வீணா தேவி (வைசாலி)

இந்திய அரசியல்வாதி

வீணா தேவி (Veena Devi)(பிறப்பு 22 ஏப்ரல் 1967) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பீகார் மாநிலம் வைசாலி மக்களவையின் தற்போதைய உறுப்பினர் ஆவார் . இவர் கைகாட் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சியுடன் இணைந்து வைசாலியில் போட்டியிட்டு ரகுவன்ஷ் பிரசாத் சிங்கை தோற்கடித்தார்.[1]

வீணா தேவி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்இராம கிசோர் சிங்
தொகுதிவைசாலி
பீகார் சட்டமன்றம்
பதவியில்
2010–2015
முன்னையவர்மகேசுவர் யாதவ்
பின்னவர்மகேசுவர் யாதவ்
தொகுதிகெய்காட் சட்டமன்றத் தொகுதி
துணைத்தலைவர், இந்திய மாவட்ட குழு
பதவியில்
2006–2010
தொகுதிமுசாபர்பூர்
தலைவர், இந்திய மாவட்ட குழு
பதவியில்
2001–2006
தொகுதிமுசாபர்பூர்
3வது நாடாளுமன்ற கட்சி தலைவர் (இராலோஜச)
பதவியில் உள்ளார்
பதவியில்
2 செப்டம்பர் 2021 (2021-09-02)
முன்னையவர்சிரக் பஸ்வான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 ஏப்ரல் 1967 (1967-04-22) (அகவை 56)
அரசியல் கட்சிராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி
லோக் ஜனசக்தி கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
பாரதிய ஜனதா கட்சி
துணைவர்
தினேஷ் பிரசாத் சிங் (before 1984)
பிள்ளைகள்4
வாழிடம்(s)முசாபர்பூர், பீகார், இந்தியா

அரசியல் வாழ்க்கை தொகு

செப்டம்பர் 2, 2021 அன்று, சிராக் குமார் பாஸ்வானுக்குப் பதிலாக லோக் ஜனசக்தி கட்சியின் நாடாளுமன்றத் தலைவரானார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

தேவி 22 ஏப்ரல் 1967 அன்று பீகாரில் உள்ள தர்பங்காவில் உபேந்திர பிரசாத் சிங் மற்றும் சபுஜ்கலா தேவிக்கு மகளாகப் பிறந்தார். இவர் மேல்நிலைக் கல்வி கற்றுள்ளார்.[3] இவர் 27 ஏப்ரல் 1984-ல் முசாபர்பூர் சட்ட மேலவை உறுப்பினர் தினேஷ் பிரசாத் சிங்கை மணந்தார்.[3] இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.[3] இவர் தௌத்பூர் கிராமத்தில் வசிக்கிறார்.[4]

2010ல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் கைகாட்டில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.இவர் முசாபர்பூரின் முன்னாள் தலைவராக இருந்தார்.[5] [6] இவர் 2001-ல் முசாபர்பூர் மாவட்டத்தின் தலைவராகவும், 2006-ல் துணைத்தலைவராகவும் ஆனார்.

மேற்கோள்கள் தொகு

  1. Kumar, Abhay (24 March 2019). "For Bihar NDA, blood is thicker than sweat". Deccan Herald. https://www.deccanherald.com/national/national-politics/for-bihar-nda-blood-is-thicker-than-sweat-724832.html. 
  2. https://navbharattimes.indiatimes.com/state/bihar/patna/bihar-news-pashupati-kumar-paras-removed-chirag-paswan-from-the-post-of-ljp-parliamentary-board-chairman-and-handed-over-chair-to-veena-devi/articleshow/85863265.cms. {{cite web}}: Missing or empty |title= (help)
  3. 3.0 3.1 3.2 "Members : Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 24 February 2020.
  4. "VEENA DEVI (Bharatiya Janata Party(BJP)):Constituency- Gaighat(MUZAFFARPUR) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2 February 2020.
  5. "Assembly Election Result 2016, Assembly Election Schedule Candidate List, Assembly Election Opinion/Exit Poll Latest News 2016".
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-01-23. பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீணா_தேவி_(வைசாலி)&oldid=3601836" இலிருந்து மீள்விக்கப்பட்டது