வெண்ணெய் ஆட்டுக்குட்டி
வெண்ணெய் ஆட்டுக்குட்டி (Butter lamb) என்பது பல உருசியா, சுலோவீனியா, போலந்து கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த கத்தோலிக்கர்களுக்கான உயிர்ப்பு ஞாயிறு உணவில் வைக்கப்படும் ஒரு பாரம்பரிய வெண்ணெய் சிற்பமாகும் . [1] வெண்ணெயை ஒரு ஆட்டுக்குட்டியாக கையால் அல்லது அச்சால் ஆட்டுகுட்டி வடிவத்தில் செய்யப்படுகிறது. [2] இது உயிர்ப்பு ஞாயிறு நேரத்தில் டெலி என்ற கடையிலும், போலந்து சிறப்பு சந்தைகளிலும், சில பொது மளிகை கடைகளிலும் விற்கப்படுகிறது. வெண்ணெய் ஆட்டுக்குட்டி என்பது நியூயார்க்கின் பிராட்வே சந்தையான பஃபலோவில் குறிப்பிடத்தக்க ஒரு பாரம்பரியமாகும். இது பல தசாப்தங்களாக போலந்து பாரம்பரியத்தை உயிரோடு வைத்திருக்கும் மால்க்ஸ்யூஸ்கியின் வெண்ணெய் ஆட்டுக்குட்டிகளுக்கு கடமைப் பட்டுள்ளது. உயிர்ப்பு ஞாயிறு, வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வருடாந்திர நிகழ்வாக வெண்ணெய் ஆட்டுக்குட்டிகளை வாங்க பலர் பிரபலமான பிராட்வே சந்தைக்கு வருகிறார்கள். [3] [4] [5]
இந்த பொம்மையின் கண்கள் மிளகு அல்லது உலர்ந்த கிராம்புகளால் அமைக்கப்படுகின்றன. மேலும், ஒரு பல்குத்தும் குச்சியில் வெள்ளை எழுத்துகளைக் கொண்ட ஒரு சிவப்பு ரிப்பன் அதன் பின்புறத்தில் வைக்கப்படுகிறது.
உருசிய மொழியில் இதன் பெயர் பராஷேக் இஸ் மஸ்லா ( барашек ) என்பதாகும். [6] ஒரு மாறுபாடான சர்க்கரை ஆட்டுக்குட்டி எனப்பொருள். [7]
மேற்கோள்கள்
தொகு- ↑ The Oxford companion to American food and drink.
- ↑ Easter Craft Book.
- ↑ "Malczewski's Easter Butter Lamb". Archived from the original on பிப்ரவரி 17, 2020. பார்க்கப்பட்ட நாள் January 20, 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Broadway Market kicks off Easter season" இம் மூலத்தில் இருந்து 2012-03-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120321143056/http://www.wivb.com/dpp/news/buffalo/Broadway-Market-kicks-off-Easter-season. பார்த்த நாள்: 2011-04-08.
- ↑ "A Traditional Buffalo Easter" இம் மூலத்தில் இருந்து 2013-02-09 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130209041705/http://www.wgrz.com/news/article/119156/37/A-Tradional-Buffalo-Easter. பார்த்த நாள்: 2011-04-24.
- ↑ Goldstein, Darra (1999). A taste of Russia: a cookbook of Russian hospitality. Russian Information Service. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-880100-42-4.
- ↑ Smith, Andrew F. (2007). The Oxford companion to American food and drink. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-530796-2.Smith, Andrew F. (2007). The Oxford companion to American food and drink. Oxford University Press. ISBN 978-0-19-530796-2.