வெள்ளை வயிற்று மரங்கொத்தி
வெள்ளை வயிற்று மரங்கொத்தி | |
---|---|
D. j. hodgsonii | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பிசிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | டிரையோகோபசு
|
இனம்: | டி. ஜாவென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
டிரையோகோபசு ஜாவென்சிசு கோர்சூபீல்டு, 1821 | |
துணையினம் | |
உரையினைப் பார்க்கவும் |
வெள்ளை-வயிற்று மரங்கொத்தி அல்லது பெரிய கருப்பு மரங்கொத்தி (White-bellied woodpecker)(டிரையோகோபசு ஜாவென்சிசு) என்பது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியா உட்பட வெப்பமண்டல ஆசியாவின் பசுமையான காடுகளில் காணப்படுகிறது. இது 14 துணையினங்களைக் கொண்டுள்ளது. அந்தமான் மரங்கொத்தி (டிரையோகோபசு ஹோட்ஜி ) முன்னர் இதன் துணையியினமாகக் கருதப்பட்ட குழுவில் ஒன்று. இத்தீவுகளில் காணப்படும் பல துணையினங்கள் அழிவிற்கு உள்ளாகும் ஆபத்தில் உள்ளன. சில அழிந்துவிட்டன. வெள்ளை நிறத்தின் பரவல் மற்றும் உருவ அளவு ஆகியவற்றில் இவை வேறுபடுகிறது. இவை ஆசிய மரங்கொத்திகளில் மிகப்பெரியவை. பெரிய பட்டுப்போன மரங்களில் கூடு கட்டுகின்றன. பெரும்பாலும் இக்கூடுகளை ஆறுகளுக்கு அருகில் உள்ள மரங்களில் அமைக்கின்றன. சிறிய மரங்கொத்திகளை விட அவற்றின் ஒலி அளவு அதிகமாக உள்ளது.
விளக்கம்
தொகுஇந்த சிற்றினம் மரங்கொத்தி உயிரினங்களில் மிகப்பெரிய ஒன்றாகும். முதிர்ச்சியடைந்த மரங்கொத்தி 40 முதல் 48 cm (16 முதல் 19 அங்) வரை இருக்கும். ஆசிய மரங்கொத்தி இனங்களில் பெரிய ஸ்லேட்டி மரங்கொத்திக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இது உள்ளது. இந்த சிற்றினம் வடக்கு கருப்பு மரங்கொத்தி மற்றும் வட அமெரிக்க பைலேட்டட் மரங்கொத்தி ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. உடல் நிறை 197 முதல் 350 g (6.9 முதல் 12.3 oz) வரை மாறுபடும். நிலையான அளவீடுகளில், இறக்கை நாண் 20.5 முதல் 25.2 cm (8.1 முதல் 9.9 அங்) இருக்கும்; வால் 14.3 முதல் 18.9 cm (5.6 முதல் 7.4 அங்) வரையும், அலகு 4.6 முதல் 6 cm (1.8 முதல் 2.4 அங்) வரையும் கணுக்கால் எலும்பு 3.2 முதல் 4.3 cm (1.3 முதல் 1.7 அங்) வரை உள்ளது.[2]
ஹோட்ஜ்சோனி என்ற துணையினமானது வெண்மையான கீழ் இறக்கை மறைப்புக்களையும், பின்தொடைப் பகுதியினையும் கொண்டுள்ளது. முகத்தில் வெண்மை இல்லை, ஆனால் பரிந்துரைக்கப்பட்ட இனத்தில் இளம் பறவையின் தொண்டைப்பகுதியில் வெள்ளைக் கோடுகள் காணப்படும். இந்தச் சிற்றினத்தின் குரல் மற்றும் உருவ அமைப்பு மற்ற தென்கிழக்கு ஆசியத் துணையினங்களிலிருந்து வேறுபடுகிறது. இதனால் இதனைச் சிற்றினங்கள் நிலைக்கு உயர்த்தும் அளவுக்கு பெரியதாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. தனிமையில் இருக்கும் முதிர்ச்சியடைந்த மரங்கொத்திகள் ஒரு மணி நேரம் கால அளவிற்கு உணவு தேடலாம்.[3] இந்தியாவின் கிளையினங்களான ஹோட்ஜ்சோனி சனவரி முதல் மே வரை, முக்கியமாக பெரிய காய்ந்து பட்டுப்போன மரங்களில் இனப்பெருக்கம் செய்கிறது. பெரும்பாலும் ஆண்டுதோறும் ஒரே மரத்தைப் பயன்படுத்துகிறது.[4] பொதுவாகக் கூடுகளில் இரண்டு முட்டைகள் காணப்படும்.[5] இவை முக்கியமாக எறும்புகள்[6] அல்லது மரப்பட்டையின் அடியில் காணப்படும் பூச்சிகளை உண்கின்றன. ஆனால் சில சமயங்களில் பழங்களை எடுத்துக்கொள்கின்றன.[7] மனித நடமாட்ட பகுதிகளுக்கு வருவதை இவை குறைத்துக்கொண்டால், நன்கு பயன்படுத்தப்பட்ட தடங்கள் மற்றும் மனிதர்கள் தொந்தரவு செய்யும் பகுதிகளுக்கு அருகில் கூடு கட்டவும் இவற்றால் முடியும்.[4][8] இவை குறுகிய, கூர்மையான குக் முதல் அதிக குயிக், கீவ், கீ-யோவ் என ஒலி எழுப்பும். நீண்ட ஒலி அழைப்புகளைப் பறக்கும் முன் எழுப்பும்.[3]
துணை இனங்கள்
தொகுபதினான்கு கிளையினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன:
- டி. ஜா. ஜாவென்சிசு (ஹார்ஸ்ஃபீல்ட், 1821) (தெற்கு தாய்லாந்து முதல் போர்னியோ வரை)
- டி. ஜா. பிலிப்பினென்சிசு (ஸ்டீயர், 1890) (பிலிப்பைன்ஸ்; பரிந்துரைக்கப்பட்ட கிளையினங்களில் அடிக்கடி உட்படுத்தப்படுகிறது)
- டி. ஜா. செபுயென்சிசு கென்னடி, 1987 (செபு தீவு); 1950 களில் இருந்து காணப்படவில்லை மற்றும் அழிந்திருக்கலாம்
- டி. ஜா. கன்பூசசு (ஸ்ட்ரெஸ்மேன், 1913) (லூசோன்; எஸ்த்லோடெரஸை உள்ளடக்கியது (பார்க்சு, 1971))
- டி. ஜா. ஃபெடெனி (பிளைத், 1863) (தாய்லாந்து, லாவோசு மற்றும் பர்மா)
- டி. ஜா. பாரெசுடி உரோத்சைல்ட், 1922 (வடக்கு மியான்மர் மற்றும் சிச்சுவான், சீனா)
- டி. ஜா. ஹர்கிட்டி (ஷார்ப், 1884) (பலவான்)
- இந்திய வெள்ளை வயிற்று மரங்கொத்தி டி. ஜா. ஹோட்ஜ்சோனி (ஜெர்டன், 1840) (முக்கியமாக இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள், ஆனால் மத்திய இந்தியா [9] மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்தும் அறியப்படுகிறது) [10]
- டி. ஜா. மைண்டோரென்சிசு (ஸ்டீயர், 1890) (மின்டோரோ)
- டி. ஜா. மல்டிலுனாடசு (மெக்ரிகோர், 1907) (பசிலன், தினகட், மிண்டனாவ்)
- டி. ஜா. பர்வசு (ரிச்மண்ட், 1902) (சிமுலூ தீவு)
- டி. ஜா. பெக்டோரலிசு (ட்வீடேல், 1878) (சமர், போஹோல் மற்றும் பிற தீவுகள்)
- டி. ஜா. ரிச்சர்ட்சி (டிரிஸ்ட்ராம், 1879) (டிரிஸ்ட்ராம் மரங்கொத்தி ; வட கொரியாவில் மட்டுமே காணப்படுகிறது, தென் கொரியா மற்றும் சுஷிமா, ஜப்பானில் அழிந்து விட்டது)
- டி. ஜா. சுலுயென்சிசு (டபுள்யூ. பிளாசியசு, 1890) (சுலு)
அந்தமான் மரங்கொத்தி (டிரையோகோபசு ஹோட்ஜி) கடந்த காலத்தில் ஒரு துணையினமாகக் கருதப்பட்டது. இந்த சிற்றினம் கடந்த காலத்தில் திரிபோனாக்ஸ் மற்றும் மேக்ரோபிகஸ் இனத்தில் வைக்கப்பட்டது.[11]
நடத்தை மற்றும் சூழலியல்
தொகுஇந்த பெரிய கருப்பு மரங்கொத்தி பொதுவாக தனித்தனியாகவோ அல்லது இணையாகவோ காணப்படும். சில சமயங்களில் மூன்றாவதாக ஒரு மரங்கொத்தியும் சேர்ந்து இருக்கலாம். இவை சத்தமாக ஒலி எழுப்பும். இவை குறிப்பாக இனப்பெருக்க காலத்தில் உரத்த ஒலியினை எழுப்புகின்றன. இனப்பெருக்க காலம் முக்கியமாக சனவரி முதல் மார்ச் வரை உள்ளது. கூட்டினை பெரிய பட்டுப்போன மரத்தில் கட்டுகின்றன. இரண்டு வெள்ளை முட்டைகள் கொண்ட கூடுகள் வழக்கமாகக் காணப்படும். மத்திய இந்தியாவில் உள்ள பஸ்தரில், பழங்குடியினரால் குஞ்சுகள் வேட்டையாடப்படுகின்றன. இதன் விளைவாக இந்த பறவைகள் இங்கு அரிதாகவே காணப்படுகின்றன.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Dryocopus javensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22681376A92903645. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22681376A92903645.en. https://www.iucnredlist.org/species/22681376/92903645. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Woodpeckers: An Identification Guide to the Woodpeckers of the World by Hans Winkler, David A. Christie & David Nurney.
- ↑ 3.0 3.1 Short, L.L. (1973). "Habits of some Asian Woodpeckers (Aves, Picidae)". Bull. Am. Mus. Nat. Hist. 152: 253–364.
- ↑ 4.0 4.1 Santharam, V. (2003). "Distribution, ecology and conservation of the White-bellied Woodpecker Dryocopus javensis in the Western Ghats, India". Forktail 19: 31–38. http://www.orientalbirdclub.org/publications/forktail/19pdfs/Santharam-Woodpecker.pdf.
- ↑ Kinloch, A.P. (1923). "The nidification of the Malabar Great Black Woodpecker Thriponax hodgsoni". J. Bombay Nat. Hist. Soc. 29 (#2): 561. https://biodiversitylibrary.org/page/47865098.
- ↑ Abdulali, Humayun (1941). "The Great Black Woodpecker in the neighbourhood of Bombay". J. Bombay Nat. Hist. Soc. 42 (#4): 933–934. https://biodiversitylibrary.org/page/47858528.
- ↑ Santharam, V. (1999). "Frugivory by the Great Black Woodpecker Dryocopus javensis". J. Bombay Nat. Hist. Soc. 96 (#2): 319–320.
- ↑ Neelakantan, K.K. (1975). "A day at a nest of the Great Black Woodpecker (Dryocopus javensis)". J. Bombay Nat. Hist. Soc. 72 (#2): 544–548. https://biodiversitylibrary.org/page/48287700.
- ↑ Ali, S. (1951). "Discovery of the so-named 'Malabar' Black Woodpecker [Dryocopus javensis hodgsoni (Jerdon) in Bastar (East Madhya Pradesh)"]. J. Bombay Nat. Hist. Soc. 49 (#4): 787–788. https://biodiversitylibrary.org/page/48182351.
- ↑ Ralph Camroux Morris (1939). "On the occurrence of the Banded Crake (Rallus e. amuroptera) and the Malabar Woodpecker (Macropicus j. hodgsoni) in the Billigirirangan Hills, S. India". J. Bombay Nat. Hist. Soc. 40 (#4): 763. https://biodiversitylibrary.org/page/47591982.
- ↑ 11.0 11.1 Ali, S.; S.D. Ripley (1983). Handbook of the Birds of India and Pakistan Volume 4 (2nd ed.). Oxford University Press. pp. 208–210.