விக்கிப்பீடியா பேச்சு:விக்கி மாரத்தான்
விக்கித் திட்டம் என்ற பெயர்வெளி விக்கிக் கட்டுரையாக அல்லவா உருவாக்கப்பட்டிருக்கிறது.--Kanags \உரையாடுக 11:51, 19 அக்டோபர் 2010 (UTC)
- ஆம் சிறீதரன். இது விக்கிப்பீடியா பெயர்வெளியில் இருக்கவேண்டும். ஆனால் விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் விக்கி மாராத்தான் என்பது மிக நீளமாக உள்ளது. விக்கிப்பீடியா:விக்கி மாராத்தான் திட்டம் தேவலை. --அராபத்* عرفات 14:25, 19 அக்டோபர் 2010 (UTC)
- அதற்கல்ல. இப்படி விக்கித் திட்டம் என்ற பெயர்வெளியில் செய்திகளை உருவாக்கி கட்டுரை எண்ணிக்கைகளை அதிகமாக்குவதா? மீண்டும் விக்கிப்பீடியா என்ற பெயர்வெளிக்கு மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 20:10, 19 அக்டோபர் 2010 (UTC)
அடடா, இது மாரத்தானா முன்பின் ஓட்டமா :) மீண்டும் விக்கிப்பீடியா பெயர்வெளிக்கே :)--இரவி 21:09, 19 அக்டோபர் 2010 (UTC)
தலைப்பு ஏன் ஆங்கிலத்தில் இருக்கிறது. தொடர் ஓட்டம், விடா ஓட்டம் எதாவது. இது நல்ல எடுத்துக்காட்டு அல்ல. --Natkeeran 00:05, 21 அக்டோபர் 2010 (UTC)
நற்கீரன், இந்தத் திட்டத்தை இந்திய விக்கித் திட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் செய்யும் முகமாகவே முன்வைத்தோம். சிறப்பாகச் செயல்பட்டால், இத்திட்டம் நாளை உலகின் பல பகுதிகளுக்கும் பரவலாம். இந்திய அளவில் விக்கித்தான் எனலாம் என்கிறார்கள். (codeathon, hackathon போல ) . தமிழ் விக்கிச் செயற்பாடுகளில் தமிழ்ப் படுத்திச் செய்வதென்றால் செய்யலாம். மாரத்தான் என்னும் விளையாட்டை அதே பெயரில் தமிழ் விக்கியில் எழுதி இருக்கிறோம். --இரவி 10:09, 21 அக்டோபர் 2010 (UTC)
- இப்படி சாட்டுக்கள் சொல்வது சரிவராது. தமிழ் விக்கியோட்டம் எனலாம். மாரத்தான் என்பதும் உண்மையில் தொடர் ஓட்டம், அல்லது நீண்ட ஓட்டம் என்று வருவது சரியாக இருக்கும். --Natkeeran 00:25, 22 அக்டோபர் 2010 (UTC)
நற்கீரன், சாக்குப் போக்கு ஏதும் இல்லை. விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமேனியா கூட ஆங்கில அடிப்படைச் சொற்கள் தாம். உலகளவில் ஒரே அடையாளம் வேண்டும் என்பதற்காக அப்படியே அழைக்கிறோம் அல்லவா? அதே போல விக்கி மாரத்தான் என அழைக்லாம் என நினைக்கிறேன். --இரவி 04:52, 22 அக்டோபர் 2010 (UTC)
- நான் நேற்று இதில் கலந்துகொள்வதாகப் பெயர் கொடுத்தேன். பேர்கனில், அந்த நாளில் சிலரையாவது ஒன்றாகக் கூட்டி, இந்த விக்கி மராத்தான் திட்டத்தில் பங்கு கொள்ளலாம் என நினைத்து அதற்காக இங்குள்ள தமிழ் பாடசாலை பொறுப்பாளரிடமும் கேட்டிருந்தேன். ஆனால் அன்றைய நாளில் இங்கே வேறு ஒரு கலைவிழா நடைபெற இருப்பதாக இன்றுதான் அறிந்தேன். அதனால் அன்றோ, அல்லது முதல் நாளோ இதனை செய்ய முடியாது போய் விட்டது :( --கலை 22:27, 21 அக்டோபர் 2010 (UTC)
பரவாயில்லை, கலை. விக்கி பயிற்சிப் பட்டறை, விக்கி சந்திப்புகள் போல் இதுவும் ஒரு எண்ணம் / முயற்சி தான். உங்கள் ஊரில் வசதிப்படும் நாளில் நீங்கள் இதை ஒருங்கிணைக்கலாம். மற்றபடி, அனைத்துத் தமிழ் விக்கியருடன் இணைந்து நீங்கள் அதே நாளில் பங்கெடுக்கலாம் --இரவி 04:53, 22 அக்டோபர் 2010 (UTC)
- அதே நாளில் என்னாலும் பங்கு கொள்ள முடியாது :(. வேறொரு நாளில்தான் பார்க்க வேண்டும். --கலை 21:19, 22 அக்டோபர் 2010 (UTC)
குட்டி விக்கி மரத்தான்
தொகுநேற்று பேர்கன் தமிழ்ப் பாடசாலையில் நடந்த விக்கியில் எழுதும்பயிற்சி நிகழ்வில் பங்குபற்றியோர் கணனிகளைக் கொண்டு வராமல் விட்டு விட்டதால், முறையான பயிற்சியை வழங்க முடியவில்லை. ஆனாலும் பலர் ஆர்வத்துடன் எழுதும் முறைகள்பற்றி கேட்டு அறிந்து கொண்டனர்.
வருகின்ற 14ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த கலைவிழா நடைபெறாது என்பதால், அன்றே அனைவரும் தமிழ்ப் பாடசாலையில் ஒன்றுகூடி இந்த விக்கி மரத்தானில் பங்களிப்பதுபற்றி யோசித்தோம். ஆனால் அன்று அங்கே இணைய வசதியைப் பெற முடியாத சூழல் இருப்பதனால், முதல் நாளான 13 ஆம் திகதி தமிழ்ப் பாடசாலையில் இதனை மேற்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளோம். எத்தனைபேர் கலந்து கொள்வார்கள், எவ்வளவு தூரம் வெற்றி கிட்டும் என்பது தெரியவில்லை. எவரும் முன்னர் எழுதி அனுபவமற்றவர்களாக இருப்பதனால் பெரிய வேகத்தை எதிர் பார்க்க முடியாது. ஆனாலும் அன்றைய தினத்தில் ஒரு சில புதிய கட்டுரைகளாவது எழுதப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அத்துடன் ஒரு சில தொடர் பங்களிப்பாளர்களையாவது உருவாக்க முடியுமா எனப் பார்க்கிறேன்.
விக்கி மரத்தான் நிகழ்வில் பதிவேற்றப்படும் புதிய கட்டுரைகள் ஏதாவது வகையில் அடையாளப்படுத்தப்படுமா?--கலை 15:24, 7 நவம்பர் 2010 (UTC)
- இனிதே நடைபெற வாழ்த்துக்கள். --Natkeeran 15:29, 7 நவம்பர் 2010 (UTC)
- உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். --மயூரநாதன் 17:52, 7 நவம்பர் 2010 (UTC)
- நன்றிகள் நக்கீரன், மயூரநாதன். முடிந்த வரையில் சிலரது தொடர் பங்களிப்பைப் பெற முயற்சிப்பேன்.--கலை 21:28, 8 நவம்பர் 2010 (UTC)
மகிழ்ச்சி கலை. விக்கி மாரத்தான் அன்று எழுதப்படும் கட்டுரைகளை தனியே அடையாளப்படுத்துவதற்கான தேவையும் எண்ணமும் இல்லை. நாள் முடிவில் எத்தனைக் கட்டுரைகள் என்று முடிவெடுக்கலாம்.
விக்கி மாரத்தானில் கலந்து கொள்ளும் புதியவர்கள் புதிய கட்டுரைகள் இயற்றுவதில் தான் பங்கெடுக்க வேண்டும் என்று இல்லை. பின்வரும் எளிய பணிகளையும் செய்யலாம்:
- படங்கள் இல்லாத கட்டுரைகளில் பொருத்தமான படங்கள் சேர்த்தல்
- எழுத்துப் பிழை திருத்தம்
- பொருத்தமான வெளி இணைப்புகள் சேர்த்தல்
- தங்களுக்குத் தேவைப்படும் கட்டுரைகள் பட்டியலைச் சேர்த்தல்
- விக்சனரி தளத்தில் சொற்களுக்குப் பொருள் சேர்த்தல்
- ஏற்கனவே இணையத்தில் கிடைக்கும் பழந்தமிழ் இலக்கியங்களைப் படியெடுத்துத் தமிழ் விக்கி மூலம் தளத்தில் சேர்த்தல்.
--இரவி 04:56, 9 நவம்பர் 2010 (UTC)
- நன்றி இரவி. நீங்கள் கொடுத்திருக்கும் விடயங்களில் 'தேவைப்படும் கட்டுரைப்பட்டியல் சேர்த்தல்', 'தமிழ் விக்கி மூலம்' தவிர ஏனையவை ஏற்கனவே சொல்லி விட்டேன். அவை இரண்டையும் மீண்டும் கூடும்போது அவர்களுக்குச் சொல்கின்றேன். அத்துடன் விக்கி செய்திகளிலும் எழுதலாம் என ஏற்கனவே கூறியுள்ளேன். எவரும் ஏற்கனவே எழுதி அனுபவம் இல்லாதவர்கள் ஆதலால் பங்களிப்பு எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு சிலர் மிகவும் ஆர்வமாக இருப்பதாத் தோன்றுகின்றது. பார்க்கலாம். --கலை 13:51, 9 நவம்பர் 2010 (UTC)
//ஏற்கனவே இணையத்தில் கிடைக்கும் பழந்தமிழ் இலக்கியங்களைப் படியெடுத்துத் தமிழ் விக்கி மூலம் தளத்தில் சேர்த்தல்.// இதற்கு குறிப்பிட்ட இணையத் தளத்திற்குரியவர்களைத் தொடர்பு கொண்டு, அனுமதி பெற்ற பின்னர்தானே இணைக்க முடியும்? அல்லது குறிப்பிட்ட இணையத் தளத்தை மேற்கோள் காட்டிவிட்டு, படியெடுத்துப் போடலாமா?--கலை 22:40, 10 நவம்பர் 2010 (UTC)
- மூலத்துக்கு அனுமதி தேவையில்லை. 1950க்கு முன் இந்தியாவில் (இலங்கையென்றாலும் 50 அல்லது 60 ஆண்டுகள் என்று நினைக்கிறேன்) எழுதப்பட்ட அனைத்தும் எல்லாருக்கும் சொந்தம். மேற்கோள் காட்டினால் மட்டும் போதும். இதே போல இந்திய/தமிழக அரசுகளால் நாட்டுமையாக்கப்பட்டவையும் பொது வெளிக்கு வந்து விடுகின்றன.
விக்கிமாரத்தான் தரவு இற்றைப்படுத்தல்
தொகுசெப்டம்பர்30, 2012 அன்று நடைபெற்ற விக்கிமாரத்தான் தரவுகள் சேர்க்கவும்.--பிரஷாந் (பேச்சு) 09:54, 5 பெப்ரவரி 2013 (UTC)