வெண்டொண்டைப் புதர்ச்சிட்டு

வெண்தொண்டை புதர்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சாக்சிகோலா
இனம்:
சா. இன்சிக்னிசு
இருசொற் பெயரீடு
சாக்சிகோலா இன்சிக்னிசு
கிரே, 1846

வெண்தொண்டை புதர்சிட்டு (White-throated bush chat)(சாக்சிகோலா இன்சிக்னிசு), கோட்சன்சு புதர்சிட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது சாக்சிகோலா பேரினத்தைச் சேர்ந்த ஒரு பழைய உலக ஈபிடிப்பான் பறவையாகும். இது பறவைகளின் பன்னாட்டு அமைப்பு மூலம் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அழிவாய்ப்பு இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது . 2001ஆம் ஆண்டில், உலகளாவிய இதன் எண்ணிக்கை 3,500 முதல் 15,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் குளிர்கால வாழிடப் பகுதியான புல்வெளிகளின் விரைவான இழப்பது முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது. நேபாளம் மற்றும் இந்திய தெராய் மற்றும் தூராய் குளிர்கால வாழிடமாகும். இந்த பகுதியில், ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா, சுக்லபந்தா, சித்வான் தேசிய பூங்கா, காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் மனாசு தேசிய பூங்கா மற்றும் லும்பினி கிரேன் சரணாலயத்தில் இந்தச் சிற்றினம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஈரமான மற்றும் உலர்ந்த புல்வெளிகள், நாணல்கள் மற்றும் ஆற்றுப்படுகைகளை விரும்புகிறது. கரும்பு வயல்களிலும் காணப்படுகிறது. வசந்த காலத்திலும் கோடைக்காலத்திலும், இது அல்பைன் அல்லது துணை-அல்பைன் புல்வெளிகளில் இனப்பெருக்கம் செய்கிறது. மங்கோலியாவின் மலைகள் மற்றும் உருசியாவின் அருகிலுள்ள பகுதிகளையும் பயன்படுத்துகிறது.[1]

சுக்லபந்தா தேசியப் பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, சனவரி 2005-ல் மொத்தம் 19 வெண்தொண்டை புதர்சிட்டுகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் ஒரு வருடம் கழித்து இவற்றில் 8 ஆண்கள் மட்டுமே காணப்பட்டன.[2]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு