நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தொகுக்க உறுதியளிக்கிறேன்

அன்புடன் சங்கரய்யா


Apologies for posting in english. But could someone point me to answers/clues to:

  1. What font is used here as the tamil text is showing strangely for me (Mac OS X, Firefox browser, screen shot is [here www.thescian.com/media/ta-wikipedia-sshot.png], I use MaduramTsc font for Mac).
  1. Is there any software that can help me write in tamil on Mac OS X, so I could translate wikipedia pages?

Many thanx. Selva (selvakumar@gmail.com)


Selva,

We use Unicode Tamil font in Wikipedia. I use "ekalappai" software to type. I do not know whether Mac OS X supports Unicode Tamil Fonts. You also have to check whether "ekalappai" would work on Mac OS X. Send a query to the link below. They will be able to help you.

http://groups.yahoo.com/group/e-Uthavi/

Mayooranathan 09:22, 6 மே 2004 (UTC)Reply

தமிழ் விக்கிபீடியா

தொகு

விக்கிபீடியா தளத்தின் மூலம் நிறைய விடயங்களை தெரிந்து கொள்ளலாம் அதுவும் தமிழ் விக்கிபீடியா வசதி இருப்பதால் இன்னும் சுலபம். ஆனால் இன்னும் தமிழ் விக்கிபீடியா முழுமையாக செம்மை படுத்தப்படவில்லை. ஏனெனில் சில வார்த்தைகளுக்கு தமிழ் விக்கிபீடியா இல் கட்டுரைகளோ, அர்த்தங்களோ இல்லை. ஆங்கில விக்கிபீடியா இல் அவற்றுக்கு அர்த்தங்களும் விளக்கங்களும் உண்டு. எனவே நாமும் எம்மால் முடிந்த வரை தமிழ் விக்கிபீடியாவை செம்மை படுத்த வேண்டும். --Mydilan 11:47, 19 பெப்ரவரி 2009 (UTC)Nishanthan.......

எவ்வாறு தொகுப்பது

தொகு

தொகுத்தலுக்கான படிமங்களைத் தரவேற்றியிருக்கிறேன். கீழுள்ளவற்றை செயற்படுத்தவா? எப்படி கருத்திடுவது என்று கீழே படியுங்கள்!! முதலில்:   அடுத்து வரும் பக்கம்,   இதில் எழுதுங்கள்   பிறகு கீழே உள்ளது போல் வரும்.  

உதவுங்கள்! நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:37, 20 அக்டோபர் 2012 (UTC)Reply

மின்னஞ்சல்

தொகு

ஒருவேளை புதியவர்களுக்கு இங்குள்ள நடைமுறைகளைப் புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கலாம். தொகுத்தலிலோ, தமிழில் தட்டச்சிடுவதற்கோ பயமாய், தெரியாமல் இருக்கலாம். எனவே, கூகுள் குழுக்களில் நாமும் சேர்ந்து கொள்ளலாமே! அம்மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பச் சொன்னால், நாம் அனைவரும் பார்த்துக் கொள்ள முடியும். செயல்படுத்துங்களேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:12, 21 அக்டோபர் 2012 (UTC)Reply

இந்தப் பக்கத்தில் யாரும் கருத்து தெரிவிக்கிற வழியைக் காணோம் என்பதால் :( தமிழ் விக்கிப்பீடியாவின் துவிட்டர், முகநூல் இணைப்புகளைத் தள அறிவிப்பில் தந்து பார்க்கலாம் என நினைக்கிறேன். குழுமம், மின்மடல் ஆகியவற்றைக் காட்டிலும் இது கருத்துகளைப் பகிர இலகுவாக இருக்கும்.--இரவி (பேச்சு) 21:16, 24 அக்டோபர் 2012 (UTC)Reply
இரவி, முகநூலில் கணக்கு வைத்திருக்கும் விக்கிப்பீடியர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கும் குறுங்கட்டுரைகளில் ஏதாவது ஒரு குறுங்கட்டுரையைப் பற்றிய சிறு குறிப்பையும், அதற்கான இணைய முகவரியையும் கொடுத்து, இக்கட்டுரைக்கான கூடுதல் தகவல் தெரிந்தவர்கள் கட்டுரையை விரிவுபடுத்த முன் வரலாம் என அவருக்கான பக்கத்தில் சிறு செய்தியைப் பகிரலாம். அவருடன் நட்புத் தொடர்பிலிருப்பவர்கள் எவராவது இதைக் கொண்டு விக்கிப்பீடியாவிற்குள் வரலாம். கட்டுரையை மேம்படுத்த முயற்சிக்கலாம். குறைந்தது, அவர்கள் தமிழ் விக்கிப்பீடியா குறித்தாவது தெரிந்து கொள்ளலாம். நான் என்னுடைய முகநூல் கணக்கில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கட்டுரையைப் பகிர்ந்துள்ளேன். ஏதாவது பயனளிக்கிறதா? என்று பொறுத்திருந்து பார்ப்போம். (இக்கட்டுரையையின் பக்கம் பார்வையிட்ட புள்ளிவிவரம் (அலங்காநல்லூர்_ஜல்லிக்கட்டு has been viewed 88 times in 201210.) என்று தற்போது உள்ளது.)--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 11:08, 25 அக்டோபர் 2012 (UTC)Reply

எனக்கென்னவோ நாம் விட்ட தள அறிவிப்பை ஒழுங்காக அனைவரும் பார்க்க முடிகிறதா என்பதில் ஐயமுளது. நாம் தள அறிவிப்பில் வெளியிட்ட வரி எட்டாவதாக உள்ளது. அது அவ்வளவு பேர் கவனத்தையும் பெருமா என்பது சந்தேகமே.

தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்து, ஆலோசனைகளை வரவேற்கிறோம்.

இந்த வரியை பிளாஷ் போல் விட்டு விட்டு வரச்செய்ய வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:31, 27 அக்டோபர் 2012 (UTC)   விருப்பம் அதுமட்டுமின்றி புதிது என்று மின்னச்செய்தால் கவனத்தை அதிக அளவில் ஈர்க்கும்.-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:34, 27 அக்டோபர் 2012 (UTC)Reply

மீப்பாடக் குறிமொழியில் <blink> என்ற அடையாள ஒட்டு அதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. விக்கிப்பீடியாவிலும் அவ்வாறு செய்ய முடியுமா? --மதனாகரன் (பேச்சு) 08:36, 27 அக்டோபர் 2012 (UTC)Reply
மின்னச் செய்வது, இட வலமாக ஓட விடுவது ஆகியவை காலாவதியான வலை வடிவமைப்புக் கூறுகள். தவிர, விக்கிமீடியா தளங்களுக்கு என பொதுவான சில வடிவமைப்பு வழக்கங்கள் உள்ளன. நமது முயற்சிகள் அவற்றுக்கு ஒத்திசைந்து இருப்பது நல்லது. தற்போது இந்த அறிவிப்பை ஒரு பெட்டிக்குள் இட்டுள்ளேன். மீடியாவிக்கி:anonnoticeலும் இட்டுள்ளேன். முன்பு இதனைச் செய்ய மறந்து விட்டேன். கூடுதல் கவனிப்பு கிடைக்கிறதா என்ற சற்று பொறுத்திருந்து பார்ப்போம்--இரவி (பேச்சு) 15:31, 27 அக்டோபர் 2012 (UTC)Reply

பங்களிப்பாளர்கள் ஆலமரத்தடியிலேயே உரையாடலாம்

தொகு

இந்தப் பக்கம் புதிய பயனர்கள், வாசகர்களின் கருத்தை அறியவே. ஏற்கனவே பங்களித்து வருபவர்கள் தங்கள் கருத்துகளை ஆலமரத்தடியிலோ வேறு பொருத்தமான பக்கத்திலோ இடலாமே?--இரவி (பேச்சு) 18:27, 27 அக்டோபர் 2012 (UTC)Reply

Return to the project page "கலந்துரையாடல்".