இல்லாக்கட்டுரைகளுக்கும் பொருந்தும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:38, 15 அக்டோபர் 2012 (UTC)Reply
ஆம். இவ்வாறான செய்திகளைத் தவிர்ப்பது நல்லது. இது இப்போது இயங்குவதாகவும் தெரியவில்லை. அதனை நீக்கியிருக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 06:58, 15 அக்டோபர் 2012 (UTC)Reply

தவிர்ப்பது என்ன இடம்பெறவே கூடாது. இதை சஞ்சீவி சேர்த்ததால் நான் கவனியாமல் இருந்துவிட்டேன். இனி இது போல் ஆகாமல் பார்த்துக் கொள்ளலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:03, 15 அக்டோபர் 2012 (UTC)Reply

பயனுடைய தகவல் குறிப்புகள் இடம் பெறுமா?

தொகு

உங்களுக்குத் தெரியுமா? பகுதியில் அரசு பணிகளுக்கான தேர்வுகள், ஆசிரியர் தகுதித் தேர்வுகள் போன்ற போட்டித் தேர்வுக்கு எழுதுபவர்களுக்கு உதவும் விதமாகவும், அரிய செய்திகளை உள்ளடக்கியும் பயனுடைய தகவல் குறிப்புகள் இடம் பெறுவது நல்லது. //தென்காசி பெரிய லாலா கடை 1904ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.// இது போன்ற குறிப்புகளைத் தவிர்க்கலாமே...!--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:15, 30 சூலை 2013 (UTC)Reply

ஆம் ,   விருப்பம் -- நி ♣ ஆதவன் ♦   (உரையாட படத்தை சொடுக்கவும்) 09:36, 30 சூலை 2013 (UTC)Reply
Return to the project page "உங்களுக்குத் தெரியுமா/காப்பகம்".