வில்லியம் ஆல்லன் மில்லர்
வில்லியம் ஆல்லன் மில்லர் (William Allen Miller) (17 திசம்பர் 1817 – 30 செப்டம்பர் 1870) ஒரு பிரித்தானிய அறிவியலாளரும் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினரும் ஆவார்.
வில்லியம் ஆல்லன் மில்லர் William Allen Miller | |
---|---|
வில்லியம் ஆல்லன் மில்லர் | |
பிறப்பு | 17 திசம்பர் 1817 |
இறப்பு | 30 செப்டம்பர் 1870 | (அகவை 52)
தேசியம் | ஆங்கிலேயர் |
துறை | வேதியியல் வானியல் |
கல்வி கற்ற இடங்கள் | இலண்டன் அரசர் கல்லூரி |
விருதுகள் | அரசு வானியல் கழகத் தங்கப்பதக்கம் |
வாழ்க்கை
தொகுமில்லர் சப்போக்கில் உள்ல இப்சுவிச்சில் பிறந்தார். இவர் ஆக்வர்த் பள்ளியிலும் இலண்டன் அரசர் கல்லூரியிலும் கல்வி பயின்றார். இவர் அடிமைமுறை எதிர்ப்பாளரும் மனிதநேயருமான வில்லியம் ஆல்லன் எனும் ஆங்கிலேயக் குவேக்கரின் உறவினர் ஆவார். இவர் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டிய போராளியான ஆன்னி நைட்டின் ஒன்றுவிட்ட உடன்பிறப்பாவார்.[1]
ஜான் பிரெடெரிக் டேனியேல் இறந்ததும், இலண்டன் அரசர் கல்லூரி வேதியியல் இருக்கையில் இவர் தொடர்ந்தார். இவர் படித்தது வேதியியல், ஆனாலும், அவரது காலப் புதிய புலங்களாகிய கதிர்நிறலியலிலும் வான்வேதியியலிலும் அறிவியல்முறையிலான அவருடைய பங்களிப்பிற்காகவே பெரிதும் அறியப்படுகின்றார்.
வில்லியம் அக்கின்சுடன் இணைந்து மில்லர் 1967 ஆம் ஆண்டுக்கான அரசு வானியல் கழகத் தங்கப்பதக்கத்தை விண்மீன்களின் பொதிவமைவைப் பற்றிய கதிர்நிறல் ஆய்வுக்காக வென்றார்.[2] இவர் 1845 இல் அரசு கழக ஆய்வுறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
மில்லருடைய நினைவேந்தலின் படி,[4] இவர் 1842 இல் பர்மிங்காம் நகரின் எலிசா பாரசுட்டை மணந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும் இரு பெண் மக்களும் இருந்துள்ளனர். தன் மனைவி இறந்த ஓராண்டுக்குப் பின்னர் 1870 இல் இவர் இறந்துள்ளார். இவர்கள் இருவரும் மேற்கு நார்வுட்டு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டனர்.
நிலாவின் மில்லர் குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Edward H. Milligan, ‘Knight, Anne (1786–1862)’, Oxford Dictionary of National Biography, Oxford University Press, 2004 accessed 29 Aug 2017
- ↑ William Huggins & W.A. Miller (1 January 1864) On the spectrum of some nebula, Proceedings of the Royal Society, link from Internet Archive
- ↑ "Library and Archive catalogue". Royal Society. Archived from the original on 18 February 2012. பார்க்கப்பட்ட நாள் 30 January 2011.
- ↑ Royal Society of Great Britain (1871). "Obituary". Proceedings of the Royal Society of London 19: xi–xvi. https://books.google.com/books?id=YKsOAAAAIAAJ&q=william+allen+miller&pg=PT20.
மேலும் படிக்க
தொகு- Adams, C. W. (1943). "William Allen Miller and William Hallowes Miller (A Note to the Early History of Spectroscopy)". Isis 34 (4): 337–339. doi:10.1086/347830.
- Ashley-Miller, Michael (2008). "William Allen Miller (1817–70): a distinguished scientist re-discovered". Journal of Medical Biography 16 (4): 237–240. doi:10.1258/jmb.2008.008012. பப்மெட்:18953000. http://jmb.rsmjournals.com/cgi/content/abstract/16/4/237.
- Miller, W. A. (1871). Introduction to the Study of Inorganic Chemistry. London: Longmans, Green, and Company.
william allen miller.