விக்டோரியா சிகரம்

ஆங்காங்கில் உள்ள ஒரு நகரம்

விக்டோரியா சிகரம் (Victoria Peak) என்பது ஹொங்கொங் தீவில் உள்ள ஒரு மலையாகும். இந்த மலையை "ஒசுடின் மலை" என்றும் அழைப்பர். உள்ளூர்வாசிகள் "பீக்" என்று அழைக்கின்றனர். இந்த மலை ஹொங்கொங் தீவின் மேற்காக அமைந்துள்ளது. இதன் உயரம் (1,811 அடிகள்) 552 மீட்டர்களாகும். இது ஹொங்கொங் தீவில் உள்ள உயரமான மலையாகும். அதேவேளை இது ஹொங்கொங்கில் உள்ள உயரமான மலையல்ல. ஹொங்கொங்கில் உள்ள உயரமான மலை டை மோ சான் மலை ஆகும்.

விக்டோரியா சிகரத்தில் கட்டப்பட்டுள்ள வானொலி அலை கோபுரம் அல்லது நிலையம்
விக்ரோரியா மலையில் இருந்து பார்த்தால் தெரியும் வானளாவிகள் காட்சி

இருப்பினும் இந்த விக்டோரியா சிகரத்தில் வானொலி அலைக் கோபுரம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதனைச் சூழ வசதிமிக்கவர்களின் அழகிய வசிப்பிடங்களைக் கொண்டுள்ளன. இம்மலைப் பகுதியில் உள்ள வீடுகளும் அதிக விலையானவைகள் ஆகும். அத்துடன் ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளைக் கவரும் இடங்களில் முதன்மையானதும் ஆகும். இந்த விக்டோரியா சிகரத்தில் இருந்து பார்த்தால், ஹொங்கொங் மையம், வஞ்சாய், மற்றும் கவுலூன் பக்கம் உள்ள கட்டடங்கள் அனைத்தையும் காணக்கூடியதாக இருக்கும். குறிப்பாக ஹொங்கொங் வரும் சுற்றுலாப் பயணிகள் போகும் முதன்மையான இடங்களில் இந்த விக்டோரியா சிகரத்தில் கட்டப்பட்டிருக்கும் சிகரக் கோபுரமும் ஒன்றாகும்.

வரலாறு

தொகு

19ம் நூற்றாண்டுகளில் இந்த விக்டோரியா சிகரம் ஐரோப்பியர்களின் ஆதிக்கப் பகுதியாகவே இருந்தது. வீடுகளும் ஐரோப்பியர்களின் வீடுகளாகவே இருந்தன. தற்போதும் அதிகமான வீடுகள் ஐரோப்பியர்களுடையதாகவே உள்ளன. ஐரோப்பியர்கள் இந்த மலையை விரும்பி தமது வசிப்பிடங்களை அமைத்தமைக்கான முக்கியக் காரணம், இந்த மலையையின் இயற்கை அமைவு, இயற்கையுடன் கூடிய சிறப்பான காலநிலை மற்றும் இம்மலையில் இருந்து பார்த்தால் ஹொங்கொங்கின் பிரதான நகரங்கள் எல்லாம் காணக்கூடியதாக இருக்கும் காட்சி போன்றவைகளாகும். பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் ஹொங்கொங்கில் இருந்த ஆளுநர்கள் ஆறு பேரின் வசிப்பிடங்கள் இந்த விக்டோரியா மலையிலேயே இருந்தன.[1]

அத்துடன் இந்த விக்டோரியா மலை போக்குவரத்திற்கான சிகரம் டிராம் வண்டி சேவைத் தொடங்கியப் பின், இம்மலை பகுதியில் உள்ள வசிப்பிடங்களின் பெறுமதி மேலும் உயர்ந்தன.

மேற்கோள்கள்

தொகு
  1. "The Peak History". The Peak. Archived from the original on 7 மார்ச் 2007. பார்க்கப்பட்ட நாள் 14 March 2007. {{cite web}}: Check date values in: |archivedate= (help)

வெளியிணைப்புகள்

தொகு
  ஒங்கொங்:விக்கிவாசல்
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Victoria Peak
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்டோரியா_சிகரம்&oldid=3571519" இலிருந்து மீள்விக்கப்பட்டது