வின்டோஸ் என்டி

(விண்டோஸ் எண்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வின்டோஸ் புதிய தொழில் நுட்பம் (Windows New Technology) எனப்பொருள்படும் வின்டோஸ் என்டி மைக்ரோசாப்டினால் 1993 ஜூலையில் ஆரம்பிக்கப்பட்டு உருவாக்க விண்டோஸ் எண்டி ஓர் விண்டோஸ் இயங்குதளக் குடும்பமாகும். விண்டோஸ் எண்டியே மைக்ரோசாப்டின் முதலாவதும் முழுமையானதும் ஆன 32 பிட் இயங்குதளமாகும். விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் சேவர் 2003, விண்டோஸ் சேவர் 2008 மற்றும் விண்டோஸ் ஹோம் சேவர் ஆகியவை விண்டோஸ் எண்டி குடும்பத்தைச் சார்ந்ததெனினும் அவை விண்டோஸ் எண்டி என சந்தைப்படுத்தப்படுவதில்லை.

வின்டோஸ் என்டி


நிறுவனம்/விருத்தியாளர்: மைக்ரோசாப்ட்
Source model: மூடிய மூலம் / பகிரப்பட்ட மூலம்
Kernel type: Hybrid kernel
Default user interface: வரைகலைப் பயனர் இடைமுகம்
License: மைக்ரோசாப்ட் EULA
Working state: தற்போதைய

முக்கிய வசதிகள்

தொகு

இவ்வியங்குதள உருவாக்கத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக பல்வேறுபட்ட வன்பொருட்கள் (ஹாட்வெயார்) மற்றும் மென்பொருட்களை ஆதரிப்பதாகும். விண்டோஸ் எண்டி பதிப்புக்கள் இன்டெல், i386, ஆல்பா, பவர்பீசி போன்ற புரோசர்களை ஆதரிக்கின்றது.

விண்டோஸ் எண்டி 3.1 ஏ முதலாவது 32பிட் புரோசர்களை ஆதரிக்கும் ஓர் இயங்குதளமாகும். இதனுடன் இயங்கிய விண்டோஸ் 3.1 துண்டாமாக்கப்பட்ட முறையில் நினைவகங்கள் அணுகியது.

என்டிஎப்எஸ் (NTFS) என்றழைக்கப்படும் பாதுகாப்பான கோப்புமுறையானது விண்டோஸ் எண்டிக்காக உருவாக்கப்பட்டது. விண்டோஸ் எண்டியானது டாஸ் இயங்குதளத்திலான 16 பிட் இலான கோப்புக்களை ஒழுங்கமைக்கும் முறையிலும் விண்டோஸ் 2000 இலிருந்தான பதிப்புக்கள் 32 பிட் இலான கோப்புக்களை ஒழுங்கமைக்கும் முறையிலும் சேமித்துக் கொள்ளும். குறிப்பு விண்டோஸ் எண்டி பதிப்புக்கள் FAT 16 இல் 4ஜிகாபைட் வரையிலான அளவை ஆதரிக்கும் எனினும் விண்டோஸ் 98 இதனை ஆதரிக்காது இவ்வாறான கட்டத்தில் விண்டோஸ் எண்டி ஐ எடுத்துவிட்டு விண்டோஸ் 98 போடுவதானாலால் முதலில் ஏதாவது ஒரு விண்டோஸ் எண்டி இயங்குதளமூடாக நிறுவலை ஆரம்பிப்பது போல் வந்துவிட்டு ஹாட்டிஸ்கில் உள்ள பாட்டிசனை அழித்தல் வேண்டும் இல்லாவிடின் விண்டோஸ் 98 நிறுவவியலாது. விண்டோஸ் எண்டி, 2000, எக்ஸ்பி ஆகியன பாட் கோப்புமுறையை ஆதரித்து முற்காப்பின்றி வேகமாக இயங்கினாலும் இவ்வசதியானது விண்டோஸ் விஸ்டாவில் இல்லை.

வெளியீடுகள்

தொகு
விண்டோஸ் எண்டி வெளியீடுகள்
பதிப்பு வர்தகப் பெயர் பதிப்பு வெளியீட்டுத் திகதி RTM Build
எண்டி 3.1 வின்டோஸ் என்டி 3.1 வேர்க்ஸ் ஸ்டேசன் (விண்டோஸ் என்டி என்று பொதுவாக அறியப்படுவது), அட்வான்ஸ் சேவர் 27 ஜூலை 1993 528
என்டி 3.5 விண்டோஸ் என்டி 3.5 Wவேர்க்ஸ் ஸ்டேசன், சேவர் 21 செப்டம்பர் 1994 807
என்டி 3.51 விண்டோஸ் என்டி 3.51 வேர்க்ஸ் ஸ்டேசன், சேவர் 30 மே 1995 1057
எண்டி 4.0 விண்டோஸ் என்டி 4.0 வேர்க்ஸ் ஸ்டேசன், சேவர், சேவர் எண்டபிறைஸ் எடிசன், சேவர் எண்டபிறைஸ் எடிசன், டேமினல் சேவர், எம்பெடட் 29 ஜூலை 1996 1381
என்டி 5.0 வின்டோஸ் 2000 புறொபஷனல், சேவர், அட்வான்ஸ் சேவர், டேட்டா செண்டர் சேவர் 17 பெப்ரவரி 2000 2195
என்டி 5.1 வின்டோஸ் எக்ஸ்பி Home, Professional, 64-bit (original), Media Center (original, 2003, 2004 & 2005), Tablet PC (original and 2005), Starter, Embedded, Home N, Professional N 25 அக்டோபர் 2001 2600
என்டி 5.1 விண்டோஸ் பண்டமெண்டல்ஸ் பொ லெகஸி பிஸிஸ் N/A 8 ஜூலை 2006 2600
என்டி 5.2 வின்டோஸ் சேவர் 2003 ஸ்டாண்டட் எண்டபிறைஸ், டேட்டா செண்டர், வெப், ஸ்ரோறேஜ், சிமோல் பிஸ்னஸ் சேவர், கம்பியூட்டர் கிளஸ்டர் 24 ஏப்ரல் 2003 3790
என்டி 5.2 விண்டோஸ் எக்ஸ்பி (5.2) 64-பிட் 2003, பிறொபஷனல் x64 25 ஏப்ரல் 2005 3790
என்டி 5.2 வின்டோஸ் ஹோம் சேவர் N/A 16 ஜூலை, 2007 3790
என்டி 6.0 வின்டோஸ் விஸ்டா ஸ்டாட்டர், ஹோம், பேஸிக், ஹோம் பிரிமியம், பிஸ்னஸ், எண்டபிறைஸ், அல்டிமேட், ஹோம் பேஸிக் என், பிஸ்னஸ் என் வணிகரீதியானது: 30 நவம்பர், 2006
நுகர்வோருக்கானது: 30 ஜனவரி, 2007
6000, 6001(SP1)
என்டி 6.0 வின்டோஸ் சேவர் 2008 ஸ்டாண்டட், எண்டபிறைஸ், டேட்டாசெண்டர், வெப், ஸ்டோரேஞ், ஸ்மோல் பிஸ்னஸ் செர்வர் 27 பெப்ரவரி, 2008 6001
என்டி 7.0 வின்டோஸ் 7 (ஆரம்பத்தில் பிளாக்கொம்ப் என்றும் பின்னர் வியன்னா என்றும் அழைக்கப்படுவது) அறியப்படவில்லை 2010 அறியப்படவில்லை
மைக்ரோசோஃப்ட் விண்டோஸின் வரலாறு
எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0
வரவிருப்பவை: 2008 மற்றும் 7
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்டோஸ்_என்டி&oldid=2756891" இலிருந்து மீள்விக்கப்பட்டது