விராலியூர்
விராலியூர் என்பது கோவை மாவட்டத்தின் தொண்டாமுத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த ஓர் கிராமமாகும். விராலி மரங்கள் அதிகம் காணப்பட்டதால் இது இப்பெயர் பெற்றதாக கருதப்படுகிறது. இது வெள்ளிமலைபட்டினம் பஞ்சாயத்தை சேர்ந்தது. சுமார் 2200 மக்கள்தொகை கொண்ட இந்த ஊரில் சுமார் 155 மாணவர்கள் பயின்றுவரும் ஒரு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் அருகே ஜல்லிபாளையம் என்னும் பகுதியில் வலையர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இருப்பிடம் மலை அடிவாரமே. விவசாயமே இவ்வூரின் முதன்மைத் தொழிலாக உள்ளது.[4]
விராலியூர் | |
— கிராமம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கிராந்திகுமார் பதி, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 2,200 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
அமைவிடம்
தொகுஇவ்வூரானது, தொண்டாமுத்தூரிலிருந்து நரசிபுரம் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சிறப்புகள்
தொகுவைதேகி அருவி இவ்வூரின் அருகிலேயே அமைந்துள்ளது. முற்றிலும் இயற்கை சூழலுடன் உள்ள இப்பகுதியில் அதிகமாக விவசாய நிலங்களாக இருந்தாலும், இப்பகுதியில் பள்ளி, கல்லூரி வசதிகளும் உண்டு.
கல்வி நிலையங்கள்
தொகு- கலைமகள் கல்லூரி
- CIET என்னும் பொறியியல் கல்லூரி
- ரங்கநாதன் பல்தொழில்நுட்பக் கல்லூரி
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.