விக்கிப்பீடியா பேச்சு:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - நான்காம் காலாண்டு 2023
தரவு அறிவியல்
தொகு@உலோ.செந்தமிழ்க்கோதை: வணக்கம் ஐயா. தங்களின் பார்வைக்கு: தரவு அறிவியல் கட்டுரை கூகுள் தமிழாக்கக் கருவி வாயிலாக உருவாக்கப்படவில்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:25, 4 அக்டோபர் 2023 (UTC)
- சரிபார்த்துத் தக்கதைச் செய்கிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 04:05, 6 அக்டோபர் 2023 (UTC)
தரவு அறிவியல் கட்டுரையைச் செம்மைப்படுத்தல் பதிவுப்பட்டியலில் இருந்து நீக்கிவிட்டேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:45, 7 அக்டோபர் 2023 (UTC)
செயற்கை அறிதிறன்
தொகு@உலோ.செந்தமிழ்க்கோதை: ஐயா, செயற்கை அறிதிறன் கட்டுரையும் கூகுள் தமிழாக்கக் கருவி வாயிலாக உருவாக்கப்படவில்லை. எனவே கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில், வார்ப்புருவை நீக்கிவிடுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:10, 4 அக்டோபர் 2023 (UTC)
- செயற்கை அறிவுத்திறன் என இது கூகுள் மொழிபெயர்ப்பில் உள்ளது. கவனிக்கவும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 04:05, 6 அக்டோபர் 2023 (UTC)
@உலோ.செந்தமிழ்க்கோதை: ஐயா, இப்போது புரிந்துகொண்டேன். இன்று ஒன்றிணைக்கிறேன். ஒரு ஐயம்: ஒன்றிணைத்தபிறகு, செயற்கை அறிதிறன் என இருக்கவேண்டுமா அல்லது செயற்கை அறிவுத்திறன் என இருக்கவேண்டுமா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:45, 7 அக்டோபர் 2023 (UTC) 'செயற்கை அறிதிறன் தான் திருத்திய சரியானகட்டுரை. அது தன் இருக்கவேண்டும். செயற்கை அறிவுத்திறன் திருத்தப்படாத்து. இதை வரலாறு அழியாமல் நீக்கவேண்டும். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:42, 7 அக்டோபர் 2023 (UTC)
தரவுப் பாய்வு வரைபடம்
தொகுதரவுப் பாய்வு வரைபடம் என்பது தான் தரவு போக்கு வரைபடம் என்பதன் திருத்திய கூகுள் கட்டுரை வடிவம். எனவே பின்னதை வரளாரு அழியாமல் புதுக் கட்டுரைக்கு மாற்றிவிட்டு பிறகு நீக்கவேண்டும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:49, 7 அக்டோபர் 2023 (UTC)
பரிந்துரை
தொகுகூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்தும் பணி என்பது சோர்வினைத் தருவதாகும். இந்தக் கட்டுரைகள் ஒரு திட்டத்தின்கீழ் அக்காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால், நீக்கவும் இயலாது. இக்கட்டுரைகளை செம்மைப்படுத்தி, குறைந்தபட்சம் சிறியக் கட்டுரைகளாக தக்கவைப்பதே நியாயம்.
இந்தக் காலாண்டிற்கான பணியின்போது, இரு பயனர்களின் செயல்முறைகள் கவனித்தக்கவையாக உள்ளன. இச்செயல்முறைகளின் வாயிலாக செம்மைப்படுத்துதல் பணியை துரிதப்படுத்த இயலும் எனத் தோன்றுகிறது. செயல்முறைகளை இங்கு விளக்கியுள்ளேன். மற்றப் பயனர்களின் கருத்துகளின் அடிப்படையில், இந்தச் செயல்முறைகளை வழிகாட்டல்களாக திட்டப் பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடலாம்.
- செந்தமிழ்க்கோதை ஐயா அவர்கள் நிறுவன மேம்பாடு கட்டுரையில் செய்திருப்பதைப் போன்று: மொழிபெயர்ப்புக் கருவி வாயிலாக புதிதாக மொழிபெயர்த்து நேரடியாகவே overwrite செய்தல்
- பாலு ஐயா அவர்கள் நீல் நிதின் முகேஷ் ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்ப்புக் கருவி வாயிலாக புதிதாக மொழிபெயர்த்து பயனர்:Balu1967/நீல் நிதின் முகேஷ் என அவரின் மணற்தொட்டியில் உள்ளடக்கத்தை இட்டார் . சிறுதிருத்தங்களை மணற்தொட்டியில் செய்தார். இறுதியாக அங்குள்ள உள்ளடக்கத்தை கூகுள் கட்டுரையில் replace செய்தார். செயல் 1 & செயல் 2, செயல் 3
நன்மைகளாக நான் கருதுவது:
- தகவல்கள் இற்றைப்படுத்தப்பட்டவையாக இருக்கும்.
- கூகுள் கட்டுரையின் முந்தைய வரலாறு அனைத்தும் அப்படியே இருக்கும்.
சாதக பாதகங்கள் குறித்து, பயனர்களின் கருத்துகளை வேண்டுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:01, 8 அக்டோபர் 2023 (UTC)