வேள் என்னும் சொல் அரசன் பெயரோடு சேர்ந்து வந்தால் அந்த அரசனைக் கொடையாளி என உணர்ந்துகொள்ளவேண்டும். வேள் என்னும் சொல் உதவி என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. [1]

சங்கநூல்களில் குறிப்பிடப்படும் வேள் [2] தொகு

  1. வேள் ஆய் [3]
  2. வேள் எவ்வி [4]
  3. வேள்முது மாக்கள் [5]
  4. வேள்நீர் [6]
  5. வேண்மாள் [7]
  6. வேண்மான் [8]
  7. வேள்முது மாக்கள் [9]

வேள் என்னும் சிறப்புப்பெயர் பெற்ற அரசர்கள் தொகு

மேலே குறிப்பிடப்பட்ட பாடல்கள் அனளத்தையும் திரட்டிப் பார்க்கும்போது இங்குத் தரப்பட்டுள்ளவர்கள் வேள் என்னும் சிறப்புப்பெயர் பெற்றுள்ளனர் என்பது தெரியவரும்.

  1. கடவுள் முருகன் ('கடம்பமர் நெடுவேள்') [10]
  2. அகத்திணைத் தலைவன் [11]
  3. ஆய்,
  4. இருங்கோவேள் (49 வழிமுறை வந்த வேளிருள் வேள்) [12]
  5. எவ்வி,
  6. நன்னன் [13]
  7. வேள் ஆவிக்கோமான் பதுமன் (பெருஞ்சேரல் இரும்பொறையின் மாமனார்) [14]
  8. பாரி (வேள் பாரி) [15]
  9. வாட்டாற்று எழினியாதன் [16]

ஒப்புநோக்குக தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. 'தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு' என்னும் திருக்குறள் வேள் < வேளாண்மை. ஒப்புநோக்குக: தாள் < தாளாண்மை.
  2. கருவிநூல் INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE (1970) (சங்கநூல் சொல்லடைவு பெரும்பாணாற்றுப்படை 75, மதுரைக்காஞ்சி 614, பட்டினப்பாலை 154, மலைபடுகடாம் 94, 164, நற்றிணை 173, 288, குறுந்தொகை 11, ஐங்குறுநூறு 250, பதிற்றுப்பத்து 11, பதிகம் 8, பரிபாடல் 5, 8, 9, 18, 21, பரிபாடல் திரட்டு 12, அகநானூறு 22, 382, புறநானூறு 6,
  3. புறநானூறு 24, 133, 135,
  4. புறநானூறு 24,
  5. அகநானூறு - 372,
  6. கலித்தொகை 23,
  7. பதிற்றுப்பத்து பதிகம் 2, 9,புறநானூறு 372,
  8. புறநானூறு 395,
  9. அகநானூறு 372,
  10. பெரும்பாணாற்றுப்படை 75
  11. நற்றிணை 173
  12. புறநானூறு 201
  13. மலைபடுகடாம் 164
  14. பதிற்றுப்பத்து பதிகம் 8
  15. புறநானூறு 105
  16. புறநானூறு 396
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேள்&oldid=3407444" இலிருந்து மீள்விக்கப்பட்டது