வீரக்கல் சௌடம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

வீரக்கல் சௌடம்மன் கோயில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம், வீரக்கல் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு சௌடம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திண்டுக்கல்
அமைவிடம்:வீரக்கல், ஆத்தூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஆத்தூர்
மக்களவைத் தொகுதி:திண்டுக்கல்
கோயில் தகவல்
மூலவர்:சௌடம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:நவராத்திரி, மஹாசிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:செப்புப் பட்டயம்
வரலாறு
கட்டிய நாள்:பதினான்காம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் சௌடம்மன் சன்னதியும், அ/மி. கணபதி, மீனாட்சி-சுந்தரேஸ்வரர் - பைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.அறங்காவலர் குழுத்தலைவர் அவர்களால் நிர்வகிக்கப் படுகின்றது.இத்திருக்கோவிலில் வீற்றிருக்கும் மூலவர் சௌடம்மன் சப்த மாதர்களுள் ஒருவரான சாமுண்டீஸ்வரியின் அம்சமாகும். இத்திருக்கோவிலின் தலவிருட்சம் பால மரமாகும்[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் நவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் மகாசிவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது. பிரதி மாதம் பௌர்ணமி தினத்தன்று காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி முடிய அனைத்து வகையான அபிக்ஷேகங்களும் செய்யப்பட்டு பூஜை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.இத்திருக்கோவிலில் அருள்பாலிக்கும் மூலவர் ஸ்ரீசௌடம்மன் காஞ்சி காமகோடி மட பீடாதிபதிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களால் ஆராதனை செய்து பூஜிக்கப்பட்டதாகும்.அம்பாள் வடக்கு நோக்கி அமர்ந்து உக்ர தேவதையாக அருள்பாலிக்கிறாள்.இத்திருக்கோவில் காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும்,மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)