வினய் கட்டியார்

இந்திய அரசியல்வாதி

வினய் கட்டியார் (Vinay Katiyar), ( பிறப்பு: 11 நவம்பர் 1954) இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் பிறந்தவர்.[1]சங்கப் பரிவார் அமைப்புகளில் ஒன்றான விசுவ இந்து பரிசத்தின் இளைஞர் அணியான பஜ்ரங் தளத்தின் நிறுவனத் தலைவராவார். பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலராகவும் இருந்தவர். மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக பைசாபாத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வினய் கட்டியார், தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

வினய் கட்டியார்
மாநிலங்களவை உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு 11 நவம்பர் 1954 (1954-11-11) (அகவை 68)
கான்பூர், உத்திரப்பிரதேசம்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ராம் பேதி (மறைவு)
படித்த கல்வி நிறுவனங்கள் கான்பூர் பல்கலைக்கழகம்
சமயம் இந்து சமயம்

வாழ்வும் பணியும் தொகு

குர்மி சமுகத்தைச் சார்ந்த வினய் கட்டியார், சரண் கட்டியார் - சியாம் காளி இணையருக்கு கான்பூரில் பிறந்தவர்.[2]சங்கப் பரிவாரின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்தியார்த்தி பரிசத்தில் இணைந்த வினய் கட்டியார், உத்தரப்பிரதேச மாநில அமைப்புச் செயலளராக 1970 முதல் 1974 முடிய இருந்தார். பின்னர் 1980இல் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் முழு நேர ஆர் எஸ் எஸ் பிரச்சாரகராக சேவை செய்தார். ராம ஜென்மபூமி இயக்கத்தை வலுப்படுத்த பஜ்ரங் தளம் என்ற இந்து இளைஞர் அமைப்பை துவக்கி அதன் நிறுவனத் தலைவராகச் செயல்பட்டார்.[1][3]

பின்னர் 2002ஆம் ஆண்டு முதல் 18 சூலை 2004 முடிய பாரதிய ஜனதா கட்சியின் உத்திரப் பிரதேச மாநிலத் தலைவராக இருந்த வினய் கட்டியார் 2006ஆம் ஆண்டு முதல் கட்சியின் தேசியச் செயலராகப் பணியாற்றினார்.[1] 10, 11 மற்றும் 13வது நாடாளுமன்ற மக்களவைக்கு, 1991, 1996, 1999 ஆகிய ஆண்டுகளில் பைசாபாத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வினய் கட்டியார் தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Detailed profile of Members of Parliament : Shri Vinay Katiyar". Government of India. http://www.archive.india.gov.in/govt/rajyasabhampbiodata.php?mpcode=2018. பார்த்த நாள்: 18 December 2014. 
  2. "No cake walk for Vinay Katiyar". The Hindu. 4 May 2004. Archived from the original on 13 டிசம்பர் 2014. https://archive.today/20141213193934/http://www.thehindu.com/2004/05/04/stories/2004050401171400.htm. 
  3. Christophe Jaffrelot (1996). The Hindu Nationalist Movement and Indian Politics. C. Hurst & Co. Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1850653011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினய்_கட்டியார்&oldid=3771550" இருந்து மீள்விக்கப்பட்டது