வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்
திருமறைக்காடர் கோயில் என்பது சுந்தரர், அப்பர், சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 125ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் திருமறைக்காடர்; தாயார் வேதநாயகி ஆவர். இத்தலத்தின் தல விருட்சங்கள் வன்னிமரம் மற்றும் புன்னைமரமாகும். வேததீர்த்தம், மணிகர்ணிகை தீர்த்தம் ஆகியவை இத்தலத்தில் உள்ளன.
தேவாரம் பாடல் பெற்ற வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 10°22′31″N 79°51′00″E / 10.3752°N 79.8500°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | ஆதிசேது, தென் கயிலாயம் , பரமயானம், ஞானபூமி, திருமறைக்காடு |
பெயர்: | வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | வேதாரண்யம் |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்), வேதவனநாதர் |
தாயார்: | வேதநாயகி, யாழைப்பழித்த மென்மொழியம்மை, விணாவாதவிதூஷணி |
தல விருட்சம்: | வன்னிமரம், புன்னைமரம் |
தீர்த்தம்: | வேததீர்த்தம் (எதிரிலுள்ள கடல்), மணிகர்ணிகை |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சுந்தரர், அப்பர், திருஞானசம்பந்தர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | தமிழர் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
கல்வெட்டுகள்: | 98 சோழர்கால கல்வெட்டுகள், 2 விஜயநகரப் பேரரசு கால கல்வெட்டுகள், 1 மராட்டியர் கால கல்வெட்டு. |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
இத்தலம் தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் பழங்காலத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 45 மீட்டர் உயரத்தில், 10°22′31″N 79°51′00″E / 10.3752°N 79.8500°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, திருமறைக்காடர் கோயில் அமையப் பெற்றுள்ளது.[1]
ஏழு விடங்கத் தலங்களில் ஒன்றாக உள்ள தலமிது. கோயில் திருவிளக்கை நன்கு எரியும் வகையில் தூண்டிய எலி மறுபிறப்பில் மகாபலிச் சக்கரவர்த்தியாக பிறக்கும் படி இறைவன் அருளிய திருத்தலம்.
இத்தலத்தின் தியாகராஜர் புவனி விடங்கர் என்றும் அவரது நடனம் ஹம்சபாத நடனம் என்றும் இங்குள்ள நடராஜ சபை தேவ சபை என்றும் அறியப்படுகிறது.[1] "வேதாரண்யம் விளக்கழகு" என்று இக்கோயிலுக்குப் பெருமை உண்டு.
வழிபட்டோர்
தொகுஇத்தலம் அகத்தியர், வசிஷ்டர், கௌதமர், விசுவாமித்திரர், நாரதர், மாந்தாதா, முசுகுந்த சக்கரவர்த்தி, ஸ்ரீராமர் ஆகியோரால வழிபடப்பட்டதாகும்.
தல புராணம்
தொகுஇந்து சமய வேதங்களான சதுர் வேதங்கள் என்று அழைக்கப்பெறும் ரிக், யசூர்,சாம, அதர்வண வேதங்கள் நான்கும் மனித உருவம் கொண்டு இத்தலத்தில் இருக்கும் இறைவனை பூசை செய்து வந்தன. கலியுகம் தொடங்கும் தருவாயில் சிவபெருமான் பூமியில் இருப்பது அவருக்கு உகந்தல்ல என்று எண்ணிய வேதங்கள், அவரிடம் கைலாயம் செல்லுமாறு கூறி, இத்தலத்தின் கதவினையும் அடைத்துவிட்டு சென்றன.
நெடுங்காலமாக மூடப்பட்டிருந்த கதவினை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரம் பாடி திறந்து வைத்தனர்.
சிந்தாமணி விநாயகர்
தொகுசிந்தாமணி விநாயகர் எனும் பெயர் சிந்தாமணி எனும் மணியைத் தரித்துக் கொண்டதால் ஏற்பட்டதாகும். அபிஜித் என்பவனுக்கும், குணவதி என்பவளுக்கும் பிறந்தவனான கணன் எனும் அசுரன் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றபோது சிந்தாமணியின் உதவியால் கபிலர் தனக்களித்த விருந்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு கபிலரிடமிருந்து அம் மணியைப் பறித்துக் கொண்டு வந்துவிட, கபிலர் விநாயகரை நோக்கி யாகம் புரிந்து அம் மணியை மீட்டுத்தர வேண்டினார். சித்தி, புத்தி தேவிகளுடன் சிங்க வாகனத்தில் தோன்ற விநாயகர் தனது திருக்கைப் பாசத்தினால் கணனின் சிரசை அறுத்து சிந்தாமணியை கபிலரிடம் கொடுத்தார். இதனாலேயே இவருக்கு சிந்தாமணி விநாயகர் எனும் பெயர் ஏற்பட்டது. திருமறைக் காட்டில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் சிந்தாமணி விநாயகர் ஆவார்.
கோவில்-கட்டிட அமைப்பு
தொகுவேதாரண்யம் சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. கருவறை கிழக்கே நோக்கியது. கருவறை அதனையொட்டி அர்த்தமண்டபம் மகாமண்டபம். தியாகேசர் மண்டபம் முதலியன உள்ளன. கருவறையைச் சுற்றி திருச்சுற்று மாளிகை உள்ளது. இத்திருச்சுற்றில் கருவறைக்கு நேர் கிழக்காகச் சிறிய கோபுரம் ஒன்று உள்ளது. இக்கோபுரத்தை ஒட்டி நீண்ட தூண் மண்டபம் ஒன்று உள்ளது. பின்னர் இரண்டாம் திருச்சுற்றில் வடக்கே அன்னை ஆலயமும் உள்ளது. இறுதியாகக் கோவிலைச் சுற்றி பெருமதிலும், கிழக்கும், மேற்கும் இரண்டு கோபுரமும் இருக்கின்றன. இவை தவிர பரிவார ஆலயங்களும், தீர்த்தங்களும் பிற மண்டபங்களும் ஆங்காங்கு உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; பக்கம் 282,283
வெளி இணைப்புகள்
தொகுஇவற்றையும் பார்க்க
தொகுபடத்தொகுப்பு
தொகு-
கருவறை பின்புற ஓவியம்
-
கருவறை பின்புற ஓவியம்
-
கருவறை பின்புற ஓவியம்
-
கோயில் வாயில்
-
பிரகார ஓவியம்
-
பிரகார ஓவியம்
-
பிரகார ஓவியம்