வெண்தொண்டைக் கதிர்க்குருவி
வெண்தொண்டைக் கதிர்க்குருவி ( Lesser whitethroat ) என்பது ஒரு பறவை இனம் ஆகும். இது தென்மேற்கு மற்றும் மேற்கு மற்றும் மத்திய பேலார்டிக் தவிர மிதவெப்ப மண்டல ஐரோப்பாவில் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த சிறிய குருவி வரிசை பறவையானது குளிர்காலத்தில் தெற்கே சகாரா, அரேபியா, இந்திய போன்ற பகுதிகளிக்கு வலசை போகிறது.
வெண்தொண்டைக் கதிர்க்குருவி | |
---|---|
செக் குடியரசில் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Curruca |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/CurrucaC. curruca
|
இருசொற் பெயரீடு | |
Curruca curruca (லின்னேயஸ், 1758) | |
Range of S. curruca (Compiled by: BirdLife International and Handbook of the Birds of the World (2019) 2018.) Breeding Resident Passage Non-breeding | |
வேறு பெயர்கள் | |
Motacilla curruca L, 1758
|
பாலினங்களுக்கு இடையில் வேறுபாடு என்பது கிட்டத்தட்ட இல்லை. இதன் முதுகு சாம்பல் நிறத்திலும், அடிப்பகுதி வெண்மையாகவும், கண்கள் வழியாக "கொள்ளைக்கார முகமூடி" போன்ற கருந்திட்டும் செல்லும். தொண்டை வெள்ளையாகவும், தலை சாம்பல் நிறத்திலும் இருக்கும் ஒரு சிறிய இனமாகும். இது சாதாரண கதிர்க்குருவியை விட சற்று சிறியது, மேலும் அந்த இனத்திற்கே உரிய கஷ்கொட்டை இறக்கைகள் மற்றும் ஒரே மாதிரியான தலை-முக நிற அமைப்பு இல்லை. வெண்தொண்டைக் கதிர்க்குருவி சில வினாடிகளுக்கு ஒருமுறை டெக்...டெக்....டெக் என குரல் கொடுக்கும்.
பெரும்பாலான கதிர்குருவிகளைப் போல, இது ஒரு பூச்சியுண்ணி, ஆனால் சிறு பழங்கள் மற்றும் பிற மென்மையான பழங்களையும் உண்ணும். இது சமவெளிகளிலும் மற்றும் சாகுபடி நிலப்பகுதிகளிலும் காணப்படும் பறவையாகும். பெரிய புதர்கள் மற்றும் சில மரங்களில் கூடு கட்டுகிறது. மூன்று முதல் ஏழு முட்டைகளை இடும்.
வகைபிரித்தல்
தொகுவெண் தொண்டைக் கதிர்க்குருவியில் ஐந்து துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, மேலும் இவை மத்திய ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் காணப்படுகின்றன:
- Curruca curruca curruca - வெஸ்டர்ன் லெசர் வைட்த்ரோட் - வாழிடப்பகுதியின் மேற்கு பகுதிகள்
- Curruca curruca blythi - வடகிழக்கு சிறிய வெண்தொண்டைக் கதிர்க்குருவி - இவற்றின் வாழிடப்பரப்பின் கிழக்கு பகுதிகளில் காணப்படுகிறது.
- Curruca curruca althaea – ஹியூமின் வெண்தொண்டை – ஈரான், தெற்கு துர்க்மெனிஸ்தான் முதல் வடக்கு பாகிஸ்தான் மற்றும் மத்திய ஆசியா வரை
- Curruca curruca minula - தெற்கு கசகஸ்தான் முதல் மேற்கு சீனா வரை
- Curruca curruca margelanica - வடக்கு சீனா
காட்சியகம்
தொகு-
குசராத்தின் இராச்கோட்டில் வெண்தொண்டைக் கதிர்க்குருவி
-
இராச்கோட்டில் வெண்தொண்டைக் கதிர்க்குருவி
-
முட்டை
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2012). "Curruca curruca". IUCN Red List of Threatened Species 2012. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22734992A155625468.en. https://www.iucnredlist.org/species/22734992/155625468. பார்த்த நாள்: 21 October 2022.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Sylvia curruca தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கியினங்களில் Sylvia curruca பற்றிய தரவுகள்
- Avibase[தொடர்பிழந்த இணைப்பு]
- Feathers of the lesser whitethroat (Sylvia curruca) பரணிடப்பட்டது 2018-03-04 at the வந்தவழி இயந்திரம்