விஸ்மய
விஸ்மய (Vismaya) என்பது கேரளத்தின் கண்ணூரில் உள்ள தளிப்பறம்பா அருகே உள்ள ஒரு நீர் விளையாட்டுப் பூங்கா ஆகும். இந்த பூங்காவை மலபார் சுற்றுலா மேம்பாட்டு கூட்டுறவு லிமிடெட் (எம்.டி.டி.சி) உருவாக்கி நடத்தி வருகிறது. இது பரசினிகடவில் உள்ள பிரபல முத்தப்பன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இது 2008 ஆகத்தில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது, அதன் பின்னர் இது மலபாரில் விடுமுறை நாளுக்கு ஏற்ற இடமாக மாறியுள்ளது. 50,000,000 எல் (11,000,000 இம்ப் கேலன்; 13,000,000 அமெரிக்க கேலன்) நீர் கொள்ளளவு கொண்ட இரண்டு ஏக்கர் (0.81 எக்டேர்) பரப்பளவு கொண்ட செயற்கை ஏரியில் சேகரிக்கப்பட்ட மழை நீரால் இந்த பூங்கா முழுமையாக இயங்குகிறது.
Slogan | "ഉല്ലാസം എല്ലാര്ക്കും" (எல்லோருக்கும் உல்லாசம்) |
---|---|
அமைவிடம் | இந்தியா, கேரளம், கண்ணூர், பரசினிகடவு |
உரிமையாளர் | மலபார் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் |
திறப்பு | 2008 |
இணையத்தளம் | www |
நிலை | செயல்பாட்டில் |
முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலம்
தொகுமலபார் சுற்றுலா மேம்பாட்டு கூட்டுறவு லிமிடெட் (எம்.டி.டி.சி) 15 பிப்ரவரி 2000 அன்று பதிவு செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்குப் பிறகு, 9 மார்ச், 2000 அன்று, ஈ. பி. ஜெயராஜன் நிறுவனத்தின் தலைவராக இதன் பணிகளைத் துவக்கினார். மலபாரின் தொழில் துறை, முக்கியமாக கண்ணூர் ஆடைத் தொழிலில் குறிப்பாக கைத்தறி, காதி மற்றும் பிற தொழில்களான பீடி, மட்பாண்டங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் இந்த தொழில்கள் அனைத்தும் பல சவால்களை எதிர்கொண்டன, அவை படிப்படியாக பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். இத்தகைய சூழ்நிலையில், வளர்ந்து வரும் சந்தையைச் எதிர்நோக்குவதற்கும், வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையை வளர்த்தெடுப்பதோடு கூடுதலாக அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், நிறுவனம் முடிவு செய்தது.
இந்த நிறுவனத்தின் முக்கிய பணியாக சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொழில் தொடர்பான வணிகத்தை ஊக்குவித்தல், நிறுவுதல், பராமரித்தல், நிர்வகித்தல் போன்றவை:
- கேளிக்கை பூங்கா, அருங்காட்சியகம்.
- வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான சுற்றுப்பயண ஏற்பாடுகள்.
- உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், குளிர் பானக்கடைகள், பனிக்கூழ் கடைகள் போன்றவை.
- கைவினைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்வதற்கான கடைகள்.
- நீர் விளையாட்டு மற்றும் ஆற்றுப் பயணங்கள்.
- வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய மலை மற்றும் கடற்கரை விடுதிகள்.
எம்டிடிசி தொடங்கிய முதலில் திட்டங்களில் விஸ்மய பூங்காவும் ஒன்றாகும்.
அம்சங்கள்
தொகுவிஸ்மய கேளிக்கை பூங்காவானது, நீர் விளையாட்டுப் பூங்கா மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் பூங்கா ஆகியவற்றின் கலவையாகும். இதில் நீர் விளையாட்டுகள், குழந்தைகளுக்கான தகவல் மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுகள் மற்றும் பெரியவர்களுக்கான சாகச விளையாட்டுகள் உள்ளன.
முக்கிய இடங்கள்
தொகுமெய்நிகர் அருவி மற்றும் லேசர் நிகழ்ச்சி இந்த கேளிக்கை பூங்காவின் இரண்டு முக்கிய இடங்கள். மெய்நிகர் அருவி என்பது ஒரு இசை அருவியாகும், இங்கு பார்வையாளர்கள் நீர் ஓடையின் கீழ் பின்னணி இசைக்கு ஏற்ப்ப நடனமாடுகிறார்கள். இந்த அருவி நிகழ்வு பொதுவாக நாள்தோறும் நண்பகல் 2 மணி முதல் 3 மணிவரை நடக்கும். லேசர் காட்சிகள் வழக்கமாக மாலை நேரத்தில் நடத்தப்படும் முக்ககிய நிகழ்வாகும்.
சவாரிகள்
தொகுமுக்கிய சவாரிகள்:
- அக்வா டிரெயில்
- மின்சார ஊஞ்சல்
- இராட்சத சக்கரம்
- குதிக்கும் தவளை
- மெர்ரி சுற்று
- ஸ்கை ரயில்
- இடிக்கும் மகிழுந்து
- அலைக் குளம்
- சூறாவளி
- ட்விஸ்டர்
மழைநீர் சேகரிப்பு
தொகுவிஸ்மய மேற்கொண்ட மழை நீர் சேகரிப்பு திட்டமானது இரண்டு ஏக்கர் பரப்பளவிலான ஏரியாக பரவியுள்ளது. மேலும் பூங்காவின் அனைத்து நீர் தேவைகளும் இந்த சேகரிக்கப்பட்ட நீரைக் கொண்டு பூர்த்தி செய்யப்படுகின்றது. விஸ்மயா மேற்கொண்ட இந்த பசுமைக் கொள்கை உலகின் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நீர் விளையாட்டுப் பூங்காக்களில் ஒன்றாகும். [நம்பகமற்றது ]
அருகிலுள்ள இடங்கள்
தொகுபிற
தொகுஉணவு
தொகுமேலும் காண்க
தொகுபடத் தொகுப்பு
தொகு-
விஸ்மயா பூங்கா
-
முக்கிய ஈர்ப்பு
-
தொட்டில்
-
நுழைவாயில்
-
பூங்கா உள்ளே
மேற்கோள்கள்
தொகு- Keralatourism.org பரணிடப்பட்டது 2012-03-01 at the வந்தவழி இயந்திரம்
- Asianetindia.com பரணிடப்பட்டது 2011-09-04 at the வந்தவழி இயந்திரம்
- எனது- கேரள.காம்[தொடர்பிழந்த இணைப்பு]
- Zonkerala.com