தரவு அறிவியல்

தரவு அறிவியல் (data science) என்பது கூடிய அளவில் உள்ள கட்டமைக்கப்பட்ட அல்லது கட்டமைக்கப்படாத தரவுகளை ஒருங்கிணைத்து அவற்றிலிருந்து அறிவைப் பிரித்தெடுக்கும் முறையாகும்.[1][2] இது தரவுச் செயலாக்கம், முன்னறிவிக்கும் பகுப்பாய்வு ஆகிய துறைகளின் தொடர்ச்சியாகும். இது அறிவுக்கண்டுபிடிப்பும் தரவுச் செயலாக்கமும் என்ற வகையைச் சார்ந்ததாகும். கூடிய அளவிலான தகவல்களை ஒருங்கிணைத்துத் தரம் பிரித்து அவற்றிலிருந்து தரவுகளைப் பிரித்தெடுக்கும் வழிமுறைகளைத் தருவது தரவு அறிவியல் ஆகும்.

முன்னுரைதொகு

தரவு அறிவியல் கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், தரவுச் செயலாக்கம் போன்ற பல்வேறு துறைகளிலிருந்து கோட்பாடுகளையும், தொழினுட்பங்களையும் பயன்படுத்துகிறது. தரவு அறிவியலின் ஒரு முக்கியமான பிரிவு பெரிய தரவு ஆகும்.

உழவு, சந்தைப்படுத்தலை மேம்படுத்தல், மோசடிகளைக் கண்டுபிடித்தல் போன்ற சிக்கல்களை ஆராய, தரவுத் தயார்ப்படுத்துதல், புள்ளியியல், இயந்திரக் கற்றல் போன்ற துறைகளைத் தரவு அறிவியல் பயன்படுத்துகிறது.

தரவு விஞ்ஞானிகள் தங்களின் திறனைப் பயன்படுத்தி தரவு மூலத்தை கண்டுபிடித்து விளக்கவும், வன்பொருள், மென்பொருள் மற்றும் அலைவரிசை தடைகள் இருந்தபோதிலும் அதிக அளவிலான தரவுகளை நிர்வகிக்கவும், தரவுகளுக்கான ஆதாரங்களை இணைக்கவும், தரவுகளின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், தரவுகளை புரிந்து கொள்வதற்கு உதவியாக காட்சிப்படங்களை உருவாக்கவும், தரவுகளைப் பயன்படுத்தி கணித மாதிரிகளை கட்டமைக்கவும் மற்றும் தரவுகளைப்பற்றிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள்.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரவு_அறிவியல்&oldid=2756643" இருந்து மீள்விக்கப்பட்டது