விளாடிமிர் சி. லுகோனின்

சோவியத் வரலாற்றாசிரியர் மற்றும் மொழியியலாளர்

விளாடிமிர் கிரிகோரிவிச் லுகோனின் (Vladimir Grigoryevich Lukonin) (உருசியம்: Владимир Григорьевич Луконин) உருசிய நாட்டினைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் 1932 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் தேதியன்று பிறந்தார். பண்டைய ஈரானின் வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். 1984 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று இறந்தார்.[1]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

லுகோனின் சென் பீட்டர்சுபெர்கு நகரில் 1932 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் தேதியன்று பிறந்தார். இவரது தாயார் ஒரு மருத்துவர் மற்றும் தந்தை ஒரு இராணுவ செனரல் ஆவார். 1941 ஆம் ஆண்டு முதல் 1944 ஆம் ஆண்டு வரை தனது தாய் மற்றும் இளைய சகோதரருடன் சமர்கந்துவிற்கு வெளியேற்றப்பட்டார். இவர் லெனின்கிராட் மாநில பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் பீடத்தில் பயின்றார். மேலும் ஏர்மிட்டேச் அருங்காட்சியகத்தில் முதுகலைப் பணி செய்தார். இவரது முனைவர் பட்ட ஆய்வறிக்கை (1961 ஆம் ஆண்டு) "3 முதல் 4 ஆம் நூற்றாண்டுகளில் ஈரான். சாசானிய அரசின் உருவாக்கம் மற்றும் அதிகாரப்பூர்வ கலையின் கலைப்பொருட்கள்" ஆகும். இவருக்கு 1972 ஆம் ஆண்டு "ஆரம்பகால சசானிய ஈரான் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் சில பிரச்சனைகள்" என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கைக்காக டி.லிட் விருது வழங்கப்பட்டது. [1]

தொழில்

தொகு

லுகோனின் 1951 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் மத்திய ஆசியாவில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் பணியாற்றினார். மேலும் 1957 ஆம் ஆண்டு ஏர்மிட்டேசு அருங்காட்சியகத்தின் ஓரியண்டல் துறையில் பதவியைப் பெற்றார். 1965 ஆம் ஆண்டு ஓரியண்டல் துறையின் தலைவராக ஆனார். 1984 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று இறக்கும் வரை அப்பதவியில் இருந்தார். [1]

அங்கீகாரங்கள்

தொகு

1988 ஆம் ஆண்டில், மேரி அன்னா மார்டன் என்பவரது நினைவாக பிரித்தானிய அருங்காட்சியகத்தில் பண்டைய பெர்சியா நிதியை நிறுவினார்.[2]

பிரித்தானிய் அருங்காட்சியகம் இவரது நினைவாக இரண்டு கருத்தரங்குகளை நடத்தியது.

1. ஆரம்பகால மெசபடோமியா மற்றும் ஈரான்: தொடர்பு மற்றும் மோதல், கிமு 3500-1600

2. மெசபடோமியா மற்றும் ஈரான்: பழங்குடியினர் மற்றும் பேரரசுகள், கிமு 1600-539.[3][4]


மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Lukoniin, Vladimir Grigor'evich". iranicaonline.org. Encyclopaedia Iranica. பார்க்கப்பட்ட நாள் 19 January 2023.
  2. "Marten, Mary Anna (1929 -2010)". British Armorial Bindings. University of Toronto Libraries. பார்க்கப்பட்ட நாள் 19 January 2023.
  3. "Catalogue record for Early Mesopotamia ...". British Library. பார்க்கப்பட்ட நாள் 19 January 2023.
  4. "Catalogue record for Later Mesopotamia ...". British Library. பார்க்கப்பட்ட நாள் 19 January 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விளாடிமிர்_சி._லுகோனின்&oldid=3876086" இலிருந்து மீள்விக்கப்பட்டது