விஜயேந்திர எடியூரப்பா
இந்திய அரசியல்வாதி
விஜயேந்திர எடியூரப்பா (ஆங்கில மொழி: Bookanakere Yediyurappa Vijayendra) என்பவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். கர்நாடகத்தின் 2023 சட்டசபைத் தேர்தலில் சிகாரிபுரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார். 2023 நவம்பர் 10 ஆம் நாள் முதல் பாரதிய ஜனதா கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவராகவுள்ளார்.[1] இவர் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி. எஸ். எடியூரப்பாவின் இரண்டாவது மகனாவார்.[2] முன்னதாக கர்நாடகத்தின் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவில் துணைத் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் சட்ட பயின்று வழக்குரைஞராக அரசியலுக்குள் நுழைந்தார்[3][4] சிமோகா மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினர் பி. வை. ராகவேந்திரா இவரது சகோதரராவார்.
விஜயேந்திர எடியூரப்பா | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 13 மே 2023 | |
முன்னையவர் | பி. எஸ். எடியூரப்பா |
தொகுதி | சிகாரிபுரா சட்டமன்றத் தொகுதி |
பாஜக | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 10 நவம்பர் 2023 | |
முன்னையவர் | நளின் குமார் கட்டீல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 ஆகத்து 1973 சிகாரிபுரா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பெற்றோர் | பி. எஸ். எடியூரப்பா |
உறவினர் | பி. வை. ராகவேந்திரா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "கர்நாடக மாநில பாஜக தலைவராக விஜயேந்திரா எடியூரப்பா நியமனம்". மாலைமலர். https://www.maalaimalar.com/news/national/vijayendra-yeddyurappa-appointed-as-karnataka-state-bjp-president-684219?utm=thiral. பார்த்த நாள்: 11 November 2023.
- ↑ "கர்நாடக பா.ஜனதா புதிய தலைவராக பி.ஒய்.விஜயேந்திரா நியமனம்". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/India/by-vijayendra-yediyurappa-son-of-bs-yediyurappa-appointed-karnataka-bjp-chief-1082418?utm=thiral. பார்த்த நாள்: 11 November 2023.
- ↑ "B.Y. Vijayendra — Yediyurappa's trusted son and nemesis". The Hindu.
- ↑ "Yediyurappa's Achilles heel: His son BY Vijayendra". The News Minute.