விரையாச்சிலை
விராச்சிலை (விரையாச்சிலை) தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்துக்குட்பட்ட வருவாய் கிராமமும் திருமயம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சியுமாகும்.[4][5] 4000 மக்கள் தொகை கொண்ட கிராம ஊராட்சியுடன் கூடிய வருவாய் கிராமம் ஆகும். வருவாய் கிராமத்தில் 1-பிட், 2-பிட் என்ற இரண்டு கிராம அலுவல் பிரிவுகளின் கீழ் இயங்கும் தனி ஊராட்சி ஆகும். 1-பிட் கீழ் பக்கத்து கிராமங்களை உள்ளடக்கிய மூன்று பஞ்சாயத்துக்கள் முறையே நெய்க்குணம், வி-லெட்சுமிபுரம், அரங்கிரான்பட்டி ஆகும்.
விராச்சிலை | |
— கிராமம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | புதுக்கோட்டை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | எம். அருணா, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
விரையச்சிலை என்ற ஊரின் பெயர் நாளடைவில் வழக்குச்சொல்லால் சுருங்கி விராச்சிலை என்று நிலை பெற்று விட்டது.
கோயில்கள்
தொகுபல்லவர்களின் குடவரை கோவில் காலத்திய வரலாற்றுச்சிறப்புமிக்க சிவன் கோவில், கொற்றவை வழிபாட்டுடன் தொடர்புடைய வடக்கு பார்த்த அம்மன் கோவில், அம்மன் கோவிலுக்குட்பட்ட அய்யனார் கோவில்கள், அங்காள பரமேஸ்வரி கோவில், நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் தனி சுப்பிரமணியர் கோவில் ஆகியவை இவ்வூரிலுள்ள கோவில்கள்.
பக்கத்து கிராமங்கள்
தொகு- நெய்க்குணம்
- வி.லெட்சுமிபுரம்
- அரங்கிரான்பட்டி
- வெள்ளிப்பட்டி
- அருமந்தாப்பட்டி
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-12.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2015-10-12.