நேட் சில்வர்
நேட் சில்வர் (Nate Silver, பிறப்பு: ஜனவரி 13, 1978) ஒரு அமெரிக்கப் புள்ளியியலாளர், தேர்தல் கணிப்பியிலாளர், அடிப்பந்தாட்ட புள்ளியியலாளர், எழுத்தாளர். 2008, 2012 ம் ஆண்டுகளின் ஐக்கிய அமெரிக்கத் தேர்தல் முடிவுகளைப் புள்ளியியல் அடிப்படையில் சரியாகக் கணித்ததனால் புகழ் பெற்றவர்.
நேட் சில்வர் | |
---|---|
2009 இல் நேட் சில்வர் | |
பிறப்பு | நத்தேனியல் ரீட் சில்வர் சனவரி 13, 1978[1] ஈஸ்ட் லான்சிங், மிச்சிகன் |
இருப்பிடம் | புரூக்ளின், நியூ யார்க் நகரம் |
தேசியம் | அமெரிக்கர் |
கல்வி | இளங்கலைப் பட்டம் (பொருளியல், 2009) |
படித்த கல்வி நிறுவனங்கள் | சிக்காகோ பல்கலைக்கழகம் இலண்டன் பொருளியல் பள்ளி |
பணி | புள்ளியியலாளார், இதழாளர் |
அறியப்படுவது | பெக்கோட்டா, ஃபைவ்தர்ட்டிஎய்ட்.காம் |
வலைத்தளம் | |
fivethirtyeight.blogs.nytimes.com |
சில்வர், பெக்கோட்டா (PECOTA) எனும் அடிப்பந்தாட்ட புள்ளியியல் கணிப்பு முறைமையை உருவாக்கியதன் மூலம் முதன் முதலில் புகழ் பெற்றார்.[2] இம்முறைமை அடிப்பந்தாட்டக்காரர்களின் வருங்கால செயல்திறனைக் கணிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. இதனை பேஸ்பால் புராஸ்பெகடஸ் என்ற நிறுவனத்துக்கு விற்ற சில்வர் அந்நிறுவனம் சார்பாக 2003-09 காலகட்டத்தில் இதனை நிருவகிக்கவும் செய்தார்.[3]
சில்வர் 2007 ஆம் ஆண்டு ”டெய்லிகோஸ்” என்னும் அரசியல் வலைத்தளத்தில் 2008 அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றிய தனது ஆய்வுகளையும் கணிப்புகளையும் எழுதத் தொடங்கினார். அதற்கு ”போப்லானோ” ("Poblano") எனும் புனைப்பெயரைப் பயன்படுத்தினார். ஹிலாரி கிளிண்டன், பராக் ஒபாமா இடையேயான மக்களாட்சிக் கட்சியின் உட்கட்சித் தேர்தல் முடிவுகளைக் கணிப்பதில் அவர் கண்ட வெற்றிகள் அவரது புகழைப் பரப்பின. பின் மார்ச் 2008 இல் ”ஃபைவ்தர்ட்டிஎய்ட்.காம்” (FiveThirtyEight.com) என்ற தனி வலைப்பதிவைத் தொடங்கி தன் இயற்பெயரிலேயே கணிப்புகளையும் ஆய்வுகளையும் வெளியிடத் தொடங்கினார். அமெரிக்க வெகுஜன ஊடகங்களும் அவரது கணிப்புகளை மேற்கோள் காட்டத் தொடங்கின. 2008 ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலைக் கணிப்பதில் சில்வருக்கு பெரும் வெற்றி கிட்டியது. 50 அமெரிக்க மாநிலங்களில் 49 இல் அவரது தேர்தல் கணிப்புகள் சரியாக இருந்தன. மேலும் அமெரிக்க நாடாளுமன்ற மேலவைக்கு தேர்தல் நடைபெற்ற 35 இடங்களிலும் சில்வர் கணித்தது போலவே தேர்தல் முடிவுகள் இருந்தன. சில்வரின் வெற்றி தேர்தல் கணிப்புத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஏப்ரல் 2009 இல் டைம் இதழின் ”உலகின் 100 கூடிய தாக்கமுடைய மாந்தர்” பட்டியலில் சில்வர் இடம்பெற்றார்.[4] 2010 இல் சில்வரின் வலைப்பதிவை இணையத்தில் வெளியிடும் உரிமையை நியூயார்க் டைம்ஸ் வாங்கியது.[5][6][7] 2012 இல் சில்வரின் வலைப்பதிவுக்கு “சிறந்த அரசியல் வலைப்பதிவு”க்கான வெப்பி விருது வழங்கப்பட்டது. செப்டம்பர் 2012 இல் சில்வர் எழுதிய ”தி சிக்னல் அண்ட் தி நாய்ஸ்” (The Signal and the Noise) என்ற அபுனைவு புத்தகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அமேசான்.காம் தளத்தில் 2012 மிக அதிக அளவில் விற்பனையான அபுனைவு புத்தகங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றது.[8]
பராக் ஒபாமாவும் மிட் ராம்னியும் போட்டியிட்ட 2012 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் சில்வரின் கணிப்புகள் பெரும் வெற்றி பெற்றன. இம்முறை 50 அமெரிக்க மாநிலங்களின் தேர்தல் முடிவுகளையும் சில்வர் சரியாகக் கணித்திருந்தார்.[9] தேர்தல் நடைபெற்ற 33 மேலவைத் தொகுதிகளில் 31 இன் முடிவுகள் சிலவரது கணிப்பை ஒத்திருந்தன. 2014ஆம் ஆண்டு சில்வர் நியூயார்க் டைம்ஸ் நிறுவனத்திலிருந்து விலகி ஈஎஸ்பிஎன் குழுமத்தின் ஆதரவுடன் ஒரு புது வலைத்தளத்தைத் தொடங்கினார்.[10]
குறிப்புகள்
தொகு- ↑ "Nate Silver tweet". Twitter.com. August 13, 2010. பார்க்கப்பட்ட நாள் 2012-08-21.
- ↑ Alan Schwarz, "Numbers Suggest Mets Are Gambling on Zambrano", The New York Times, August 22, 2004; Alan Schwarz, "Predicting Futures in Baseball, and the Downside of Damon", The New York Times, November 13, 2005; Childs Walker, "Baseball Prospectus Makes Predicting Future Thing of Past," Baltimore Sun, February 21, 2006; Rich Lederer, "An Unfiltered Interview with Nate Silver", Baseball Analysts, February 12, 2007; Tim Murphy, "Timeout with Nate Silver: BP's VP illuminates the sport's fuzzy numbers", Chicago Maroon, May 11, 2007; Steven D. Levitt, "Freakonomics: More on Roger Clemens", The New York Times, February 18, 2008; and Michael Miner, "The Algorithm Method: Hot Type's coveted Golden BAT award goes to a computer program", Chicago Reader, March 27, 2008 பரணிடப்பட்டது 2008-04-06 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Nate Silver and Kevin Goldstein, "State of the Prospectus: Spring 2009," BaseballProspectus.com, March 24, 2009.
- ↑ Stein, Joel. "The World's Most Influential People – The 2009 TIME 100". TIME இம் மூலத்தில் இருந்து 2009-05-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090508170110/http://www.time.com/time/specials/packages/0,28757,1894410,00.html. பார்த்த நாள்: 2009-05-08.
- ↑ Nate Silver, "FiveThirtyEight to Partner with New York Times," FiveThirtyEight.com, June 3, 2010 பரணிடப்பட்டது 2010-06-06 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Brian Stelter, "Times to Host Blog on Politics and Polls," The New York Times, June 3, 2010.
- ↑ Silver, Nate. "FiveThirtyEight: Nate Silver's Political Calculus". Fivethirtyeight.blogs.nytimes.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-21.
- ↑ Amazon #1 of 2012
- ↑ Hough, Andrew (November 7, 2012). "Nate Silver: politics 'geek' hailed for Barack Obama wins US election forecast". The Telegragh. பார்க்கப்பட்ட நாள் November 8, 2012.
- ↑ Data Wizard Nate Silver's New Site Launches Under ESPN Ownership