வைத்தியநாதசுவாமி சந்தானம்

முனைவர் வைத்தியநாதசுவாமி சந்தானம் (Vaidhyanathaswamy Santhanam)(பிறப்பு: ஜூலை 31, 1925) இந்தியப் பருத்தி விஞ்ஞானி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உணவு மற்றும் வேளாண் அமைப்பின், பருத்தியின் நீண்டகால நிபுணர் மற்றும் மியான்மரின் திட்டத் தலைவர். இவர் வியட்நாமில் குறுகிய கால ஆலோசகராக பணியாற்றினார். நவம்பர் 2009 - மார்ச் 2010க்கான தென்னிந்தியா தொழிற்சாலை பருத்தி மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் ஆய்வுக் குழுவின் தலைவராகவும் இருந்தார். பருத்தி பற்றிய புத்தகங்கள் மற்றும் புத்தக அத்தியாயங்கள் உட்பட 110க்கும் மேற்பட்ட வெளியீடுகளின் ஆசிரியர்/இணை ஆசிரியர் நிலையில் எழுதி வெளியிட்டுள்ளார்.

வி சந்தானம்
பிறப்புவைத்தியநாதசுவாமி சந்தானம்
31 சூலை 1925 (1925-07-31) (அகவை 98)
திருவாரூர், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்தாவரப் பெருக்கம், மரபியல், பருத்தி மேம்பாடு
வாழ்க்கைத்
துணை
இராஜாம்மாள் கே
பிள்ளைகள்மகன்:மருத்துவர் ஜி.எஸ். இராமச்சந்திரன், ச. இரவி; மகள்:இலலிதா உஷா

கல்வி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சந்தானம் ஜூலை 31 1925இல் தமிழ்நாட்டில் உள்ள திருவாரூரில் பிறந்தார். 1946ஆம் ஆண்டில் கோவையில் வேளாண் கல்லூரியில் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியலில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார்.

கோயம்புத்தூர் வேளாண் கல்லூரியில் பருத்தி இனப்பெருக்கம் நிலையத்தில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தில் (ஐ.சி.ஏ.ஆர்) உடன் பருத்தி ஆராய்ச்சி அறிவியலாளராகச் சேர்ந்தார். ஐ.சி.ஏ.ஆர் (1967-75) அகில இந்திய ஒருங்கிணைந்த பருத்தி மேம்பாட்டுத் திட்டத் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருந்தார். தனது பணிக் காலத்தில், இந்தியாவின் பருத்தி சாகுபடி செய்யும் அனைத்து மாநிலங்களிடையேயும் கூட்டுறவு ஆராய்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தார். இவர் தலைமையிலான பருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, ஐ.சி.ஏ.ஆர் 1975ஆம் ஆண்டில் குழு ஆராய்ச்சிக்கான குழுமத்தின் முதல் விருதை இவரது குழுவிற்கு வழங்கியது.

முனைவர் சந்தானம் 1975 முதல் 1983 வரை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பில் பருத்தியில் நீண்டகால வதிவிட நிபுணராகவும், மியான்மரில் திட்ட குழு தலைவராகவும் பணியாற்றினார். 1984 முதல் 1987 வரை மியான்மர் மற்றும் வியட்நாமில் குறுகிய கால ஆலோசகராக (மூத்த ஆலோசகராக) பணியாற்றினார்.

அறிவியல் பணி தொகு

இந்தியப் பருத்தி இனப்பெருக்கம் திட்டத்தில் உற்பத்தித்திறன் மற்றும் ஆரம்ப முதிர்ச்சியை அதிகரிப்பதற்கான சிறந்த பருத்தி பயிர் வகை என்ற கருத்தை அறிமுகப்படுத்தினார் சண்முகம். இது இந்தியாவில் நீண்ட காலமாகப் பிரதான பருத்தி வகைகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காக இருந்தது. ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் பருத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்காக மியன்மாரில் மேம்பட்ட வேளாண் நடைமுறைகள் செயல்படுத்தி 1975-1982 காலகட்டத்தில் பருத்தி உற்பத்தியினை 50% அதிகரித்தார். இதற்கான இவரது சேவையினை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் பொது இயக்குநர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

முக்கிய வெளியீடுகள் தொகு

  1. பருத்தி இனப்பெருக்க நடைமுறைகள் (1967) ஐ.சி.ஏ.ஆர் தொழில்நுட்ப செய்தி மடல் தொடர், எண் 10.
  2. பருத்தி (1974) வயல் பயிர்களில் பரிணாம ஆய்வுகள், கேம்பிரிட்ஜ் யூனிவ். பத்திரிகை, பக். 89–100.
  3. இந்தியாவில் பருத்தி வேளாண் வரலாறு (1997) ஆசிய வேளாண் வரலாறு, 1: 4,235-251
  4. பருத்தி மேம்பாட்டிற்கான வழக்கமான இனப்பெருக்கத்தில் வளர்ந்து வரும் போக்குகள் (2004) Proc. அக. சிம்ப். யுஏஎஸ் தார்வாட் / ஐசிஏஆர் , 1–5.

விருதுகள் மற்றும் பாராட்டுகள் தொகு

  1. இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் (ஐ.சி.ஏ.ஆர்) (1967) ரஃபி அகமது கித்வாய் நினைவுப் பரிசு
  2. இந்தியன் அறிவியல் கழக உறுப்பினர் (1974).[1][2]
  3. பருத்தி மேம்பாட்டுக்கான இந்தியச் சமுகத்தின் (மும்பை) உறுப்பினர் (2002)[3]
  4. தார்வார்ட் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆயுட்கால சாதனை விருது (2004)
  5. அரியானாவின் பருத்தி மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் ஆயுட்கால சாதனை விருது (2005)

மேற்கோள்கள் தொகு

  1. (Directory of Fellows, I.A.Sc, Bangalore,2009, pp.934 vol 2 )
  2. Fellow Profile
  3. (ISCI,Care Central Institute for Research on Cotton Technology, Mumbai 2002 publication on citation for fellows)

வெளி இணைப்புகள் தொகு