வினைல் பிரோலிடோன்
1-வினைல்-2-பிரோலிடோன் (1-Vinyl-2-pyrrolidone) என்பது C6H9NO என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். என்-வினைல் பிரோலிடோன் என்றும் அழைக்கப்படும் இச்சேர்மத்தில் வினைல் தொகுதியுடன் 5 உறுப்புகள் கொண்ட லாக்டம் பிணைக்கப்பட்டிருக்கும். நிறமற்ற நீர்மம் எனினும் இதன் வணிக மாதிரிகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-எத்தீனைல்பிரோலிடின்-2-ஒன் | |||
வேறு பெயர்கள்
1-வினைல்பிரோலிடோன்-2-ஒன்
1-எத்தீனைல்-2-பிரோலிடோன் என்-எத்தீனைல்-2-பிரோலிடோன் என்-வினைல்-2-பிரோலிடோன் 1-வினைல்-2-பிரோலிடோன் என்-வினைல்பியூட்டைரோலாக்டம் | |||
இனங்காட்டிகள் | |||
88-12-0 | |||
ChemSpider | 6651 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 6917 | ||
| |||
UNII | 76H9G81541 | ||
பண்புகள் | |||
C6H9NO | |||
வாய்ப்பாட்டு எடை | 111.14 g·mol−1 | ||
அடர்த்தி | 1.04 கி/செ.மீ3[1] | ||
உருகுநிலை | 13–14 °C (55–57 °F; 286–287 K) | ||
கொதிநிலை | 92–95 °C (198–203 °F; 365–368 K)[1] 11 மி.மீ பாதரசம் | ||
ஆவியமுக்கம் | 0.1 மி.மீ பாதரசம் (24 °செல்சியசு)[1] | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.512[1] | ||
தீங்குகள் | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 95 °C (203 °F; 368 K) | ||
Autoignition
temperature |
685 °C (1,265 °F; 958 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தொழில் முறை தயாரிப்பு
தொகு2-பிரோலிடோனை வினைலேற்றம் செய்து 1-வினைல்-2-பிரோலிடோன் தயாரிக்கப்படுகிறது. வினைலேற்றம் என்பது ஒரு கார வினையூக்கியின் முன்னிலையில் அசிட்டிலீனுடன் வினைபுரியச் செய்வதாகும்.[2] இச்சேர்மம், ஒரு முக்கியமான செயற்கைப் பொருளான பாலிவினைல்பிரோலிடோனை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாகும். 1-வினைல்-2-பிரோலிடோன் ஒருமம் பொதுவாக புற ஊதா மற்றும் எலக்ட்ரான்-கற்றை குணப்படுத்தக்கூடிய பலபடிகளில் மைகள், பூச்சுகள் அல்லது பசைகளாகப் பயன்படுத்தப்படும் ஒரு வினைத்திறமிக்க நீர்கரைசலாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]
தயாரிப்பு
தொகுγ-பியூட்டைரோலாக்டோனுடன் அம்மோனியாவைச் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் 2-பிரோலிடோன் தயாரிக்கப்படுகிறது.[3] பின்னர் இதனுடன் வினைல் குழுவை அறிமுகப்படுத்த அசிட்டிலீன் பயன்படுத்தப்படுகிறது.[2][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "1-Vinyl-2-pyrrolidinone". Sigma-Aldrich.
- ↑ 2.0 2.1 2.2 Harreus, Albrecht Ludwig; Backes, R.; Eichler, J.-O.; Feuerhake, R.; Jäkel, C.; Mahn, U.; Pinkos, R.; Vogelsang"2-Pyrrolidone, R. (2005), Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a22_457.pub2
{{citation}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Teodorescu, Mirela; Bercea, Maria (23 June 2015). "Poly(vinylpyrrolidone) – A Versatile Polymer for Biomedical and Beyond Medical Applications". Polymer-Plastics Technology and Engineering 54 (9): 923–943. doi:10.1080/03602559.2014.979506.
- ↑ "Acetylene Chemistry". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2008). DOI:10.1002/14356007.a01_097.pub3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527306730.