இலரி கிளின்டன்

(ஹிலாரி கிளிண்டன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலரி டயான் ரோட்டம் கிளின்டன் (Hillary Diane Rodham Clinton) என்பவர் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பெண் அரசியல்வாதி ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் முதற்பெண்ணாக 1993 முதல் 2000 வரையும், மேலவை உறுப்பினராக 2001 முதல் 2009 வரையும் 67வது வெளியுறவுத்துறை செயலாளராக 2009 முதல் 2013 வரையும் பொறுப்பு வகித்துள்ளார். மேலும் 2016ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டோனால்ட் டிரம்ப்பிடம் தோல்வியுற்றார்.[1]

இலரி கிளின்டன்
ஐக்கிய அமெரிக்காவின் 67வது வெளியுறவு அமைச்சர்
பதவியில்
சனவரி 21, 2009 – பிப்ரவரி 1, 2013
குடியரசுத் தலைவர்பராக் ஒபாமா
Deputyவில்லியம் பர்ன்ஸ் (2011-நடப்பு)
ஜேம்ஸ் ஸ்டீன்பெர்க்(2009-2011)
முன்னையவர்காண்டலீசா ரைஸ்
பின்னவர்ஜான் கெர்ரி
ஐக்கிய அமெரிக்க மேலவையின் உறுப்பினர் (நியூ யார்க்)
பதவியில்
ஜனவரி 3, 2001 – 2009
முன்னையவர்தானியேல் பட்ரிக் மொய்நிகான்
பின்னவர்லாரா புஷ்
ஐக்கிய அமெரிக்காவின் முதற்பெண்
பதவியில்
ஜனவரி 20, 1993 – ஜனவரி 20, 2001
முன்னையவர்பார்பரா புஷ்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்அமெரிக்கர்
உயரம்174 cm
துணைவர்பில் கிளின்டன்
பிள்ளைகள்செல்சியா கிளின்டன்
முன்னாள் கல்லூரிவெஸ்லி கல்லூரி
யேல் பல்கலைக்கழகம்
தொழில்வழக்கறிஞ்சர், அரசியல்வாதி
கையெழுத்து

தொடக்கக்கால வாழ்க்கை

தொகு

இலினொய் மாநிலத்தைச் சேர்ந்த இலரி[2] 1973 ஆம் ஆண்டு யேல் பல்கலைக்கழகச் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். 1975 ஆம் ஆண்டு பில் கிளின்டனை மணந்து ஆர்க்கன்சஸ் மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தார். அங்கே காங்கிரஸ் சட்ட அலோசகராக பணியாற்றினார். இதன் பின் 1979 ஆம் ஆண்டில் றொசு சட்ட நிறுவனத்தில் முதல் பெண் பங்காளராக அறிவிக்கப்பட்டார். 1983, 1992 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்காவின் 100 பலமிக்க வழக்கறிஞர்களுள் ஒருவராக அறிவிக்கப்பட்டார். 1979 முதல் 1981 வரையும் 1983 முதல் 1992 வரையும் ஆர்கன்சஸ் மாநிலத்தின் முதன் பெண்ணாக குழந்தைகளின் பராமரிப்புத் தொடர்பான பல நிறுவனங்களிலும் பணியாற்றினார். மேலும் வோல் மார்ட் உட்பட சில வியாபார நிறுவனங்களின் இயக்குநர் அவையிலும் பங்காற்றினார்.

அரசியல்

தொகு

ஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண்ணாக கொள்கை விடயங்களில் முன்னணியில் இருந்து செயற்பட்டார். 1994 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் மேலவை அங்கீகாரம் மறுத்த கிளின்டன் சுகாதாரத் திட்டம் (Clinton health care plan) இவரது முக்கிய பங்களிப்பாகும். ஆனால் 1997 ஆம் ஆண்டு அரச குழந்தைகள் காப்புறுதித் திட்டம் (State Children's Health Insurance Program), தத்தெடுத்தல் மற்றும் பாதுகாப்பான குடும்பத்திட்டம் (Adoption and Safe Families Act) என்பவற்றை நிறுவினார்.[3][4] 1996 ஆம் ஆண்டு வைட்வாட்டர் சர்ச்சையின் காரணமாக நீதிமன்றில் தோன்றும் படி நீதிமன்றம் ஆணை பிறபித்திருந்தது. இவ்வாறு கோரப்பட்ட ஒரே அமெரிக்க முதன் பெண் இவராவார். கணவரான பில் கிளின்டனின் அதிபர் பதவிக்காலத்தில் நடந்ததாகக் கூறப்பட்ட சில சீர்கேடுகள் தொடர்பாக இவர் விசாரிக்கப்பட்டாலும் ஒன்றிலும் குற்றஞ்சாட்டப்படவில்லை. 1998 ஆம் ஆண்டு லெவீன்ஸ்கி சர்ச்சையின் போது இவரது மணவாழ்க்கை கேள்விக்குறியாக காணப்பட்டது.

2000 ஆம் நியூ யார்க்க்குக்கு இடம் பெயர்ந்து 2000 ஆம் அம்மாநிலம் சார்பான முதல் பெண் மேலவை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அமெரிக்க முதல் பெண்ணொருவர் பெரிய கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டதும் இதுவே முதல் முறையாகும். மேலவை உறுப்பினராக இச்யார்ச் புச்சின் ஆட்சியில் சில வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு ஆதரவாக வாக்களித்தார். ஈராக் போர்த் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த இலரி பின்னர் அதனை எதிர்த்தார். மேலும் இச்யார்ச் புச்சின் உள்நாட்டுக் கொள்கைகளை இவர் பலமாக எதிர்த்தார். 2006 ஆம் ஆண்டு மீண்டும் மேலவைக்கு தெரிவுச் செய்யப்பட்டார். 2008 அதிபர் தேர்தலின் போது மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளாராக வரும் வாய்ப்பு இலரிக்கு காணப்படுவதாக நாடு தழுவிய கருத்துக் கணிப்புகள் காட்டினாலும் பராக் ஒபாமாவால் தோற்கடிக்கப்பட்டார்.[5] 2009 ஆண்டு ஒபாமா அமைச்சரவையில் அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Hillary Rodham Clinton". PBS. பார்க்கப்பட்ட நாள் December 2, 2014. Clinton had the first postgraduate degree through regular study and scholarly work. Eleanor Roosevelt had been previously awarded a postgraduate honorary degree. Clinton's successor Laura Bush became the second first lady with a postgraduate degree
  2. "Hillary Clinton's favorite home state(s)". சிஎன்என். பார்க்கப்பட்ட நாள் சனவரி 28, 2017.
  3. Smith, Sally Bedell (2007). For Love of Politics: Inside the Clinton White House. Random House. p. 117. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4000-6324-8.
  4. Gergen, David (2000). Eyewitness to Power: The Essence of Leadership Nixon to Clinton. Simon & Schuster. p. 280.
  5. "Democratic Convention 2008". The Green Papers. பார்க்கப்பட்ட நாள் March 7, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலரி_கிளின்டன்&oldid=4160557" இலிருந்து மீள்விக்கப்பட்டது