அந்தமான் மரங்கொத்தி
அந்தமான் மரங்கொத்தி | |
---|---|
ஆண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பிசிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | டிரையோகோபசு
|
இனம்: | டி. ஹோட்ஜி
|
இருசொற் பெயரீடு | |
டிரையோகோபசு ஹோட்ஜி பிளைத், 1939 |
அந்தமான் மரங்கொத்தி (Andaman woodpecker)(டிரையோகோபசு ஹோட்ஜி) என்பது மரங்கொத்தி குடும்பமான பிசிடேயில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது இந்தியாவில் உள்ள அந்தமான் தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
வகைப்பாட்டியல்
தொகுஅந்தமான் மரங்கொத்தி 1860ஆம் ஆண்டில் எட்வர்ட் பிளைத்தால் முல்லேரிபிகசு ஹோட்ஜி என்று விவரிக்கப்பட்டது. குறிப்பிட்ட சிற்றினப் பெயரான ஹோட்ஜி என்பது அந்தமான் தீவுகளில் அப்போது முகாமிட்டிருந்த அரச கடற்படையின் தலைவர் எஸ். ஹோட்ஜியின் பெயராகும்.[2] இந்தச் சிற்றினம் ஒரு காலத்தில் வெள்ளை-வயிற்று மரங்கொத்தியின் துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் இதன் தோற்றத்திலும் இதன் அழைப்புகளிலும் வேறுபடுகிறது.[3] இரண்டு சிற்றினங்களின் பிரிப்பு மரபணு சான்றுகளால் ஆதரிக்கப்படுகிறது.[4]
விளக்கம்
தொகுஅந்தமான் மரங்கொத்திக்கு சுமார் 38 cm (15 அங்) நீளம் வரை வளரக்கூடியது. இது 156–255 g (5.5–9.0 oz) வரை எடை கொண்டது . இறகுகள் பெரும்பாலும் கரும்-சாம்பல் முதல் கருப்பு வரை, பிரகாசமான சிவப்பு முகட்டுடன் காணப்படும். ஆணுக்குச் சிவப்பு கொண்டை மற்றும் கண்ணின் கீழ் மலார் பகுதியும் உள்ளது. கண்ணைச் சுற்றியுள்ள வெற்று தோல் சாம்பல் நிறமாகவும், கால்கள் வெளிர் நிறமாகவும், அலகு கருப்பு நிறமாகவும் காணப்படும். கருவிழிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இளவயதுப் பறவைகள் முதிர்ச்சியடைந்த பறவைகள் போலத் தோற்றமளிக்கின்றன. ஆனால் பழுப்பு நிற, மந்தமான இறகுகள் மற்றும் பழுப்பு நிற கண்கள் மற்றும் கொண்டை இறகுகளுடன் இருக்கலாம்.[3]
நடத்தை
தொகுஅந்தமான் மரங்கொத்தியின் நடத்தை பற்றி அதிகம் பதிவு செய்யப்படவில்லை. இது இணைகளாக வாழ்கிறது. சிறிய மந்தைகளாகவும் கூடுகிறது. இது பெரிய தண்டுகள் மற்றும் கிளைகளில் உணவு தேடுகிறது. ஆனால் எறும்புகளை உண்ணத் தரையில் உணவு தேடுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் இனப்பெருக்கம் செய்கிறது. மேலும் 6–14 m (20–46 அடி) வரையுள்ள மரப்பொந்து கூடுகளிலும் இனப்பெருக்கம் செய்கிறது. இரண்டு முட்டைகள் வரை இடுகின்றன.[3]
வாழ்விடம் மற்றும் அச்சுறுத்தல்கள்
தொகுஅந்தமான் மரங்கொத்தி அந்தமான் தீவுகளில் மட்டுமே காணக்கூடியது. இது தாழ்வான பகுதிகளில் உள்ள மழைக்காடுகளில் காணப்படுகிறது. அந்தமான் தீவுகளில் மனித மக்கள்தொகை அதிகரித்து விவசாயத்திற்காகக் காடுகளை அழிப்பதால், வாழ்விடத்தை இழந்து அச்சுறுத்தப்படுகின்றன.[3] இந்த அச்சுறுத்தல் காரணமாக, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதனை அழிவாய்ப்பு இனமாக மதிப்பிட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 BirdLife International (2017). "Dryocopus hodgei". IUCN Red List of Threatened Species 2017: e.T22681379A118582685. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22681379A118582685.en. https://www.iucnredlist.org/species/22681379/118582685. பார்த்த நாள்: 17 November 2021.
- ↑ Jobling, J. A. (2018).
- ↑ 3.0 3.1 3.2 3.3 Winkler, H., Christie, D.A. & Sharpe, C.J. (2019).
- ↑ Winkler, H; Gamauf, A; Nittinger, F; Haring, E (2014). "Relationships of Old World woodpeckers (Aves: Picidae) — new insights and taxonomic implications". Annalen des Naturhistorischen Museums in Wien. Serie B für Botanik und Zoologie 116: 69–86. https://www.researchgate.net/publication/262734940.
வெளி இணைப்புகள்
தொகு- அந்தமான் பறவைகள் கண்காணிப்பு