விஜய் சிங் பதிக்
விஜய் சிங் பதிக் (Vijay Singh Pathik) (பிறப்பு பூப் சிங் ரதி ; 1882-1954), ராஷ்ட்ரிய பதிக் என்று பிரபலமாக அறியப்பட்ட இவர்,[1] இந்திய புரட்சியாளர் ஆவார். பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக சுதந்திர இயக்கத்தின் தீபத்தை ஏற்றிய முதல் இந்திய புரட்சியாளர்களில் இவரும் ஒருவர். மோகன்தாசு கரம்சந்த் காந்தி சத்தியாக்கிரக இயக்கத்தை தொடங்குவதற்கு முன்பே, பிஜோலியாவின் விவசாயப் போராட்டத்தின் போது பதிக் பரிசோதனை செய்தார். இவரது உண்மையான பெயர் பூப் சிங்,[2] ஆனால் 1915இல் இலாகூர் சதி வழக்கில் சிக்கிய பிறகு, இவர் தனது பெயரை விஜய் சிங் பதிக் என்று மாற்றினார். 1857இல் நடந்த போராட்டத்தில் புலந்தசாகர் மாவட்டத்தில் இவரது தாத்தாவின் தியாகம், ஒருசுதந்திரப் போராட்ட வீரராக மாற மிகவும் ஈர்த்தது. இவருடைய சந்ததியினர் இப்போது தில்லியில் வசிக்கிறார்கள்.
விஜய் சிங் பதிக் | |
---|---|
1992இல் வெளியிடப்பட்ட அஞ்சல் தலையில் விஜய் சிங் பதிக் | |
பிறப்பு | பூப் சிங் ரதி குதவாலி கிராமம், புலந்தசகர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | ராஷ்ட்ரிய பதிக் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுபதிக் 1882ஆம் ஆண்டில் புலந்தசாகர் மாவட்டத்தின் குதவாலி கிராமத்தில் அமீர் சிங் ரதி - கமல் குன்வாரி தம்பதியருக்கு குர்ஜார் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை 1857 சிப்பாய் கலகத்தில் தீவிரமாக பங்கேற்று பல முறை கைது செய்யப்பட்டார். மலகார் ரியாசத்தின் திவானான இவரது பெரிய தந்தை இந்தர் சிங் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடும் போது கொல்லப்பட்டார்.[3]
பிஜோலியா விவசாயகள் புரட்சி
தொகுஇவர் தனது பதின்ம வயதில் புரட்சிகர அமைப்பில் சேர்ந்து இந்தியாவில் பிரிட்டிசு ஆட்சிக்கு எதிராக தீவிரமாக பங்கேற்றார். இவரது ஒத்துழையாமை இயக்கம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது, பிஜோலியா போராட்டக்காரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற பால கங்காதர திலகர் மகாராணா பதே சிங்குக்கு ஒரு கடிதம் எழுதினார். இயக்கத்தைப் பற்றி அறிய மகாத்மா காந்தி தனது செயலாளர் மகாதேவ் தேசாயை அனுப்பினார். ஐக்கிய ராஜஸ்தானுக்காகப் போராடிய பதிக் பிரதமர் ஜவகர்லால் நேருவிடமும், வல்லபாய் பட்டேலிடமும் பிரச்சனையை எடுத்துச் சென்றார். பிஜோலியாவில் விவசாயப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக இவர் சிறையில் அடைக்கப்பட்டார். விவசாயப் பஞ்சாயத்து, மஹிலா மண்டல், யுவக் மண்டல் போன்ற அமைப்புகள் இவரை வழிநடத்த வருமாறு அழைத்தனர். மேவார் பெண்கள் தங்கள் நாட்டுப்புற ஆண்களிடமிருந்து மரியாதை பெறத் தொடங்கினர். ஒரு வளமான சமுதாயத்தை வளர்க்க பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவம் அவசியம் என்பதை மக்கள் உணரச் செய்தனர்.
மரியாதை
தொகுபதிக் ஒரு சிறந்த தேசபக்தரும் சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். ஆசிரியர் இந்திரா வியாஸ் கூறியது போல், "இவர் ஆங்கிலேயக் கொடியை வணங்குவதை விட தனது வாழ்க்கையை முடிக்க விரும்புகிறார். இவர் அந்த காலத்தில் மிகவும் பிரபலமான புகழ்பெற்ற கொடி பாடலையும் எழுதினார்." [4]
இவரை கௌரவிக்கும் விதமாக இந்திய அரசு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டது. [5]
இறப்பு
தொகுராஜஸ்தான் மாநிலம் உருவாக்கப்பட்ட 1954இல் அஜ்மீரில் பதிக் இறந்தார்.
சான்றுகள்
தொகு- ↑ Durga Das Pvt. Ltd (1985). Eminent Indians who was who, 1900–1980, also annual diary of events. Durga Das Pvt. Ltd. p. 238.
- ↑ David Hardiman. The Non Violent Struggle for Freedom 1905-1919. Penguin Random House India Private Limited.
- ↑ Sushma Suresh, ed. (1999). Who's who on Indian stamps. Mohan B. Daryanani. p. 288. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-931101-0-9.
- ↑ Indira Vyas (2004). Freedom movement in Rajasthan: with special reference to Ajmer-Merwara. University Book House. p. 81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-8198-011-5.
- ↑ Who's who on Indian stamps. Mohan B. Daryanani. 1999. p. xvi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-931101-0-8.