விசயன் விசிறிவால்
விசயன் விசிறிவால் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ரைபிதுரிடே
|
பேரினம்: | ரைபிதுரா
|
இனம்: | ரை. அல்பிவென்ட்ரிசு
|
இருசொற் பெயரீடு | |
ரைபிதுரா அல்பிவென்ட்ரிசு சார்ப்பி, 1877 |
விசயன் விசிறிவால் (Visayan fantail)(ரைபிதுரா அல்பிவென்ட்ரிசு) என்பது பிலிப்பீன்சில் உள்ள நீக்ரோஸ், பனாய், குய்மராஸ், மஸ்பேட் மற்றும் டிகாவோ தீவுகளில் உள்ள ஒரு விசிறிவால் சிற்றினம் ஆகும். சமீப காலம் வரை, இது நீலத் தலை விசிறிவால் மற்றும் தப்லாசு விசிறிவால் ஆகியவற்றுடன் ஒத்த சிற்றினமாகக் கருதப்பட்டது.
விளக்கம்
தொகுஈபேர்டு இந்தப் பறவையினை "நடுத்தர அளவிலான, நீண்ட வால் கொண்ட காடுகளில் காணப்படும் பறவை என்றும், தலை, மார்பு, முதுகு மற்றும் தோளில் மந்தமான நீல நிறமும், மார்பு மற்றும் தலைப்பகுதியில் வெளிர் நீல நிற கோடுகளுடனும், வெள்ளை வயிறு மற்றும் கீழ் முதுகு, வெளிப்புற வால் இறகுகள் மற்றும் இறக்கை, இருண்ட மத்திய வால் இறகுகள் மற்றும் இறக்கையின் இருண்ட விளிம்புடன் காணப்படும்” எனக் கூறுகிறது. உணவு தேடும் போது பெரும்பாலும் ஆண் பறவைகள் வாலினை விசிறிபோல ஆட்டுகின்றன. கறுப்புத் தலையுடைய மொனார்க்கைப் போன்று இவை செம்பழுப்பு தொடையினையும் வாலினையும் கொண்டுள்ளன. குரல் என்பது ஒரு ஒற்றை, நாசி "ஜெப்" குறிப்பு இடைவெளியில் கொடுக்கப்பட்ட அல்லது விரைவான தொடராக வேகப்படுத்தப்படும்" வகையில் உள்ளது.[2]
இது நீலத்தலை விசிறிவால் மற்றும் தப்லாசு விசிறிவால் ஆகியவற்றிலிருந்து இதன் வெள்ளை வயிறு மற்றும் பொதுவாக நிறத்தால் வேறுபடுகிறது.
இது பெரும்பாலும் கலப்பு இன மந்தைகளுடன் காணப்படுகிறது.
வாழ்விடம் மற்றும் பாதுகாப்பு நிலை
தொகுஇதன் வாழ்விடம் வெப்பமண்டல ஈரமான முதன்மை மற்றும் இரண்டாம் நிலை காடுகள் மற்றும் கடல் மட்டத்திலிருந்து 1,800 மீட்டர் உயரத்தில் உள்ள தாழ் நிலப் பகுதிகள் முதல் மலைப்பகுதிகள் வரை காடுகளின் விளிம்பில் காணப்படும்.[3]
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இந்தப் பறவையை தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக மதிப்பிட்டுள்ளது. இருப்பினும், இது ஏற்கனவே குய்மராசில் அழிந்துவிட்டதாகவும், இந்த தீவுகளில் பாரிய காடழிப்பு காரணமாக மாசுபேட் மற்றும் டிகாவோ தீவில் அழிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Rhipidura albiventris". The IUCN Red List of Threatened Species (IUCN) 2016: e.T103707879A104309606. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103707879A104309606.en. http://www.iucnredlist.org/details/103707879/0. பார்த்த நாள்: 15 January 2018.
- ↑ "Visayan Fantail". Ebird.
- ↑ Allen, Desmond (2020). Birds of the Philippines. Barcelona: Lynx and Birdlife International Guides. pp. 246–247.
- ↑ International), BirdLife International (BirdLife (2016-10-01). "IUCN Red List of Threatened Species: Rhipidura albiventris". IUCN Red List of Threatened Species. பார்க்கப்பட்ட நாள் 2021-09-08.
- Sánchez-González, L.A., and R.G. Moyle. 2011. Molecular systematic and species limits in the Philippine fantails (Aves: Rhipidura). Molecular Phylogenetics and Evolution 61: 290–299.
வெளி இணைப்புகள்
தொகு- ADW இல் படம் பரணிடப்பட்டது 2008-12-02 at the வந்தவழி இயந்திரம்