வி. ஆர். பஞ்சமுகி

வி. ஆர். பஞ்சமுகி (V. R. Panchamukhi) வாதிராஜ பஞ்சமுகி என்றும், வாசஸ்பதி வி. ஆர். பஞ்சமுகி என்றும் குறிப்பிடப்படும் இவர் ஓர் இந்தியப் பொருளியலாளுரும், சமசுகிருத அறிஞருமாவார் . இவர் 1936 செப்டம்பர் 17 அன்று கர்நாடகாவின் தார்வாட்டில் பிறந்தார். இவர் தொல்பொருள் ஆய்வாளரும் உளவியலாளரும் சமசுகிருத அறிஞருமான வித்யாரத்ன சிறீ ஆர். எஸ். பஞ்சமுகியின் மூத்த மகன் ஆவார். [1]

வி.ஆர்.பஞ்சமுகி
இயற்பெயர்வாதிராஜாச்சார்ய பஞ்சமுகி
பிறப்பு(1936-09-17)17 செப்டம்பர் 1936
பாகல்கோட், கருநாடகம்
தேசியம்இந்தியர்
பயின்றகம்
விருதுகள்
  • சமசுகிருதத்திற்கான இந்திய மரியாதை சான்றிதழ் 2003
  • சிறீ குருசர்வபோமா ராகவேந்திர பிரசாஸ்தி - சிறீ ராகவேந்திர சுவாமி மடம், மந்திராலயம், 2016
  • பாஞ்சஜண்ய புரஸ்காரம், 2014
வாழ்கைத்துணைவேதவதி வி. பஞ்சமுகி

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவர், கர்நாடகாவின் பாகல்கோட்டில் வித்யாரத்ன சிறீ இராகவேந்திராச்சார்யா, எஸ்.பஞ்சமுகி மற்றும் கமலாபாய் ஆர்.பஞ்சமுகி ஆகியோருக்கு ஐந்து சகோதரிகளுக்குப் பிறகு இவர் ஆறாவது குழந்தையாக பிறந்தார்.   இவரது தந்தை ஒரு புகழ்பெற்ற கல்வெட்டு, தொல்பொருள் ஆய்வாளர் மற்றும் இந்தியவியலாளர் ஆவார். அவர் தனது வாழ்க்கையை வரலாற்று ஆராய்ச்சி மற்றும் இந்தியவியல் ஆய்வுகளுக்கு அர்ப்பணித்தார். மேலும், தாச சாகித்ய ஆராய்ச்சியில் முன்னோடியாக இருந்தார். தனது தாயார் தசரா படகலுவின் பாரம்பரியத்தின் அடிப்படையில் ஒரு மதிப்பு முறையை உருவாக்கினார். வாதிராஜர் தனது ஆரம்பகால கல்வியை சமசுகிருதத்திலும் தத்துவத்திலும் தனது தந்தையின் கீழ் பெற்றார்.

இவர் கர்நாடகப் பல்கலைக்கழகத்தில் 1956 இல் கணிதம் மற்றும் புள்ளிவிவரங்களைப் படித்தார். இவர் 1958 ஆம் ஆண்டில் புள்ளிவிவரங்களில் மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதற்காக இவருக்கு முதல்வரின் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டில் புது தில்லி பொருளியல் பள்ளியில் 'பொருளாதாரக் கொள்கைக்கான விளையாட்டுக் கோட்பாட்டின் பயன்பாடுகள்' என்ற தனது ஆய்வறிக்கையுடன் முனைவர் பட்டம் பெற்றார்.

தொழில் தொகு

பொருளாதாரம் மற்றும் சமசுகிருதத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். [2]

பொருளாதாரம் தொகு

பஞ்சமுகி பொருளாதாரத் துறையில் பல வழிகளில் பங்களித்தார். இலண்டன் பொருளியல் பள்ளியின் (1975) இதழில் வெளியிடப்பட்ட இலக்கிய ஆய்வில் ஜகதீஷ் பகவதி எழுதிய ஒரு முன்னோடி படைப்பாக ஆட்டக் கோட்பாடு, சர்வதேச வர்த்தகப் பயன்பாடுகள் குறித்த இவரது பணி குறிப்பிடப்பட்டுள்ளது. பகவதி மற்றும் டி.என்.சீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட 'பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு வள செலவுக்கான பயனுள்ள விகிதங்கள்' குறித்த இவரது பணி 1960கள் மற்றும் 1970களின் வர்த்தக கொள்கை ஆட்சிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.

சமசுகிருதம் தொகு

பொருளாதாரம் மற்றும் மேலாண்மை என்ற கருப்பொருள்களில் பஞ்சமுகி சமசுகிருதத்தில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் பல சமசுகிருத கவிதைகளை இயற்றி வெளியிட்டார்.

திருப்பதி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீடத்தின் முதல்வராக, இரண்டு தடவை (1998 - 2008), [3] பணியாற்றினார். சமசுகிருத-அறிவியல் கண்காட்சிகள், சமஸ்க்-நெட் மற்றும் சமசுகிருத கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற புதுமையான திட்டங்களைத் தொடங்குவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். ராஷ்டிரிய சமசுகிருத வித்யாபீடத்தில் துவைத வேதாந்தத்தின் புதிய துறையைத் தொடங்கினார்.

இவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (டி.டி.டி) குழு உறுப்பினராக இருந்தார். அதன் அரசியலமைப்பைக் கட்டியெழுப்ப உதவிய இவர், திருமலை சிறீ வெங்கடேசுவர வேத பல்கலைக்கழகத்தை நிறுவ உதவினார். [4]

ஆராய்ச்சி ஆர்வங்களில் பகவத் கீதை மற்றும் மேலாண்மை, வளர்ச்சி குறித்த பண்டைய இந்திய எண்ணங்கள், நவீன காலங்களில் சமசுகிருதத்தின் பொருத்தம் மற்றும் சமசுகிருதம் மற்றும் அறிவியல் ஆகியவை அடங்கும். [5]

இவர் பல புத்தகங்களை எழுதினார். அதில் பகவத் கீதையை விளக்கி, அதன் கொள்கைகளை நவீன மற்றும் சமகால காலத்திற்கு பயன்படுத்தினார். எஸ்.வி.பி.சி தொலைக்காட்சி (சிறீ வெங்கடேசுவரா பக்தித் தொலைக்காட்சி) ஒளிபரப்பிய "சிறீமத் பகவத் கீதை - சமகால வாழ்க்கைக்கு அதன் பொருத்தம்" என்ற தலைப்பில் இவர் ஒரு முழுமையான தொடரை வழங்கினார்.

மேற்கோள்கள் தொகு

  1. "ICSSR Chairman Bio". Icssr.org. Archived from the original on 2004-10-30. பார்க்கப்பட்ட நாள் 2016-12-14.
  2. "Most widely held works by V. R Panchamukhi". WorldCat.
  3. "Rashtriya Sanskrit Vidyapeetha :: Tirupati". Rsvidyapeetha.ac.in. 1989-08-26. Archived from the original on 2009-03-29. பார்க்கப்பட்ட நாள் 2016-12-14.
  4. "Establishment of Sri Venkateswara Vedic University". Svvedicuniversity.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2016-12-14.
  5. "Gita Lectures at TTD". News.tirumala.org. Archived from the original on 2016-09-24. பார்க்கப்பட்ட நாள் 2016-12-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._ஆர்._பஞ்சமுகி&oldid=3591867" இலிருந்து மீள்விக்கப்பட்டது