வெடிவேம்பு

வெடிவேம்பு
C. tabularis flowers, leaves and capsule
உயிரியல் வகைப்பாடு
திணை:
தாவரம்
வரிசை:
சபிண்டேலசு
குடும்பம்:
மெலியாசியே
பேரினம்:
சுக்ரேசியா
இனம்:
சு. டேபுலாரிசு
இருசொற் பெயரீடு
சுக்ரேசியா டேபுலாரிசு
ஏ. சுசு, 1847
வேறு பெயர்கள்

சிற்றினப் பட்டியல்

வெடிவேம்பு (Chukrasia tabularis)(சுக்ரேசியா டேபுலாரிசு) என்பது ஒரு இலையுதிரும், அயன மண்டலக் காட்டு மர இனமாகும். இது வங்காளதேசம், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, இலாவோசு, மலேசியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, வியட்டுநாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தது.[2] இது கமரூன், கோசுட்டாரிக்கா, நிக்கராகுவா, புவேட்டோரிக்கோ, தென்னாபிரிக்கா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.[3]

சுக்குராசியா (Chukrasia) சாதி ஒரு தனிவகையானது. முன்னர் அது தனி இனங்களாக வகைப்படுத்தப்பட்ட போதிலும் தற்போது ஒரே இனமாகக் குறிப்பிடப்படுகிறது.[4] "C. velutina" (இந்த இனம்) தாய்லாந்தின் பிரயே மாகாணத்தின் பூவும் மரமும் எனக் குறிக்கப்படுகிறது.[5] இது ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு முக்கிய மருத்துவத் தாவரமாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

பொதுப் பெயர்கள்[6] தொகு

  • ஆங்கிலம் - Bastard cedar, White cedar, East-Indian mahogany, Indian redwood, Burma almond wood, Chickrassy, Chittagong wood
  • இந்தி - சிக்கராசி (चिकरासी)
  • மணிப்பூரி - தைமரெங் (তাঈমৰেঙ)
  • தெலுங்கு - கொண்டவேப்பம்
  • கன்னடம் - கல்கரிகே
  • மலையாளம் - சுவன்னக்கில்
  • மியான்மர் - யின்மார்பின் (ယင်းမာပင်) (ယင္းမာ)
  • வங்காளி - சிக்கராசி
  • அசாமியம் - போகா-போமா
  • சிங்களம் - ஹுலன்ஹிக்கு (හුලං හික් ) / ஹிரிக்கித்தை (හිරිකිත)[7]
  • வியட்டுநாமியம் - Lát hoa

உசாத்துணை தொகு

வெளித் தொடுப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெடிவேம்பு&oldid=3610807" இலிருந்து மீள்விக்கப்பட்டது