வில்லெம் தெ சிட்டர்
வில்லெம் தெ சிட்டர் (Willem de Sitter, 6 மே 1872 - 20 நவம்பர் 1934) ஒரு டச்சு கணிதவியலாளரும் இயற்பியலாளரும் வானியலாளரும் ஆவார்.
வில்லெம் தெ சிட்டர் Willem de Sitter | |
---|---|
பிறப்பு | சுனீக் | 6 மே 1872
இறப்பு | 20 நவம்பர் 1934 லைடன் | (அகவை 62)
தேசியம் | டச்சியர் |
துறை | இயற்பியல் |
கல்வி கற்ற இடங்கள் | குரோனிங்கன் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | தெ சிட்டர் புடவி,தெ சிட்டர் வெளி |
வாழ்வும் பணியும்
தொகுசுனீக்கில் பிறந்த இவர், கணிதவியலைக் குரோனிங்கன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். குரோனிங்கன் வானியல் ஆய்வகத்தில் பிறகு சேர்ந்தார். இவர் தென்னாப்பிரிக்கா, நன்னம்பிக்கை முனையில் உள்ள அரசு வான்காணகத்தில் 1897 முதல் 1899 வரை பணிபுரிந்தார். பின்னர், 1908 இல் இவர் இலெய்டன் பல்கலைக்கழக வானியல் கட்டிலில் பணியமர்த்தப்பட்டார். இவர் 1919 இல் இருந்து தனது இறப்பு வரை இலெய்டன் பல்கலைக்கழக இயக்குநராக இருந்தார்.
இவர் அண்டப் புறநிலைக் கட்டமைப்புப் புலத்தில் விரிவான ஆய்வு செய்துள்ளார். ஆல்பர்ட் ஐன்சுட்டைனுடன் இணைந்து இவர் 1932 இல் ஓர் ஆய்வுரை வெளியிட்டார். இதில் இருவரும் புடவி வளைமைக்கான அண்டத் தரவுகளின் விளைவுகள் பற்றி விவாதித்துள்ளனர். இவர் தே சிட்டர் வெளி, தெ சிட்டர் புடவி ஆகிய கருத்துப் படிமங்களை விவரித்துள்ளார். இது ஐன்சுட்டைனின் பொது சார்பியலுக்கான ஒரு தீர்வாகும். இதில் பொருண்மமோ நேரியல் அண்ட மாறிலியோ அமையவில்லை. இது இயல்வலர்ச்சிப் போக்கில் தொடர்ந்து விரிவுறும் வெற்றுப் புடவி ஆகும். இவர் வியாழன் கோள் பற்றிய ஆய்வுக்கும் புகழ்பெற்ரவர் ஆவார்.
இவர் சிறிதுகாலம் உடல்நலமில்லாமல் இருந்த்தால் 1934 நவம்பரில் இறந்தார்.[1][2][3]
தகைமைகள்
தொகுஇவர் 1912 இல் நெதர்லாந்து அரசு கலை, அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினர் ஆனார்.[4]
விருதுகள்
தொகு- ஜேம்சு கிரெய்கு வாட்சன் பதக்கம் (1929)
- புரூசு பதக்கம் (1931)
- அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1931)
இவரது பெயர் இடப்பட்டவை
தொகு- நிலாக் குழிப்பள்ளம் தெ சிட்டர்
- குறுங்கோள் 1686 தெ சிட்டர்
குடும்பம்
தொகுஇவரது மகன்களில் ஒருவரான [[உல்போ தெ சிட்டர் (1902 – 1980),ஒரு டச்சு புவியியலாளர் ஆவார். மற்றொருமகனாகிய உல்போ தெ சிட்டர் (1930 – 2010). ஒரு சமூகவியலாளர் ஆவார்.
வில்லெம் அயேர்னவுட் தெ சிட்டர் (1905 – 15 செப்டம்பர் 1944)[5]), டச்சு கிழக்கிந்தியாவாக அன்று விளங்கிய இந்தோனேசியாவில் உள்ள இலெம்பாங்கில் அமைந்த போசுச்சா வான்காணகத்தின் இயக்குநராக இருந்தார். இவர் இங்கே மெசியர் 4 எனும் பேரியல் விண்மீன்கொத்தை ஆய்வு செய்தார்.
தேர்ந்தெடுத்த வெளியீடுகள்
தொகு- On the bearing of the Principle of Relativity on Gravitational Astronomy, 1911, Monthly Notices of the Royal Astronomical Society, Vol. 71, p. 388–415
- A proof of the constancy of the velocity of light, 1913, Proceedings of the Royal Netherlands Academy of Arts and Sciences, 1913, 15 II: 1297–1298
- Ein astronomischer Beweis für die Konstanz der Lichtgeschwindigkeit, 1913, Physikalische Zeitschrift, 14: 429
- On the constancy of the velocity of light, 1913, Proceedings of the Royal Netherlands Academy of Arts and Sciences, 1913, 16 I: 395-396
- Über die Genauigkeit, innerhalb welcher die Unabhängigkeit der Lichtgeschwindigkeit von der Bewegung der Quelle behauptet werden kann, 1913, Physikalische Zeitschrift, 14: 1267
- On Einstein's theory of gravitation and its astronomical consequences, Monthly Notices of the Royal Astronomical Society 76 (1916) 699-728; 77 (1916) 155-184; 78 (1917) 3-28
மேற்கோள்கள்
தொகு- ↑ Obituary Notes of Astronomers at www.astro.uni-bonn.de
- ↑ 1947BAN....10..287D Page 287 at articles.adsabs.harvard.edu
- ↑ Adriaan, Blaauw (2004). "MY CRUISE THROUGH THE WORLD OF ASTRONOMY". Annual Review of Astronomy and Astrophysics 42 (1): 1–37. doi:10.1146/annurev.astro.42.053102.134020. Bibcode: 2004ARA&A..42....1B.
- ↑ "Willem de Sitter (1872 - 1934)". Royal Netherlands Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 19 July 2015.
- ↑ Obituary Notes of Astronomers at www.astro.uni-bonn.de
வெளி இணைப்புகள்
தொகு- O'Connor, John J.; Robertson, Edmund F., "வில்லெம் தெ சிட்டர்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- P.C. van der Kruit Willem de Sitter (1872 – 1934) in: History of science and scholarship in the Netherlands.
- A. Blaauw, Sitter, Willem de (1872–1934), in Biografisch Woordenboek van Nederland.
- Bruce Medal page
- Awarding of Bruce Medal: PASP 43 (1931) 125
- Awarding of RAS gold medal: MNRAS 91 (1931) 422
- de Sitter's binary star arguments against Ritz's relativity theory (1913) பரணிடப்பட்டது 2009-01-29 at the வந்தவழி இயந்திரம் (four articles)
நினைவேந்தல்கள்
தொகு- AN 253 (1934) 495/496 (one line)
- JRASC 29 (1935) 1
- MNRAS 95 (1935) 343
- Obs 58 (1935) 22
- PASP 46 (1934) 368 (one paragraph)
- PASP 47 (1935) 65