விந்தியாச்சல்
விந்தியாச்சல் (Vindhyachal) ⓘ, வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பூர்வாஞ்சல் பிரதேசத்தில் அமைந்த மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். மிர்சாபூர்-விந்தியாச்சல் நகராட்சியின் கீழ் விந்தியாச்சல் நகரம் உள்ளது. இந்நகரத்தில் குடிகொண்டுள்ள விந்தியவாசினி அம்மன் கோயில் பெயரால் இந்நகரத்திற்கு விந்தியாச்சல் எனப்பெயராயிற்று. இந்நகரத்தில் கங்கை ஆறு பாய்கிறது.
விந்தியாச்சல் | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | மிர்சாபூர் மாவட்டம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,45,817 |
மொழி | |
• அலுவல் மொழி | இந்தி மொழி[1] |
• கூடுதல் மொழி | உருது[1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 231307 |
வாகனப் பதிவு | UP-63 |
அமைவிடம்
தொகுவிந்தியாச்சல் நகரம் வாரணாசியிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும்; அலகாபாத்திலிருந்து 85 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி மிர்சாபூர்]]-விந்தியாச்சல் நகராட்சியின் மக்கள் தொகை 2,45,817 ஆகும். அதில் ஆண்கள் 1,31,534 மற்றும் பெண்கள் 1,14,283 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 29,619 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 77.85% ஆகவுள்ளது. [2]
இரயில் நிலையம்
தொகுவிந்தியாச்சல் இரயில் நிலையம் [3]இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 26 December 2018.
- ↑ "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012.
- ↑ Vindhyachal railway station