வெள்ளருக்கம் பாளையம் பாறை ஓவியங்கள்

வெள்ளருக்கம் பாளையம் பாறை ஓவியங்கள் என்பன, கோயம்புத்தூருக்கு சற்றுத் தொலைவில் அமைந்துள்ள வெள்ளெருக்கம் பாளையம் என்னும் ஊரில் உள்ள கருமலை அல்லது வேட்டைக்காரன்மலை என அழைக்கப்படும் மலைப் பகுதியில் உள்ள பாறைகளில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்களைக் குறிக்கும். இங்கு, விலங்குகள், பிராணிகள், மனிதர்கள் போன்ற உருவங்கள் வரையப்பட்டுள்ளன.

ஓவியங்கள்

தொகு

இங்குள்ள ஓவியங்களில், வேட்டைக் காட்சிகள், நடனக் காட்சிகள் என்பனவும் அடங்குகின்றன. ஓர் ஓவியத்தில் ஏழு மனித உருவங்கள் கைகோர்த்தபடி நிற்கும் காட்சி காணப்படுகிறது. இவ்வுருவங்களின் தலையில் தலைப்பாகை போல் வரையப்பட்டுள்ளதால் இவை ஆண்களின் உருவமாக இருக்கலாம் எனவும், இது ஒரு நடனக் காட்சியைக் குறிப்பதாகவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[1] இன்னோர் ஓவியத்தில், குதிரைமீது அமர்ந்திருக்கும் மனித உருவம் காணப்படுகிறது. அம்மனிதனின் இடது கை கடிவாளத்தைப் பிடித்திருப்பதுபோல் இருக்க, உயர்த்திய வலதுகையில் ஈட்டி போன்ற ஆயுதம் எறிவதற்குத் தயாராக இருப்பதுபோல் காட்டப்பட்டுள்ளது.[2] யானைகளும், யானையின் மீது மனிதன் அமர்ந்திருப்பது போன்ற காட்சிகளும் இங்கே உள்ளன.[3]

காலம்

தொகு

பெருங்கற்காலத்தைச் சேர்ந்தனவாகக் கருதப்படும் இவ்வோவியங்கள், கி.மு 500 ஆண்டுக் காலப்பகுதியைச் சேர்ந்தவையாக இருக்கக்கூடும் என்பது சில ஆய்வாளர்களின் கருத்தாகும்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. பவுன்துரை, இராசு., 2001, பக். 86, 87.
  2. பவுன்துரை, இராசு., 2001, பக். 89.
  3. பவுன்துரை, இராசு., 2001, பக். 90.
  4. பவுன்துரை, இராசு., 2001, பக். 91.

உசாத்துணைகள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு