விக்கிப்பீடியா பேச்சு:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்
@Balurbala and Info-farmer: மாவட்டப் புள்ளிவிவரங்கள் தற்போது உள்ளது போல் தனித்தனியாகப் பெரிய எழுத்துகளில் இல்லாமல், இங்குள்ளது போல வரிசைப் படுத்தக்கூடிய அட்டவணையாக மாற்றி அமைக்க வேண்டும். இரவி (பேச்சு) 14:31, 29 சூன் 2017 (UTC)
- ஆயிற்றுஇரவி (பேச்சு) 04:32, 30 சூன் 2017 (UTC)
அடுத்த கட்டத் திட்டமிடல்
தொகுவணக்கம். நடைபெற்று முடிந்துள்ள ஆசிரியர் பயிற்சிகளின் அடுத்த கட்டம் குறித்து திட்டமிட வரும் சூலை 15, சென்னையில் உள்ள தமிழக அரசு கல்வித் துறை அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள இயலும் அனைத்து விக்கிப்பீடியர்களையும் அழைக்கிறார்கள். மேலும் விவரங்களுக்கு, என்னைத் தொலைப்பேசி, மின்மடல் வழியாகத் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அனைவரும் இங்கு கருத்துகளை இட்டால் அவற்றைத் தொகுத்து கல்வித் துறைக்குத் தெரியப்படுத்தி அதன் அடிப்படையில் அடுத்த கட்டத்தைத் திட்டம் இடலாம். என் கருத்துகள் கீழே:
- நாம் தற்போது வந்துள்ள கட்டுரைகளின் துப்புரவை முடித்து இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை புதிதாக ஆசிரியர்கள் எவருக்கும் பயிற்சிகள் அளிக்க வேண்டாம்.
- ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட எவரும் திடுமென விக்கிப்பீடியாவில் சேரும் வகையிலான திட்டங்களைத் தவிர்க்க வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் வேண்டாம். கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகள் சேர்ப்பது என்பதைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் தேர்ந்த விக்கிப்பீடியர்களைச் சேர்ப்பதே விக்கிப்பீடியாவுக்கு வலுவான அடித்தளம் அமைக்கும். இவ்வாறு தேர்ந்த விக்கிப்பீடியர்கள் மெருகேற போதிய காலமும் பயிற்சியும் வேண்டும்.
- ஏற்கனவே பயிற்சி பெற்று சிறப்பாகப் பங்களிக்க வாய்ப்புள்ளவர்களாக நாம் இனங்கண்டு தெரிவிப்போருக்கு அரசு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கலாம்.
- ஏற்கனவே பயிற்சி பெற்று சிறப்பாகப் பங்களிக்க வாய்ப்புள்ளவர்களாக நாம் இனங்கண்டு தெரிவிப்போருக்குக் கூடுதல் சிறப்புப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யலாம். இது மாவட்டத்துக்கு இருவர் என்ற கணக்கில் 70 பேர் வரை அமையலாம். இவர்கள் மேலும் புதிய கட்டுரைகளை உருவாக்காமல், விக்கிப்பீடியாவின் முறைகளை உள்வாங்கி துப்புரவுப் பணியில் உதவுமாறு பயிற்சி அமைதல் வேண்டும். அவர்கள் வீட்டில் இருந்தும் தொடர்ந்து பங்களிக்க ஏதுவாக அவர்களுக்குக் கணினி, இணைய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
- இத்தகைய சிறப்புப் பயிற்சி பெற்றோர் முழு நேரம் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கும் வகையில் அவர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு (மூன்று முதல் ஆறு மாதம்) மாற்றுப் பணி ஏற்பாடுகளைச் செய்து தரலாம்.
- தமிழக அரசு கட்டற்ற உரிமத்தில் அறிவித்த பல்வேறு கலைக்களஞ்சியத் தன்மை மிக்க உள்ளடக்கங்களை (எடுத்துகாட்டு: வாழ்வியற் களஞ்சியம்) விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்சனரி ஆகிய திட்டங்களில் சேர்க்கும் வகையில் சிறப்புப் பணிக்குழு அமைத்து விரைந்து இவற்றைச் சேர்க்க ஆவன செய்யலாம்.
மேலே கண்டவை என் தனிப்பட்ட கருத்துகளே. அனைத்து விக்கிப்பீடியரின் கருத்துகளையும் அறிந்து அவற்றைத் தொகுத்து கல்வித் துறையிடம் முன் வைப்போம். நன்றி. --இரவி (பேச்சு) 07:36, 12 சூலை 2017 (UTC)
இற்றை
தொகு- ஆய்வுக் கூட்டம் நேற்று இனிதே நிறைவு பெற்றது. விக்கிப்பீடியா சார்பாக பாலா, அம்மார், மூர்த்தி, சீனிவாசன், நீச்சல்காரன், பரிதிமதி கலந்து கொண்டோம். மணி. கணேசன், ரமேஷ், பசீர், சங்கர், தியாகு, சுரேந்திரன், மகாலிங்கம் உட்பட ஆசிரியர்களும் விரிவுரையாளர்களும் பலர் கலந்து கொண்டனர். இது வரை நடைபெற்ற பயிற்சிகளின் நிறை, குறைகள் அலசப்பட்டன. இதனைச் சிறப்பாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல என்ன செய்யலாம் என்று உரையாடினோம்.
- தற்போது பயிற்சி பெற்றவர்களில் ஆர்வத்துடனும் திறமுடன் பங்களிக்கும் 25 பேருக்கு மேலும் சிறப்புக் கூடுதல் பயிற்சிகள் வழங்குதல், அவர்கள் கூடுதல் பங்களிக்கத் தேவையான உதவிகள், ஊக்குவிப்புகள் முதலிய வலியுறுத்தப்பட்டன.
- மேலும் புதிதாக யாருக்கும் பயிற்சிகள் வழங்க வேண்டாம் என்று வலியுறுத்திக் கூறப்பட்டது. அதனை பள்ளிக்கல்வித் துறையினரும் ஏற்றுக் கொண்டனர்.
- ஆசிரியர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினோம். ஏற்கனவே சிலர் துப்புரவுப் பணியைத் தொடங்கியுள்ளார்கள்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் நன்றாகப் பங்களிக்கும் 10 பேரை அடையாளம் கண்டு அவர்களை மட்டும் குறைந்தது 10 நாட்கள் விக்கிப் பங்களிப்புகள் செய்ய ஊக்குவிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. துப்புரவுச் சுமையைக் குறைக்க இது பல சுற்றுகளாக நடைபெறும். இந்த நிகழ்ச்சி செப்தம்பருக்குப் பிறகு ஏற்பாடு ஆகலாம்.
- பள்ளி மாணவர்களுக்கு விக்கிப்பீடியா விழிப்புணர்வு கூட்ட மாதம் ஒரு நாள் ஒரு பாட வேளையை விக்கிப்பீடயா வகுப்பறையாக அறிவித்து விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் தேடிப் படிக்க ஊக்குவிக்கப் பரிந்துரைத்தோம்.
கூடுதல் விவரங்கள் துறை சார் அறிவிப்புகள் வரும் போது பகிர்கிறேன். --இரவி (பேச்சு) 10:25, 16 சூலை 2017 (UTC)
- விருப்பம்--த♥உழவன் (உரை) 03:13, 17 சூலை 2017 (UTC)
விக்கிப்பீடியா பேச்சு:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு சிறந்த எண்ணக்கரு. ஒட்டு மொத்தமாகப் பார்த்த போது மலைப்பாகா இருந்தது. இப்படிப் பிரித்து அணுகும்போது இலகுவாக உள்ளது. கூகிள் கட்டுரைகல் போல் அல்லாமல் பெரும்பாலானவை சிறிய கட்டுரைகள், எனவே விரைந்து முடிக்கலாம் என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 14:58, 18 சூலை 2017 (UTC)
கட்டுரை எண்ணிக்கை
தொகுஇரவி, இவ்வட்டவணையில் தொடங்கிய கட்டுரைகளின் எண்ணிக்கைக்குள் துப்புரவு செய்யப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை, மற்றுமுள்ள துணைப் பகுப்புகளின் எண்ணிக்கையும் அடங்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தின் தொடங்கிய கட்டுரைகளின் எண்ணிக்கையில் அப்பகுப்பில் உள்ள அனைத்து துணைப் பகுப்பின் எண்ணிக்கையும் சேர்க்கப்படவில்லை. தொடங்கிய கட்டுரைகளின் எண்ணிக்கை 64 எனக் காட்டுகிறது.--Booradleyp1 (பேச்சு) 15:55, 13 சூலை 2017 (UTC)
- Booradleyp1, ஆம், கணக்கிடும் முறையை இற்றைப்படுத்த வேண்டியிருக்கிறது. சுட்டிக் காட்டியதற்கு நன்றி. --இரவி (பேச்சு) 02:42, 15 சூலை 2017 (UTC)
DIET விரிவுரையாளர்கள் கட்டுரைகள்
தொகுஅண்மைய மாற்றங்களில் DIET என்று பயனர் பெயரில் அமைந்துள்ள பயனர்களின் பங்களிப்புகளைக் கவனியுங்கள். இவர்கள் வரும் நாட்களில் இன்னும் சில நூறு கட்டுரைகளாவது உருவாக்குவார்கள். எனவே, அவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் போதே உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் பயிற்சி பெற்ற தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் புதிய கட்டுரைகள் உருவாக்கும் விகிதம் குறைந்து விட்டது. எனவே, மாவட்ட வாரி துப்புரவைச் சற்று பொறுத்து கூட செய்யலாம். உதவுக - @Nan, Info-farmer, Tshrinivasan, Parvathisri, Kanags, Booradleyp1, Balurbala, PARITHIMATHI, and Selvasivagurunathan m:--இரவி (பேச்சு) 12:00, 17 சூலை 2017 (UTC)
- இவர்களுக்குத் தனிப் பகுப்பு உண்டா?--Kanags \உரையாடுக 12:02, 17 சூலை 2017 (UTC)
- அவர்களின் பேச்சுப்பக்கத்தில் உரிய வழிகாட்டுதல் தந்தால் போதுமா? அவர்கள் அதனை கவனிக்க எப்படி கூறுவது?--த♥உழவன் (உரை) 12:17, 17 சூலை 2017 (UTC)
- xxxx மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் தொடங்கிய கட்டுரைகள் எனும் பகுபினை இணைக்கச் சொல்லலாம்.--இரா. பாலாபேச்சு 13:20, 17 சூலை 2017 (UTC)
- இவர்களின் கட்டுரைகள் பெரும்பாலானவை அச்சுப் புத்தகங்களிலிருந்தும், இதழ்களில் இருந்தும் வெளிவந்தவைகளை முழுமையாகப் படியெடுத்து எழுதுகிறார்கள் போல் தெரிகிறது. பெரும்பாலானவை கலைக்களஞ்சியத்துக்கு ஏற்றவை அல்ல.--Kanags \உரையாடுக 01:08, 18 சூலை 2017 (UTC)
பகுப்பின் பேச்சுப் பக்கம் ஒன்றில் இருந்த குறிப்பு
தொகு2017 ஆம் ஆண்டு சூலை 4, 5, 6 தேதிகளில் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள DIET அலுவலகத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட 30 ஆசிரியர்களுக்கு விக்கிபயிலரங்கு நடைபெற்றது.
https://etherpad.wikimedia.org/p/ta.wikimedia-scert-tnse-namakkal
அது குறித்த குறிப்பேட்டை மேலே தந்துள்ளேன். தொடர்ந்து அவர்கள் விக்கிபங்களிப்பை பலரும் செய்ய திட்டமிட்டுள்ளனர்.--த♥உழவன் (உரை) 16:26, 7 சூலை 2017 (UTC)