விரவுப் பெயர்கள்

விரவுப் பெயர்கள் எனக் குறிபிடப்படுபவை உயர்திணை, அஃறிணை என்னும் திணைகளிலும், ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் ஐந்து வகையான பால்களிலும் விரவி வருபவை. இவற்றைத் தொல்காப்பியம் 18 நூற்பாக்களில் [1]விளக்கிக் கூறுகிறது. அன்றியும் வினையால் வேறுபடும் சொற்கள் என இரண்டு வகையினை 6 நூற்பாக்களிலும் [2] குறிப்பிடுகிறது.

வகைகள்

தொகு
  • திணைப் பொது - சாத்தன் வந்தான் (உயர்திணை), சாத்தன் [3] வந்தது (அஃறிணை) [4]
    • திணை விரவாமை - சாத்தன் யாழ் மீட்டும், சாத்தி சாந்து அரைக்கும். - இவற்றில் சாத்தன், சாத்தி என்னும் திணைவிரவுப் பெயர்கள் வினையால் அஃறிணையை விலக்கி நிற்கின்றன. [5]
  • இயற்பெயர் - சாத்தன், வந்தான், வந்தது சாத்தி, வந்தாள், வந்தது கோதை வந்தாள் வந்தது
  • சினைப்பெயர் - முடவன் என்னும் சொல் முடம்பட்ட ஒருவனுக்கும் முடம்பட்ட விலங்குக்கும் பொதுவாக வரும் விரவுப்பெயர்
  • சினைமுதற்பெயர் - சீத்தலைச் சாத்தன்
  • முறைப்பெயர் - தந்தை, தாய்
  • தான், தாம்
  • நீ, நீயிர்
  • எல்லாம்
  • மா வீழ்ந்தது - இதில் மா என்னும் சொல் மாமரம் வீழ்ந்தது, மா என வழங்கப்படும் மான் வீழ்ந்தது என இருவகையாகப் பொருள் உணர்த்தும் விரவுப்பெயர்.
    • மா ஓடிற்று, மா காய்த்தது - இவற்றில் விரவுப் பெயர்கள் வினையால் வேறுபட்டு நிற்கின்றன.

அடிக்குறிப்பு

தொகு
  1. சொல்லதிகாரம் 171 முதல் 197 வரை உள்ள நூற்பாக்கள்
  2. சொல்லதிகாரம் 51 முதல் 55
  3. காளைமாடு
  4. தொல்காப்பியம் 2-169
  5. தொல்காப்பியம் 2-170
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரவுப்_பெயர்கள்&oldid=2289798" இலிருந்து மீள்விக்கப்பட்டது