விலங்கு அறுப்பு
விலங்கு அறுப்பு அல்லது விலங்குப் படுகொலை (animal slaughter) என்பது விலங்குகளைக் கொல்வது ஆகும். இது பொதுவாக கால்நடைகள் உள்ளிட்ட வளர்ப்பு விலங்குகளை கொல்வதைக் குறிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 80 பில்லியன் நிலவாழ் விலங்குகள் உணவுக்காகக் கொல்லப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1] பெரும்பாலான விலங்குகள் உணவுக்காக வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டாலும், உடற் தோலை அறுவடை செய்வதற்காகவும், நோய்வாய்ப்பட்டு மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றதாக இருத்தல் அல்லது இனப்பெருக்க இருப்பை பராமரிக்கும் பண்ணைகளில் உபரியாக இருத்தல் உள்ளிட்ட பிற காரணங்களுக்காகவும் விலங்குகள் கொல்லப்படுகின்றன. விலங்கு அறுப்பு என்பது பொதுவாக உடலில் சில ஆரம்ப வெட்டுக்களைச் செய்து, உடலின் பெரும் துவாரங்களைத் திறந்துக் குடல் உள்ளிட்ட மனித நுகர்வுக்குப் பயன்படாத பாகங்களை அகற்றுவதைக் குறித்தாலும், அறுப்பின் போது பொதுவாக அவ்விலங்கின் சடலம் பெரும்பாலும் ஒரே துண்டாக வைக்கப்படுகிறது. இத்தகைய செயல்முறைகள் பெரும்பாலும் காட்டில் வேட்டையாடுபவர்களாலும் அடிதொட்டித் தொழிலாளர்களாலும் செய்யப்படுகிறது. இதன் பின்னர், அந்தச் சடலமானது சிறிய துண்டுகளாக வெட்டப்படுகிறது.
விலங்குகள் | கொல்லப்பட்ட எண்ணிக்கை |
---|---|
கோழி | 72,11,87,79,000
|
வாத்து | 3,31,18,99,000
|
பன்றி | 1,34,85,41,419
|
அன்னம் | 72,36,48,000
|
வான்கோழி | 63,59,55,000
|
முயல் | 63,30,13,000
|
செம்மறியாடு | 60,23,19,130
|
ஆடு | 50,28,08,495
|
மாடு | 32,45,18,029
|
எலி | 7,09,77,000
|
புறா உள்ளிட்ட பறவைகள் | 4,62,16,000
|
எருமை | 2,76,92,388
|
குதிரை | 49,40,693
|
ஒட்டகம் | 29,91,884
|
கழுதை | 19,58,602
|
இதர ஒட்டக வகைகள் | 9,67,656
|
மான் | 6,28,542
|
கோவேறு கழுதை | 1,30,804
|
உணவுக்காக பொதுவாகக் கொல்லப்படும் விலங்குகளாவன மாடு, எருமை, கன்று, செம்மறி ஆடு, ஆடு, ஆட்டுக்குட்டி, பன்றி, மான், குதிரை, கோழி வகைகள் (முக்கியமாக கோழி, வான்கோழி, வாத்து), பூச்சிகள் (வணிக இனமான வெட்டுக்கிளி உள்ளிட்டவை), மற்றும் அதிக அளவில் மீன்கள் (மீன் வளர்ப்புத் தொழிலில்). 2020-ம் ஆண்டில் பெளனாலைடிக்ஸ் (Faunalytics) என்ற அமைப்பு சீனா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகியவை அதிக எண்ணிக்கையிலான பசுக்கள் மற்றும் கோழிகளைக் வெட்டும் நாடுகள் என்று கண்டறிந்துள்ளது. பன்றிகளைக் கொல்வதில் சீனா முதலிடம் வகிக்கிறது. அதைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், வியட்நாம் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் பன்றிகளை அதிகமாகக் கொல்கின்றன. செம்மறி ஆடுகளின் சதவீத வரைபடத்தைப் பொருத்தமட்டில், ஆடுகளை அதிக அளவில் வெட்டுவதில் மீண்டும் சீனா முதலிடம் வகிப்பதைக் காணமுடிகிறது. அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து விளங்குகின்றன. சீனா, இந்தோனேசியா, பெரு, இந்தியா, ரஷ்யா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் மீன்களை அதிக அளவில் (டன்களில்) உற்பத்தி செய்துக் கொல்கின்றன.[2]
மேலும் காண்க
தொகுஆதாரங்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Canada Agricultural Products Act R.S., 1985, c. 20 (4th Supp.) பரணிடப்பட்டது 2005-08-31 at the வந்தவழி இயந்திரம்
- Humane Slaughter of Livestock Regulations
- Slovak Pig Slaughter and Traditional Sausage Making – article in English with detailed pictures of a Slovak family slaughtering a pig in the traditional style[தொடர்பிழந்த இணைப்பு]
- Live Counter About Slaughtered Animals Worldwide