விமப 480 (MWC 480) என்பது ஒரு ஒற்றை [4] விண்மீனாகும். இது ஆயன் விண்மீன் குழுவில் சுமார் 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது டாரசு -ஆயன் நட்சத்திரம்-உருவாக்கும் பகுதியில் அமைந்துள்ளது. [8] கதிர்நிரலில் பொலிவான நீரக வரிகளைக் கொண்ட B மற்றும் A விண்மீன்களின் வில்சன் மலைப் பட்டியலை இந்தப் பெயர் குறிக்கிறது. 7.62 என்ற தோற்றப் பொலிவுப் பருமையுடன், இது வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு மங்கலாக உள்ளது.

விமப 480

A visual band light curve for MWC 480, plotted from ASAS-SN data[1]
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Auriga
வல எழுச்சிக் கோணம் 04h 58m 46.2654s[2]
நடுவரை விலக்கம் +29° 50′ 36.990″[2]
தோற்ற ஒளிப் பொலிவு (V)7.62[3]
இயல்புகள்
விண்மீன் வகைA3psh3+[4]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: 4.793[2] மிஆசெ/ஆண்டு
Dec.: -25.348[2] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)6.1815 ± 0.0761[2] மிஆசெ
தூரம்528 ± 6 ஒஆ
(162 ± 2 பார்செக்)
விவரங்கள்
திணிவு1.7-2.3[5] M
ஆரம்1.67[4] R
ஒளிர்வு11.2[4] L
வெப்பநிலை8250[3] கெ
சுழற்சி வேகம் (v sin i)102.0 ± 5.0[6] கிமீ/செ
வேறு பெயர்கள்
BD+29 774, HD 31648, HIP 23143, SAO 76866, GSC 01844-00503, 2MASS J04584626+2950370[7]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

பான்மைகள் தொகு

விமப 480 விண்மீனைச் சுற்றியுள்ள முன்கோள் வன்டின் ஓவியத் தோற்றம்.

விமப 480 என்பது ஒரு இளம் எர்பிக் Ae/Be வகை விண்மீன் ஆகும், இது A அல்லது B நிறமாலை வகைகளைக் கொண்ட இளம் விண்மீன்களின் ஒரு வகுப்பாகும், ஆனால் அவை மிகவும் இளமையாக இருக்கின்றன. [5] இன்னும் இவை முதன்மை வரிசை விண்மீன்கள் அல்ல. விமப 480 சுமார் 7 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. இது சூரியனின் இருமடங்கு பொருண்மையும் சுமார் 1.67 சூரிய ஆரமும் கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. [4]

விமப 480 ஆனது ஒரு முன்-முதன்மை வரிசை எர்பிக் Ae/Be வகை விண்மீனின் வழக்கமான எக்சுக்கதிர் உமிழ்வைக் கொண்டுள்ளது, ஆனால் அதிக ஒளிமின்னழுத்த உறிஞ்சுதல் அளவைக் கொண்டுள்ளது. இது ஒரு வளிமத் தூசி உறையைக் கொண்டுள்ளது. சூரியனின் பொருண்மை 11% கொண்ட ஒரு முன்கோள் வட்டால் சூழப்பட்டுள்ளது. வட்டு சுமார் 148° இருப்புக் கோணத்தில் பார்வைக் கோட்டை நோக்கி 37° சாய்ந்துள்ளது. அலகாமா பெருமிமீ அணி (Atacama Large Millimeter/submillimeter Array) தொலைநோக்கியைப் பயன்படுத்தும் வானியலாளர்கள் விமப 480 விண்மீனைச் சுற்றியுள்ள முன்கோள் வட்டில் அதிக அளவு மெத்தில் சயனைடு (CH 3 CN) என்ற சிக்கலான கரிம மூலக்கூறைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர். [9] வட்டில் ஐதரசன் சயனைடு (HCN) கண்டறியப்பட்டது. [10] கோள் உருவானதற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.

கோள் அமைப்பு தொகு

2021 ஆம் ஆண்டில், விண்மீன் சூழ் வளிம வட்டின் வளிமப் பாய்வுப் படிமமாக்கம், விண்மீனில் இருந்து சுமார் 245 வானியல் அலகு தொலைவில் வியாழன் பொருண்மை கோள் ஒன்று இருப்பதை பரிந்துரைத்தது. [11]

மேற்கோள்கள் தொகு

 
விமப 480 என்ற இளம் விண்மீனைச் சூழ்ந்த வானம்
  1. "ASAS-SN Variable Stars Database". ASAS-SN Variable Stars Database. ASAS-SN. பார்க்கப்பட்ட நாள் 6 January 2022.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. 
  3. 3.0 3.1 Mendigutía, I.; Mora, A.; Montesinos, B.; Eiroa, C.; Meeus, G.; Merín, B.; Oudmaijer, R. D. (2012). "Accretion-related properties of Herbig Ae/Be stars". Astronomy & Astrophysics 543: A59. doi:10.1051/0004-6361/201219110. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Grady, C. A.; Hamaguchi, K.; Schneider, G.; Stecklum, B.; Woodgate, B. E.; McCleary, J. E.; Williger, G. M.; Sitko, M. L. et al. (2010). "Locating the Accretion Footprint on a Herbig Ae Star: MWC 480". The Astrophysical Journal 719 (2): 1565–1581. doi:10.1088/0004-637X/719/2/1565. Bibcode: 2010ApJ...719.1565G. https://tigerprints.clemson.edu/physastro_pubs/143. 
  5. 5.0 5.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Loomis என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. Mora, A.; Merín, B.; Solano, E.; Montesinos, B.; De Winter, D.; Eiroa, C.; Ferlet, R.; Grady, C. A. et al. (2001). "EXPORT: Spectral classification and projected rotational velocities of Vega-type and pre-main sequence stars". Astronomy and Astrophysics 378: 116. doi:10.1051/0004-6361:20011098. Bibcode: 2001A&A...378..116M. 
  7. "HD 31648". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 20 July 2020.
  8. K. L. Luhman (2010). "The Disk Population of the Taurus Star-Forming Region". The Astrophysical Journal Supplement Series 186 (1): 111–174. doi:10.1088/0067-0049/186/1/111. Bibcode: 2010ApJS..186..111L. 
  9. "Complex Organic Molecules Discovered in Infant Star System". Eso.org. பார்க்கப்பட்ட நாள் 2015-04-08.
  10. "Complex Organic Molecules Discovered Around Star MWC 480". Science 2.0. பார்க்கப்பட்ட நாள் 2015-04-08.
  11. Teague, Richard; Bae, Jaehan; Aikawa, Yuri; Andrews, Sean M.; Bergin, Edwin A.; Bergner, Jennifer B.; Boehler, Yann; Booth, Alice S.; Bosman, Arthur D. (2021), "Molecules with ALMA at Planet-forming Scales (MAPS). XVIII. Kinematic Substructures in the Disks of HD 163296 and MWC 480", The Astrophysical Journal Supplement Series, p. 18, arXiv:2109.06218, Bibcode:2021ApJS..257...18T, doi:10.3847/1538-4365/ac1438 {{citation}}: Missing or empty |url= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விமப_480&oldid=3829927" இலிருந்து மீள்விக்கப்பட்டது