விவியானா பேரங்காடி

இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் தானேவில் உள்ள பேரங்காடி

விவியனா பேரங்காடி (Viviana Mall) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் தானே நகரில் உள்ளது. தானே நகரத்தின் மேற்கு பகுதியில் கிழக்கத்திய விரைவு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பேரங்காடி நகரின் அனைத்து பகுதிகளுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பரந்த அளவிலான சில்லறை மற்றும் பொழுதுபோக்கு விற்பனை நிலையங்கள் அங்காடியில் இடம்பெற்றுள்ளன.[3] 13 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு 1.7 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த பேரங்காடியில் தோராயமாக 1 மில்லியன் சதுர அடி [4] கொண்ட சினபோலிசு என்ற திரைப்பட அரங்கம் உள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்காக வடிவமைக்கப்பட்ட தனி விளையாட்டிடமும் 250 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கடைகளும் உள்ளன. மேலும் 19 பெரிய மற்றும் சிறிய வணிகர்கள் இக்கடைகளில் வாடகைதாரர்களாக உள்ளனர். [1]

விவியானா பேரங்காடி
அதிசயங்கள் நிறைந்த பேரங்காடி
இருப்பிடம்:தானே, மகாராட்டிரம், இந்தியா
அமைவிடம்19°12′31″N 72°58′18″E / 19.2086°N 72.9717°E / 19.2086; 72.9717
திறப்பு நாள்2013[1]
உருவாக்குநர்சேத்து நிறுவனம்
உரிமையாளர்சேத்து நிறுவனம்
கடைகள் எண்ணிக்கை250+
கூரை எண்ணிக்கை20
மொத்த வணிகத் தளப் பரப்பளவு1,000,000 சதுர அடிகள் (93,000 m2)[2]
வலைத்தளம்vivianamalls.com

சிறப்பம்சங்கள்

தொகு

தானே, முலுந்து போவாய், காட்கோபார் மற்றும் மும்பையின் பிற மத்திய புறநகர்ப் பகுதிகளிலிருந்து எளிதாக அணுகும் வகையில் அமைந்துள்ளது. மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதிகளான போவாய் வழியாக இங்கு எளிதில் வரமுடியும். [5] 900 கிலோவாட்டு அளவு மின் உற்பத்தித் திறன் கொண்ட கூரை சூரிய மின் நிலையமும் விவியன் பேரங்காடியின் கூரையில் கட்டப்பட்டுள்ளது. இந்த முயற்சி சூரிய ஆற்றல் மூலம் ஒரு மாதத்தில் 91,000 வாட்களை உற்பத்தி செய்யும் முதல் பேரங்காடி என்ற சிறப்பை பெற்றுள்ளது. [6] பிரதான சில்லறை விற்பனைப் பிரிவுகளில் 250 எண்ணிகைக்கும் மேற்பட்ட முன்னணி வணிகப்பெயர் பெற்ற விற்பனைப் பொருட்கள் கிடைக்கின்றன. பார்வைக் குறைபாடுள்ள வாடிக்கையாளர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கும் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பேரங்காடியாக இது திகழ்கிறது. “எக்சு.ஆர்.சி.வி.சி-விவியானா விரிவாக்கம்” என்ற பெயரில் பார்வையற்றோருக்கான வளமையம் ஒன்றையும் விவியானா பேரங்காடி அறிமுகப்படுத்தியுள்ளது.[7]

தனிச்சிறப்புகள்

தொகு

250 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட வணிகப் பெயர் பெற்ற விற்பனைப் பொருட்களைக் கொண்ட இப்பேரங்காடி நவீன வாழ்க்கை முறை பேரங்காடி என்று கருதப்படுகிறது. வயது வேறுபாடின்றி அனைத்து வயது குழுக்களுக்கும் உதவும் வகையில் உள்ளது. மிகப்பெரிய பல்கூட்டு திரையரங்கச் சங்கிலிகளில் ஒன்றான சினிபோலிசின் 14 திரையரங்குகளும், கேளிக்கை நகரம் எனப்படும் குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதியும் பேரங்காடியின் தனிச்சிறப்புகளாகும். [8] [9]

விருதுகள்

தொகு

புது தில்லி தாச்சு அரண்மனையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் மும்பை பெருநகரப் பகுதிக்கான '2014 ஆம் ஆண்டின் சிறந்த சில்லறை விற்பனைத் திட்டம்' என்று விவியானா பேரங்காடிக்கு பெயரிடப்பட்டது. [10]

இதே ஆண்டுக்கான ஆசிய ரியல் எசுடேட்டு விருதுகள் இரண்டும் விவியானா பேரங்காடிக்கு கிடைத்தது. 'ஆண்டின் சிறந்த சில்லறை விற்பனையாளர் விருது' மற்றும் 'பயனுள்ள வடிவமைப்பு மற்றும் விற்பனைப் பொருட்காட்சி விருது ' ஆகியவை இவ்விரண்டு விருதுகளாகும். [11]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 indiainfoline.com. "Sheth Developers inaugurates its flagship mall - Viviana" (in en). https://www.indiainfoline.com/article/news-top-story/sheth-developers-inaugurates-its-flagship-mall-viviana-113110810475_1.html. indiainfoline.com. "Sheth Developers inaugurates its flagship mall - Viviana". Retrieved 2018-06-13.
  2. "Viviana Mall". Archived from the original on 2020-09-27. பார்க்கப்பட்ட நாள் 2021-07-12.
  3. "Indian Retailer". Archived from the original on 2021-02-27. பார்க்கப்பட்ட நாள் 2021-07-12.
  4. "Malls of India".
  5. indiainfoline.com. "Viviana Mall opens its second phase" (in en). https://www.indiainfoline.com/article/news-business/viviana-mall-opens-its-second-phase-113110814007_1.html. 
  6. "Viviana Mall becomes India's first mall to have largest Solar Power plant installed at a single site | Solar Times". solartimes.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-13.
  7. "Thane mall is probably the only visually-impaired friendly in the country - Times of India". https://timesofindia.indiatimes.com/city/mumbai/Thane-mall-is-probably-the-only-visually-impaired-friendly-in-the-country/articleshow/45964807.cms. 
  8. indiainfoline.com. "Viviana Mall opens its second phase" (in en). https://www.indiainfoline.com/article/news-business/viviana-mall-opens-its-second-phase-113110814007_1.html. 
  9. "About Viviana" (in en-US) இம் மூலத்தில் இருந்து 2018-06-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180613144207/http://vivianamalls.com/about-viviana/#1477304212287-a8ff516d-d440. 
  10. indiainfoline.com. "Viviana Mall Wins the Best Retail Project of 2014 across Mumbai Metropolitan Region" (in en). https://www.indiainfoline.com/article/news-business-wire-advertising/viviana-mall-wins-the-best-retail-project-of-2014-across-mumbai-metropolitan-region-115011200067_1.html. 
  11. indiainfoline.com. "Viviana Mall bags two awards at the Asia Real Estate Awards 2014" (in en). https://www.indiainfoline.com/article/news-sector-retail/viviana-mall-bags-two-awards-at-the-asia-real-estate-awards-2014-114022204793_1.html. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=விவியானா_பேரங்காடி&oldid=3602905" இலிருந்து மீள்விக்கப்பட்டது