வி. ராமசுப்ரமணியன்

நீதியரசர் வி. இராமசுப்ரமணியன் (Justice V. Ramasubramanian) இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதியரசராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நீதியரசர் வி.இராமசுப்பிரமணியனை 2024 திசம்பர் 23 அன்று இந்திய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமித்தார்.[2] [3][4][5] இவர் பதவி ஏற்றதிலிருந்து 3 ஆண்டுகளுக்கு இப்பதவி வகிப்பார்.

வி. ராமசுப்ரமணியன்
V. Ramasubramanian
இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 திசம்பர் 2024
முன்னையவர்அருண் குமார் மிசுரா
Judge of இந்திய உச்ச நீதிமன்றம்
பதவியில்
23 செப்டம்பர் 2019 – 29 சூன் 2023
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
தலைமை நீதிபதி-இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம்
பதவியில்
22 சூன் 2019 – 22 செப்ட்ம்பர் 2019
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
தெலங்காணா உயர் நீதிமன்றம் நீதிபதி
பதவியில்
27 ஏப்ரல் 2016 – 21 சூன் 2019
பரிந்துரைப்புடி.எசு. தாக்கூர்
நியமிப்புபிரணப் முகர்ஜி
சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி
பதவியில்
31 சூலௌ 2006 – 26 ஏப்ரல் 2016
பரிந்துரைப்புயோகேசு குமார் சபார்வால்
நியமிப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 சூன் 1958 (1958-06-30) (அகவை 66)
மன்னார்குடி, தமிழ் நாடு
முன்னாள் கல்லூரிஇராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை[1]
இணையத்தளம்www.sci.gov.in

இளமையும் தொழிலும்

தொகு

வி. இராமசுப்பிரமணியன் தமிழ்நாட்டின் மன்னார்குடியில் 1958 சூன் 30 அன்று பிறந்தார். இவர் சென்னையிலுள்ள இராமகிருஷ்ணா விவேகானந்தா கல்லூரியில் வேதியியலில் இளநிலைப் பட்டம் பெற்ற பின்னர் சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு பயின்றார். 1983-1987 வரை மூத்த வழக்கறிஞர்களான கே. சர்வபௌமன், டி.ஆர். மணி போன்ற மூத்த வழக்கறிஞர்களிடம் பணியாற்றிய இராமசுப்பிரமணியன், 23 ஆண்டு காலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

2006 சூலை 31 அன்று வி. இராமசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2009 நவம்பர் 9 அன்று நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின் 2023 ஆம் ஆண்டு சூன் மாதம் 29 அன்று பணி ஓய்வு பெறும் வரை[6] இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதியரசராகப் பணியாற்றினார்.

2024 திசம்பர் 23 அன்று இந்திய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "HONOURABLE SRI JUSTICE V.RAMASUBRAMANIAN". தெலங்காணா உயர் நீதிமன்றம். பார்க்கப்பட்ட நாள் 6 April 2021.
  2. Former Supreme Court judge V. Ramasubramanian appointed NHRC chairman
  3. President Murmu appoints former SC judge Justice V Ramasubramanian as NHRC chairperson
  4. Former SC judge V Ramasubramanian appointed new chairperson of NHRC
  5. Former SC judge V Ramasubramanian appointed new chairperson of NHRC
  6. ""Independent judge doesn't mean being anti-establishment": Justice Ajay Rastogi at farewell function". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-05-19. பார்க்கப்பட்ட நாள் 2023-06-28.
  7. Subramani, A (23 December 2024). "Justice V Ramasubramanian appointed NHRC chairperson". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 26 December 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._ராமசுப்ரமணியன்&oldid=4177283" இலிருந்து மீள்விக்கப்பட்டது