திருவைகல் வைகல்நாதர் கோயில்

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
(வைகல்நாதர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில் (Tiruvaikal Vaikalnathar Temple) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கும்பகோணம்-காரைக்கால் சாலையில் திருநீலக்குடி தாண்டி பழியஞ்சிய நல்லூருக்கு அருகில் 2 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. வைகல் மாடக்கோயில் அல்லது வைகல்நாதர் கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோயில் தமிழ்நாடு மாநிலத்தின் சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 33ஆவது சிவத்தலமாகும்.[1]

தேவாரம் பாடல் பெற்ற
திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில்
திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில் is located in தமிழ் நாடு
திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில்
திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில்
வைகல்நாதர் கோயில், வைகல், மயிலாடுதுறை, தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று:10°59′05″N 79°30′58″E / 10.9846°N 79.5162°E / 10.9846; 79.5162
பெயர்
புராண பெயர்(கள்):திருவைகல்
பெயர்:திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:வைகல்
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வைகல் நாதர்
(சண்பகாரண்யேசுவரர்)
தாயார்:வைகலாம்பிகை
(சாகாகோமளவல்லி)
(கொம்பியல் கோதை)
தல விருட்சம்:சண்பகம்
தீர்த்தம்:சண்பக தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:மாடக்கோயில்

அமைவிடம்

தொகு

இச் சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

வரலாறு

தொகு

ஆரம்பகால சோழ மன்னர் கோச்செங்கண்ணனால் கட்டப்பட்ட மூன்று முக்கிய கோயில்களில் திருவைகல் வைகல்நாதர் திருக்கோயிலலும் ஒன்றாகும் என்று நம்பப்படுகிறது.[2] இக்கோயில் பற்றிய குறிப்புகள் தேவாரம் மற்றும் திருவாசகம் ஆகியவற்றில் காணப்படுவது இக்கோவிலின் சிறப்பாகும். இறைவன் சிவபெருமான் செண்பகா ஆரண்யேசுவரரின் வடிவத்தில் காட்சியளிக்கிறார். இவரது துணைவியாக கொம்பியல் கோதை எனப்படும் சாகா கோமளவள்ளி வீற்றிருக்கிறார்.

அமைப்பு

தொகு
மூலவர், அம்மன் விமானம்

வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறம் விநாயகர் உள்ளார். வெளி திருச்சுற்றில் வலப்புறம் அம்மன் சன்னதியும், இடப்புறம் சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளன. காலபைரவரும், சனி பகவானும் உள்ளனர். கோயில் சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது. மூலவருக்கு எதிராக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. வெளியே வலப்புறம் விநாயகர் உள்ளார். மூலவருக்கு முன்பாக நந்தி உள்ளது.

கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி மட்டும் உள்ளார். திருச்சுற்றில் விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதி, ஸ்ரீதேவி பூதேவியுடன் கூடிய பெருமாள் சன்னதி, கஜலட்சுமி சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன.

இறைவன், இறைவி

தொகு

இத்தலத்து இறைவன் வைகல்நாதர், இறைவி வைகலாம்பிகை.

வழிபட்டோர்

தொகு

பிரமன் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). லட்சுமி தேவியார் வழிபட்ட தலம்.

பிற கோயில்கள்

தொகு

இதே ஊரில், திருமால் வழிபட்ட விசுவநாதர் கோயில் மற்றும் பிரமன் வழிபட்ட பிரமபுரீசுவரர் கோயில் ஆகிய திருக்கோயில்களும் அமைந்துள்ளன.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Shiva temples in which Thevaaram was sung", groups.google.com, பார்க்கப்பட்ட நாள் 2024-04-13
  2. "Vaigalnathar Temple : Vaigalnathar Vaigalnathar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-15.

புற இணைப்புக்கள்

தொகு