விலங்கு அறிதிறன்

விலங்கு அறிதிறன் (animal cognition) என்பது பூச்சிகள் உட்பட மனிதரல்லா விலங்குகளின் மனத் திறன்களை உள்ளடக்கியது. இந்தத் துறையில் பயன்படுத்தப்படும் ஆய்வுகளான விலங்குகளின் பழக்கப்படுத்துதல் மற்றும் கற்றல் பற்றிய ஆய்வுகள் ஒப்பீட்டு உளவியலில் இருந்து உருவாக்கப்படுபவை. விலங்கு அறிதிறன் ஆய்வுகளானது நடத்தையியல், நடத்தை சூழலியல், பரிணாம உளவியல் ஆகியவற்றில் உள்ள ஆராய்ச்சிகளாலும் வலுசேர்க்கப்படுகின்றன; இதன் காரணமாகவே இத்துறையானது சில நேரங்களில் அறிதிற நடத்தையியல் (cognitive ethology) என்ற மாற்றுப் பெயராலும் அறியப்படுகிறது. விலங்கு நுண்ணறிவு என்ற சொல்லுடன் தொடர்புடைய பல நடத்தைகளும் விலங்கு அறிதிறனுக்குள் அடக்கப்படுகின்றன.[1]

நண்டு உண்ணும் குரங்கு ஒன்று ஒரு கல்லை கருவியாகப் பயன்படுத்தி கொட்டையை உடைக்கும் காட்சி
கேரிப் கிராக்கிள் பறவை வகைகள் நிகழ்த்தும் இந்த 'சரம் இழுத்தல்' போன்ற பரிசோதனைகள் விலங்குகளின் அறிதிறன் பற்றிய புதிய நுண்ணிய தகவல்களை வழங்குகின்றன.

பாலூட்டிகள் (குறிப்பாக முதனிகள், கடற்பாலூட்டிகள், யானைகள், நாய்கள், பூனைகள், பன்றிகள், குதிரைகள்,[2][3][4] கால்நடைகள், ரக்கூன்கள் மற்றும் கொறித்துண்ணிகள் உள்ளிட்டவை), பறவைகள் (கிளிகள், கோழிகள், காகங்கள் மற்றும் புறாக்கள் உள்ளிட்டவை), ஊர்வன (பல்லிகள், பாம்புகள் மற்றும் ஆமைகள் உள்ளிட்டவை),[5] மீன் வகைகள் மற்றும் முதுகெலும்பிலிகள் (தலைக்காலிகள், சிலந்திகள் மற்றும் பூச்சிகள் உள்ளிட்டவை)[6] ஆகியவற்றில் விலங்கு அறிதிறன் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

இவற்றையும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

மேலும் படிக்க தொகு

வெளியிணைப்புகள் தொகு

  • வார்ப்புரு:Cite SEP
  • வார்ப்புரு:Cite SEP
  • Fox, Douglas (14 June 2011). "The limits of intelligence". Scientific American 305 (1): 36–43. doi:10.1038/scientificamerican0711-36. பப்மெட்:21717956. Bibcode: 2011SciAm.305f..36F. http://www.scientificamerican.com/article.cfm?id=the-limits-of-intelligence. 
  • Kamil A, Bond A. "Center for Avian Cognition". University of Nebraska.
  • "Animal Cognition Network". Archived from the original on 2008-05-09.
  • வார்ப்புரு:IEP
"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்கு_அறிதிறன்&oldid=3848769" இலிருந்து மீள்விக்கப்பட்டது